படப்பிடிப்பில் பாரதிராஜா அடிப்பார் என்று பயந்தேன் : அஞ்சலி
|
ரெட்டைச்சுழியில் பாரதிராஜா பேத்தியாக நடித்தேன். நன்றாக நடிக்காதவர்களை அவர் கடுமையாக திட்டுவார், அடிப்பார் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே அவருடன் நடிக்க முதலில் பயமாக இருந்தது. இதுபற்றி அவரிடமே கேட்டேன். பதிலுக்கு பாரதிராஜா சிரித்தார். ரொம்ப காலத்துக்கு முன்புதான் நான் அப்படி இருந்தேன். சரியாக நடிக்காதவர்களை கண்டிப்பதெல்லாம் முன்பு நடந்தவை என்றார். அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர் சிறப்பாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அங்காடி தெரு படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். என் நடிப்பை பார்த்து ஏராளமான பாராட்டுகள் வருகிறது. படப்பிடிப்பு குழுவினரின் கூட்டு முயற்சியால்தான் அந்த படம் சிறப்பாக வந்தது. டைரக்டர் வசந்தபாலன் இயக்கும் இன்னொரு படத்திலும் இதே படத்தில் உள்ள எல்லோரும் மீண்டும் பணியாற்ற உள்ளோம் என்றார். |
Colombo Time
தம்பி வெட்டோத்தி சுந்தரம், மகிழ்ச்சி, தூங்காநகரம் படங்களும் கைவசம் உள்ளன. 'இரட்டைச்சுழி' படத்தில் நடித்த அனுபவம் பற்றி அஞ்சலி சொல்கிறார்.
0 Response to "படப்பிடிப்பில் பாரதிராஜா அடிப்பார் என்று பயந்தேன் : அஞ்சலி"
Post a Comment