ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு இதய ஆபரேஷன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று இதய ஆபரேஷன் செய்யப்பட்டது.ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதியினருக்கு கதிஜா (வயது 14), ரஹீமா (11) என இரண்டு மகள்களும், ஆமீன் (5) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் ரஹீமாவுக்கு இருதயத்தில் சில பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்ட அவரை, சில தினங்களுக்கு மு
ன் மும்பை பாந்த்ராவில் உள்ள ஆசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த புதன்கிழமை இரவு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை வேகமாக தேறி வருகிறது.
ன் மும்பை பாந்த்ராவில் உள்ள ஆசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த புதன்கிழமை இரவு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை வேகமாக தேறி வருகிறது.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், "கடந்த மூன்று இரவுகளாக நான் ஒரு தந்தைக்குரிய கடமைகளை மகளின் உடனிருந்து கவனித்துக் கொண்டேன். இசை உள்ளிட்ட எல்லாவற்றையும் மறந்து மகளுடன் இருந்தேன். என் மகளுக்காக பிரார்த்தனை செய்ததற்காகவும், அவள் விரைவில் நலம்பெற வாழ்த்தியதற்காகவும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் ஆத்மார்த்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
Colombo Time
0 Response to "ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு இதய ஆபரேஷன்"
Post a Comment