எந்திரன் : சாதனை மேல் சாதனை

எந்திரன் படத்தின் தெலுங்கு உ‌ரிமையை 30 கோடிக்கு வாங்கியதாக ஒருவர் பேட்டியளித்ததும், இருவர் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி இந்த விற்பனையை நடத்தியதும் இரண்டு நாட்கள் முன்பு தெ‌ரிய வந்தது.

இதையடுத்து எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி எந்திரனின் தெலுங்குப் பதிப்பு எத்தனை கோடிக்கு விலை போகும்?

இறுதியாக கிடைத்த தகவலின்படி 33 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உ‌ரிமை வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு மொழிமாற்றுப் படம் இத்தனை பெரிய தொகைக்கு விலை போனது இந்தியாவில் இதுவே முதல்முறை.

எந்திரனின் கன்னட உ‌ரிமை 9.5 கோடிக்கு விற்பனையானதாக மற்றொரு செய்தி தெ‌ரிவிக்கிறது. இது கன்னட மெகா படங்களின் பட்ஜெட்டுக்கு சமமான தொகை.
சாதனைகள் மேலும் தொடரும் என உறுதியாகச் சொல்லலாம்.

மைசூரில் நடனப் பள்ளி துவங்குகிறார் பிரபுதேவா

கர்நாடக மாநிலம் மைசூரில் நடனப் பள்ளியைத் துவங்கவுள்ளார் நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பிரபுதேவா.



டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா இந்து படத்தின் மூலம் திடீரென நடிகர் ஆனார். நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார்.


தெலுங்கிலும், தமிழிலும் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
இப்போது அடுத்த கட்டமாக சர்வதேச நடன பள்ளி தொடங்கும் முயற்சியில் ரகசியமாக இறங்கி உள்ளாராம். இதனால் பெரும்பகுதி கவனத்தை இந்த பள்ளிக்கூடத்தின் மேல் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம்.

மைசூரில்தான் இந்த பள்ளியை அவர் தொடங்க உள்ளார். வெளிநாடுகளில் இதன் கிளைகளை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். துபாயில் உள்ள நயன்தாராவின் அண்ணனும் பிரபு தேவாவின் இந்த புரொஜெக்ட்டில் அவருக்கு உதவியாக உள்ளாராம். மைசூர்தான் பிரபுதேவாவுக்கு சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.