சிந்து மேனன் நிச்சயதார்த்தம்!
ஈரம் நாயகி சிந்து மேனன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் பரவிய நிலையில், அவருக்கு இப்போதுதான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற தகவலையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.சிந்துமேனனிந் வருங்கால கணவரின் பெயர் பிரபு. லண்டன் வாழ் பிஸினஸ்மேன்.
பிரபுவின் குடும்பத்தினர் இந்தியா வந்தபோதுதான் முதல் முறையாகச் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது அவர் விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக அளித்தாராம். தொடர்ந்து இருவரும் பேசிப் பழகியதில் பிடித்துப் போய் திருமணத்துக்கு ஓகே சொன்னாராம்.
அதே வேகத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வெளியில் யாருக்கும் தெரிவிக்காமல் நடத்தியுள்ளனர்
. இதன் விளைவுதான் அந்த திருமண செய்தி என்கிறார் சிந்துவின் அண்ணன்.
விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். அதற்கு முன் அனைத்து தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் ஆங்கிலப் படங்களை முடித்துவிடுவாராம்.
திருமணத்துக்குப்பிறகு லண்டனில் செட்டிலாகிறாராம் சிந்து!
. இதன் விளைவுதான் அந்த திருமண செய்தி என்கிறார் சிந்துவின் அண்ணன்.விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். அதற்கு முன் அனைத்து தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் ஆங்கிலப் படங்களை முடித்துவிடுவாராம்.
திருமணத்துக்குப்பிறகு லண்டனில் செட்டிலாகிறாராம் சிந்து!
Colombo Time
0 Response to "சிந்து மேனன் நிச்சயதார்த்தம்!"
Post a Comment