சிறந்த தந்தையராக அமிதாப் – ரஜினி தேர்வு!
நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஷாதி டாட்காம் இணையதளம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. My Daddy Strongest என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்
த கணிப்பு, பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவது, அவர்களின் சுதந்திரத்தை அனுமதிப்பது என்ற காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
த கணிப்பு, பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவது, அவர்களின் சுதந்திரத்தை அனுமதிப்பது என்ற காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.பாலிவுட், தென்னிந்திய சினிமா என தனித்தனியாகவே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. வாக்களித்த ஆண், பெண் இருபாலருமே, தந்தைகள் மிகுந்த புரிந்து கொள்ளலுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதில் பாலிவுட்டின் சிறந்த தந்தை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதில் சுமார் 85 ஆயிரம் பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இவர்களில் 60.6 சதவீதத்தினர் அமிதாப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ரிஷிகபூர் (13.9), தர்மேந்திரா(9.5), அனில் கபூர் (9.4) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் சிறந்த தந்தையாக தேர்வு செய்யப்பட்டார்.
வாக்களித்தவர்களில் 42 சதவீதத்தினர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
அமிதாப்புக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா நந்தா என்ற மகளும் உள்ளனர். ரஜினிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து அந்த இணையதளத்தின் வர்த்தக தலைவர் கவுரவ் ரக்ஷித் கூறுகையில், “இந்திய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கணிப்பாக இதனைப் பார்க்கிறோம். காலங்கள் என்னதான் மாறினாலும், தலைமுறைகள் தாண்டினாலும், ஒரு நல்ல தந்தைக்கான தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை” என்றார்.

Colombo Time
0 Response to "சிறந்த தந்தையராக அமிதாப் – ரஜினி தேர்வு!"
Post a Comment