ஸ்ருதி தந்த டென்ஷன்
இருமலின் வேகம் 100 கி.மீ என்று பிட் எழுதும் துணுக்கு எழுத்தாளர்கள் கூட, முருகதாஸ் இருமினால் 10 கி.மீ வேகம்தான் என்று ஜர்க் அடிப்பார்கள். அந்தளவுக்கு 'மிதவாதி' நம்ம முருகதாஸ்.அப்படிப்பட்டவரே இந்த படம் ஹாலிவுட்ல கூட பேசப்படும். அவங்களே நாம இப்படி ஒரு சப்ஜெக்ட்டை எப்படிறா யோசிக்காம விட்டோம்னு திகைப்பாங்க என்று சிலுப்பிக் கொண்டதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஆனாலும் நேரில் நின்று பேசிக்கொண்
டிருந்தார். எப்படி நம்பாமல் இருப்பது?.
டிருந்தார். எப்படி நம்பாமல் இருப்பது?.சூர்யா-ஸ்ருதி இணையும் இந்த படத்தை உதயநிதி தயாரிக்கிறார். கஜினிக்கு பிறகு நீங்களும் சூர்யாவும் இணையுற படம். எதிர்பார்ப்பு ஓவரா இருக்கும். எப்படி சமாளிக்கப் போறீங்க என்று அவர் கேட்டதாலேயே கதை விஷயத்தில் எக்கச்சக்க நேரம் எடுத்துக்கிட்டேன். கிட்டதட்ட பத்துமாசம் பாடுபட்டு உருவாக்குன கதைதான் ஏழாம் அறிவு என்கிறார் முருகதாஸ்.
ஸ்ருதி எப்படி? என்றால் அவரையும் சேர்த்து இந்த படத்துக்கு இரண்டு ஹீரோ என்ற முருகதாஸ், ஸ்ருதி கொடுத்த டென்ஷனையும் பகிர்ந்து கொண்டார் பேச்சோடு பேச்சாக. இந்த கதையை உருவாக்கி முடிச்சதும் கண்முன்னே நின்றது ஸ்ருதிதான். இந்த படத்தில நடிக்கணும்னு அவருகிட்ட கேட்டப்போ, பார்க்கலாம்னாரு. ஆனால் பதில் சொல்ல சில நாட்கள் ஆயிருச்சு. அதுக்குள்ளே வேறு ஹீரோயினை பார்க்கலாமா என்று யோசிச்சேன். அப்பவும் ஸ்ருதி முகம்தான் கண்ணுக்கு முன்னே நின்னுச்சு.
நல்லவேளையாக எஸ் சொல்லிட்டாங்க என்று முருகதாஸ் சொன்னது ஸ்ருதிக்கே ஓவராக பட்டிருக்கலாம். தலைகுனிந்து கொண்டார்!
ஐந்தறிவு மிருகத்தை விட ஒரு அறிவு எக்ஸ்ட்ரா இருப்பதால்தான் அவன் மனுஷன். அவனுக்கு இன்னும் ஒரு அறிவு கூடுதலா இருந்தா எப்படியிருக்கும். அதுதான் இந்த கதை என்ற முருகதாஸ், இதற்காக மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்திருப்பதை பார்த்தால் அந்த செவன்த் சென்ஸ் மனிதர் அவரேதான் போலிருக்கிறது.
ஐந்தறிவு மிருகத்தை விட ஒரு அறிவு எக்ஸ்ட்ரா இருப்பதால்தான் அவன் மனுஷன். அவனுக்கு இன்னும் ஒரு அறிவு கூடுதலா இருந்தா எப்படியிருக்கும். அதுதான் இந்த கதை என்ற முருகதாஸ், இதற்காக மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்திருப்பதை பார்த்தால் அந்த செவன்த் சென்ஸ் மனிதர் அவரேதான் போலிருக்கிறது.
Colombo Time
0 Response to "ஸ்ருதி தந்த டென்ஷன்"
Post a Comment