பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : நயன்தாரா
ஹீரோயின்களை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிகளில் டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இது சரியில்லை. பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் நயன்தாரா.
தமிழில் சுத்தமாகப் படங்களே இல்லை இவருக்கு. ஒரு மலையாளப் படத்திலும், கன்னடப் படத்திலும் நடிக்கிறார். இந் நிலையில் சினிமாவில் பெண்களின் நிலை குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளார் நயன்.
அவர் அளித்த பேட்டியில்,
"உச்சகட்ட நாயகியாக இருந்துவிட்டேன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நாயகியாக இருந்தவள் நான். இப்போது மலையாளத்தில் கவனம் செலுத்துகிறேன்.
பொதுவாக கமர்ஷியல் படங்களின் ஊறுகாய் அளவுக்குதான் நாயகிகளின் பங்களிப்பு உள்ளது. இது தவறு. இனியாவது, பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற பாத்திரங்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். வெறுமனே மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது மட்டுமே ஹீரோயின் வேலை என்றாகிவிட்டது. இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்" என்றார்.
Colombo Time
0 Response to "பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : நயன்தாரா"
Post a Comment