மீண்டும் சித்தார்த்
பாய்ஸ்’ படத்தில் நடித்த சித்தார்த் அதன் பின்பு தெலுங்குக்குப் போய்விட அங்கு கிடைத்த வரவேற்பினார் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார்.இப்போது கைவசம் ஏராளமான படங்களுடன் இருக்கும் சித்தார்த் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
‘திரு திரு துறு துறு’ படத்தை தயாரித்த சத்யம் சினிமாஸ் நிறுவனமும் ரியல் இமேஜ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கி
றார்கள். ஜெயந்த்ரா என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து சுமார் 500 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் இப்போது பெரிய திரையில் இயக்குநராக விஸ்வரூபம் எடுக்கிறார்.
இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பவர் ப்ரியா ஆனந்த். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் தயாரிப்புத் தரப்பு.
றார்கள். ஜெயந்த்ரா என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து சுமார் 500 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் இப்போது பெரிய திரையில் இயக்குநராக விஸ்வரூபம் எடுக்கிறார்.இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பவர் ப்ரியா ஆனந்த். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் தயாரிப்புத் தரப்பு.
ஜூலை மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Colombo Time
0 Response to "மீண்டும் சித்தார்த்"
Post a Comment