த்ரிஷாவின் ரகசியம்
எப்போதும் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள விரும்புவார் த்ரிஷா. முதல் படத்தில் பார்த்த அதே போலவே உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார்.
பதிவுகள் அனைத்தும் இணையத்தில் பார்த்து ரசித்த அன்பர்களுக்கு நன்றி.இவற்றில் உள்ள தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயன்உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எப்போதும் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள விரும்புவார் த்ரிஷா. முதல் படத்தில் பார்த்த அதே போலவே உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார்.
ராவணன் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது. 350 கோடி ரூபாய்க்கு உலகளவில் பிஸினஸ் ஆகியுள்ளது.
துடன், எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை என்பது ஹைலைட்.
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தை இயக்கியவர் பாபுசிவன். அவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் அர்ஜுன்.
‘வந்தே மாதரம்’, ‘மாசி’, ‘மெய் காண்’, ‘வல்லக்கோட்டை’ படங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜுன். பாபுசிவன் இயக்கத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கிய பிறகே இப்படம் குறித்து வெளியே அறிவிக்க உள்ளனர்
இருமலின் வேகம் 100 கி.மீ என்று பிட் எழுதும் துணுக்கு எழுத்தாளர்கள் கூட, முருகதாஸ் இருமினால் 10 கி.மீ வேகம்தான் என்று ஜர்க் அடிப்பார்கள். அந்தளவுக்கு 'மிதவாதி' நம்ம முருகதாஸ்.
டிருந்தார். எப்படி நம்பாமல் இருப்பது?.
இயக்குநர் மணிரத்தினத்திற்கு வெனிஸ் பட விழாவில் ஜாகர் லேகோல்ட் குளோரி (Jaeger-LeCoultre Glory) விருது அளிக்கப்படுகிறது.
மார்கோ முல்லர் தெரிவித்தார்.
இதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.
யகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் கெடுக்கிற மாதிரியே முன்னாடி வந்து நிக்குது முசுடுத்தனம், என்ன பண்ணுறது... அது அவரோட சுபாவம் என்று மூக்கை துடைத்துக் கொள்கிறார் மேனேஜர்.
ட்டிய பாவ்ஸ், படத்தில் தன்னுடைய கேரக்டர் மூன்றாவது நாயகி என்றதும் அப்செட். இதுக்கா என்னை வரச்சொன்னீங்க என்று கோபித்துக் கொண்டு கேரளா போய்விட்டாராம்.
தனது பிறந்த நாளை சென்னையில் உதவும் கரங்கள் இல்ல குழந்தைகளுடன் கொண்டாடினார் நடிகை த்ரி்ஷா.
றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று இதய ஆபரேஷன் செய்யப்பட்டது.
ன் மும்பை பாந்த்ராவில் உள்ள ஆசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் சிறுவன் ஜேடனுடன் இணைந்து நடித்த தி கராத்தே கிட் படம் ஜூன் 11-ந்தேதி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் சிறுவன் போன இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறான். ஒரு மாணவி முன்பும் அவனை அவமானப்படுத்துகின்றனர். மனதளவில் பலவீனமான அவன் சித்ரவதைகள் வலியால் துடிக்கிறான்.
அவனுக்கு குங்பூ மாஸ்டராக வருபவர் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளை அறிகிறார். போராடி ஜெயிப்பது எப்படி என்று கற்று கொடுக்கிறார். பிறகு சிறுவன் நிமிர்ந்து நின்று வெற்றி பெறுவது கதை.
சிறுவனாக ஜேடன் நடிக்க, குங்பூ மாஸ்டராக ஜாக்கிசான் நடிக்கிறார். சிறுவர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சிறுவன் ஜேடனாக நடிப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மகன். ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது.
பாய்ஸ்’ படத்தில் நடித்த சித்தார்த் அதன் பின்பு தெலுங்குக்குப் போய்விட அங்கு கிடைத்த வரவேற்பினார் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார்.
றார்கள். ஜெயந்த்ரா என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து சுமார் 500 விளம்பரப் படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் இப்போது பெரிய திரையில் இயக்குநராக விஸ்வரூபம் எடுக்கிறார்.
‘முனியாண்டி விலங்கியல்’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் பூர்ணா. அந்தப் படத்தின் அட்டர் பிளாப் ரிசல்ட்டின் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
லி’, ‘வித்தகன’, ‘வேலூர் மாவட்டம்’ என சுமார் ஆறுக்கு மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்களில் வித்தகன் தவிர மற்றவை படப்பிடிப்பில் உள்ளன. வித்தகன் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஸன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூர்ணா.
சில வருடங்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவின் மூத்த வாரிசான கார்த்திக் ராஜா பல படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருந்தார்.
யான ரெட்டச்சுழி படத்திலும் பாடல்கள், பின்னணி இசை என எதுவும் பேசப்படாததால் மேலும் வருத்தத்தில் இருக்கிறார் கார்த்திக் ராஜா.
மடியிலே கனமில்லாத 'மச்சான்ஸ்' அது. நமீதா நேரடியாக கைகுலுக்கினால் கூட சிலிர்க்காது.
ஆனால் இவர் மச்சான்ஸ் என்று சொல்லும் மனசு குலுங்கி போகிறது ஒவ்வொரு முறையும். ஆனால் இந்த மச்சான்ஸ்-ல் ஒரு லு வை சேர்த்து 'மச்சான்ஸ்லு' என்று ஆந்திராவுக்கும் ஏற்றுமதி செய்வார் போலிருக்கிறது நமீதா. ஏனென்றால் சமீபத்தில் அவருக்கு கிடைத்திருக்கிற ஹிட்டும், அதை தொடர்ந்த அழைப்பும்தான் காரணம்!
தமிழில் அநேகமாக தலைமுழுகப்பட்ட நமீதாவுக்கு ஆந்திர தேசம் கைகொடுத்திருக்கிறது. இவர் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த சிம்ஹா என்ற படம் செமத்தியான ஹிட். அதுவும் ஆந்திராவில் தனி தெலுங்கானா கலவரத்திற்கு பிறகு ஹிட் ஆகிற முதல் படம் என்பதால் இந்த ஹிட்டுக்கு பெரிய மரியாதை கிடைத்திருக்கிறதாம். போதும் தமிழ்நாட்டுக்கு உழைச்சது. நம்ம பக்கம் வாங்க என்று இருகை நீட்டி அழைக்கிறதாம் ஆந்திரா.
இதையடுத்து ஏராளமான படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருக்கிறாராம் நமீதா. தமிழில் சொந்தப்படம் எடுக்க நினைத்து கதை கேட்டு வைத்திருந்தார் சில உதவி இயக்குனர்களிடம். சிம்ஹாவின் இந்த திடீர் வெற்றி, இதுபோன்ற உ.இ க்களின் நம்பிக்கையில் பாம் போட்டிருப்பதுதான் பரிதாபம்! அவருக்கென்ன? 'மன்னிச்சுகோங்க மச்சான்ஸ்' என்று கூறிவிட்டால் போச்சு!
"ரத்த சரித்திரா' இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன்" என்று நடிகர் சூர்யா கூறினார்.
ம் கதைக்காகவும் படத்தை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்காக நான் ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன். மேலும் மதுரையில் ஒரு வாத்தியாரிடமும் இந்தி பயின்றேன். நான் இதில் கதாநாயகனா என்று கேட்டால் இல்லைன்னு தான் சொல்லனும். கதைக்கேற்ற கதாபாத்திரம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமாகத் தொடர்ந்து இந்தித் திரைப்படங்களில் நடிப்பேன். மற்றபடி தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவத்தை தருவேன்" என்ற சூர்யா ராம்கோபால் வர்மா குறித்து கூறுகையில்,
ஈரம் நாயகி சிந்து மேனன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் பரவிய நிலையில், அவருக்கு இப்போதுதான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற தகவலையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
. இதன் விளைவுதான் அந்த திருமண செய்தி என்கிறார் சிந்துவின் அண்ணன்.
சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (Making a Living) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்தமட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்கார வைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.
லாஸ் ஏஞ்சல்சுக்குப் பக்கத்தில் வெனிஸ் என்ற ஊரில் பிரபலமான மோட்டார் பந்தயம் இப்பந்தயத்தில் சில குழந்தைகளும் பங்கெடுத்துக் கொள்வதுபோல அய்ந்தே நிமிடங்கள் மட்டுமே ஓடும் படத்தை எடுக்க முடிவு. சாப்ளினுக்கு என்ன வேடம், என்ன உடை என்பது எதையுமே தெரிவிக்காமல் அனுப்பி வைத்துவிட்டார். நடிகரும் அவர் மனதுக்குத் தோன்றிய உடையை அணிந்து கொண்டு படப்பிடிப்புக்கு போனார்.
மோட்டார் பந்தயம் தொடங்கியது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் கூட்டம், வேடிக்கை பார்க்க! ஒரு பக்கத்தில் படத்தின் இயக்குநர் நிற்கிறார். அவரது பக்கத்தில் காமரா மேனும் காமராவும்! கார் போட்டி தொடங்கியதும் காமரா லென்சுக்கு நேரே படத்தில் தெரிகிறார் போல சாப்ளின் வந்து நிற்கிறார். அவரைத் தள்ளி விடுகிறார் இயக்குநர். அடுத்த கார் வரும் போதும் நடிகர் வந்து நிற்கிறார். இயக்குநர் அவரை எட்டி உதைக்கிறார். நடிகர் சாப்ளின் கீழே விழுந்து விட்டார். அடுத்த நொடியில் அடுத்த கார் வந்தது; ஸ்பிரிங் போல எழுந்து சாப்ளின் காமராவின் முன் மறுபடியும் வந்து நிற்கிறார். காரை மறைத்துக் கொண்டு! இப்படியாகப் பல கார்கள் ஒவ்வொன்றையும் மறைத்துக் கொண்டு சார்லி சாப்ளின் நின்றார். கடைசிக் காரும் போய்விட்டது.
கார் பந்தயத்தை படம் பிடிக்க முடியவில்லை என்று தலையைப் பிய்த்துக்கொண்டு இயக்குநர் தாம் தூம் என்று குதிக்கிறார். ஆனால் அந்த நேரத்திலும் சாப்ளின் காமரா முன் தன் முகத்தைக் கொண்டு போய் (குளோஸ் அப்) அஷ்ட கோணலாக்கிக் காட்டுகிறார். இதுதான் சினிமா என்றாகிவிட்டது. தயாரிப்பாளர் போட்டுப் பார்த்தார். வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. இது படமா? எனக் கோபப்பட்டார். இருந்தாலும் படத்தை வெளியிட்டார். நியூயார்க் நகரத் திரையரங்குகளில் கூட்டம் சமாளிக்க முடியவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி மீண்டும் மீண்டும் பார்த்தனர். படம் அபார வெற்றி.
இந்தப் படம் தான் சாப்ளினை வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏற்றியது. வினியோகஸ்தர்களும் திரைப்படக் கொட்டகைக்காரர்களும் சாப்ளினின் அடுத்த படம் எது, எப்போது வரும் என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். அப்படி என்ன அந்தப் படத்தில்? சார்லி சாப்ளின் அணிந்த உடையும், அவரின் தோற்றமும் பிரமாதமான வெற்றிக்குக் காரணம்! இவராகவே உடைகள் வைத்து இருக்கும் பெட்டியைக் குடைந்து தொளதொள பான்ட், குறுகிய சிறிய கோட் என எடுத்து அணிந்துகொண்டார். தலையில் ஒரு குல்லாய் அணிந்து கொண்டார். கழுத்தில் மிக நீளமான டை! ஃபோர்டு ஸ்டெர்லிங் எனும் (உருவத்தில் பெரிய) சிரிப்பு நடிகரின் பெரிய பூட்சுகளைப் போட்டுக் கொண்டார். இவருடைய சிறிய காலிலிருந்து பூட்ஸ் கழன்று விடாமல் இருக்க, கால் மாற்றி அணிந்து கொண்டார். வலதுகாலில் இடது கால் பூட்சையும், இடது காலில் வலது கால் பூட்சையும் அணிந்து கொண்டார்.
மீசை பெரியதாகத் தெரிந்தது, அவரின் உதடுகளை மறைத்தது. கத்தரிக் கோலால் வெட்டினார். வெட்டினார். மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. என்ன செய்வது? அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். கையில் ஒரு தடியைப் பிடித்துக் கொண்டார். இந்தக் கோமாளி உடைதான் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் குபேரனாக்கியது.
சார்லி சாப்ளினின் தனித்துவம், சிறந்த கற்பனை போன்றவற்றைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். சார்லி சாப்ளினே கதை, திரைக்கதை, நடிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். தயாரிப்பாளர் அவரிடமே விட்டுவிட்டார். காட் இன் எ காபேரே (Caught in a Cabare) என்ற படம் 1914 ஏப்ரலில் வந்தது. சாப்ளின் இயக்கிய முதல் படம்! பெரும் வெற்றி. அடுத்தது பத்து நிமிடம் மட்டுமே ஓடிய காட் இன் த ரெயின் (Caught in the Rain) இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படத்தை நினைத்து நாள் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
25 வயதில் இப்படியொரு புகழ்! ஆனால் அவருடைய தலை இதனால் கனக்கவில்லை. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத அவர், தந்தை பெரியாரைப் போலச் சிக்கனமானவர். அவருடைய சேமிப்பு வளர்ந்தது. அவர் சிறந்த மானுடப் பற்றாளர். லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியாக நடந்து போவார். அப்படி ஒரு நாள் தம் நண்பரான புகழ்பெற்ற எழுத்தாளர் சமர்சொட்டாம் என்பாருடன் நடந்து போனபோது சொன்னார், ‘சமர்சொட், நாம் பார்க்கும் இதுதான் உண்மையான வாழ்க்கை, மற்றதெல்லாம் போலி’. சமர்சொட்மாம் அதிர்ந்து போனார். ஏன்? சார்லி சாப்ளின் படிப்பறிவு அற்றவர். அவரிடம் அப்படிப்பட்ட ஆற்றலா என் வியந்து போனார் சமர்சொட்மாம்!
ஏன் ஏழைகள் வாழும் பகுதிக்கு ஒரு சினிமா நடிகர் போனார்? அவரே ஒர்க் அவுசில் (Work House) வளர்ந்தவர். அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஏழைச் சிறார்களைப் பாதுகாக்க அரசு ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட வீடுகளை வைத்திருந்தது. தெருவில் திரியும், ஆதரவற்ற சிறார்களைக் கட்டாயமாக இதில் சேர்த்து உணவு, உடை, கல்வி எல்லாமே அரசு தந்தது! இதில் சேர்க்கப்பட்ட சாப்ளின் தப்பி வெளியே ஓடிப்போய்விட்டார். எனவே, ஏழைகளின் வாழ்வு எப்படிப் போகிறது என்பதை அறிந்தவர் ஆவார்.
தன் தொடக்க கால வாழ்வை மய்யக்கருவாக வைத்து அவர் 1924இல் தயாரித்த முழுநீளப் படம் தி கிட் (The Kid). அய்ந்து வயதுப் பையனை வைத்து எடுத்த படம். ஓராண்டுக் காலமாகத் தயாரித்த படம். திருமணம் ஆகாமல் குழந்தை பெறும் தாய் அந்தக் குழந்தையை தெருவில் நின்று கொண்டிருந்த காரில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். காரைத் திருடிய திருடர்கள் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்கருகில் வைத்துட்டுப் போய்விடுகிறார்கள். குழந்தை சாப்ளின் கண்களில் பட்டு விடுகிறது. துண்டு சிகரெட் பொறுக்கும்போது குழந்தை இருப்பதைப் பார்த்து எடுத்துச் செல்கிறார். தானே முழுப்பட்டினி, குழந்தையை என்ன செய்வது என்று திரும்பவும் குப்பைத் தொட்டியில் விட்டுவிடலாம் என்று வருகிறார். போலிஸ்காரர் எதிரில் தென்படவே, பயந்து போய்த் தானே வளர்க்கிறார். அய்ந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே என்று தன் வளர்ப்புக்கு ஒரு தொழில் கற்றுத் தருகிறார். கல்லால் அடித்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைப்பான் சிறுவன். சற்று நேரம் கழித்து சாப்ளின் வருவார். அவர் உடைந்த கண்ணாடியை சரி செய்யும் பணியாளர் வேடம்! நல்ல வேளை என நினைத்து வீட்டுக்காரர் பணியை ஒப்படைப்பார். வருமானம் வரும். சாப்பாட்டுக் கவலை தீரும்.
இந்தக் காட்சியைக் காப்பி அடிக்காத ஆளே உலகத்தில் கிடையாது. 1943இல் மங்கம்மா சபதம் என்ற படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தக் காட்சியை வைத்தார். சாப்ளின் குரு, கலைவாணர் சீடர். இந்தக் கற்பனைக் காட்சி கூட வாழ்க்கையில் நிஜத்தில் நடந்தது தான். கார்னோ என்ற சாப்ளினின் நண்பர் ஜன்னல்களைப் பழுது பார்ப்பவர். தன் தொழில் ரகசியத்தை சாப்ளினுடன் பகிர்ந்து கொண்டார். சாப்ளின் படமாக்கி பகிர்ந்து கொண்டார். இந்தக் காட்சியின் பின் கதை இது தான். இப்படி சாப்ளினின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஹீரோயின்களை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிகளில் டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்கள்.
இது சரியில்லை. பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார் நயன்தாரா.
தமிழில் சுத்தமாகப் படங்களே இல்லை இவருக்கு. ஒரு மலையாளப் படத்திலும், கன்னடப் படத்திலும் நடிக்கிறார். இந் நிலையில் சினிமாவில் பெண்களின் நிலை குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளார் நயன்.
அவர் அளித்த பேட்டியில்,
"உச்சகட்ட நாயகியாக இருந்துவிட்டேன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நாயகியாக இருந்தவள் நான். இப்போது மலையாளத்தில் கவனம் செலுத்துகிறேன்.
பொதுவாக கமர்ஷியல் படங்களின் ஊறுகாய் அளவுக்குதான் நாயகிகளின் பங்களிப்பு உள்ளது. இது தவறு. இனியாவது, பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிற பாத்திரங்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். வெறுமனே மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது மட்டுமே ஹீரோயின் வேலை என்றாகிவிட்டது. இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்" என்றார்.
நெஞ்சில் டாட்டூ வரைவது, பற்களில் ஜிகினா ஒட்டிக் கொள்ளுதல், கண் இமைகளில் புதிய வண்ணம் பூசிக்கொள்ளுதல் என மேல் அழகை மெயின்டெய்ன் செய்வதில் அதிக அக்கறை காட்டி வந்த நடிகை த்ரிஷா
இப்போதுதான் உள் அழகை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளாராம்.
அதற்கு அவர் நாடியிருப்பது யோகாவை.
யோகா ஒன்று போதும், உடம்பையும் மனசையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது என யோகக் கலையின் பிராண்ட் அம்பாஸடர் ரேஞ்சுக்கு பார்ப்பவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐதராபாத் சென்றுவிட்ட த்ரிஷாவுக்கு ரெஸ்ட் எடுக்கக் கூட நேரமில்லையாம்.
ஆனால், சென்னை திரும்பியதும் யோகா பயிற்சிகளை முடித்த பிறகு அந்தக் களைப்பே தெரியவில்லையாம் அவருக்கு.
இப்போது தமிழில் கமல்ஹாஸன் ஜோடியாக யாவரும் கேளிர் (காருண்யம்?) படத்தில் நடிக்கும் த்ரிஷா, கமலுக்கு மொத்தமாக 4 மாதங்கள் கால்ஷீட் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக, பல வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.
இந்தப் படத்தில் சற்று கூடுதல் கவர்ச்சி காட்ட வேண்டிய பாத்திரம் என்பதால், சற்று உடல் சதைப்போட்ட மாதிரி தெரிய வேண்டும் என கமல் கேட்க, உடனே அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளார் த்ரிஷா.
ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் போன்றோரும் பங்கேற்பதாக உள்ளது. தமிழ் நடிகர் நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். இவ்விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அமிதாப்பச்சன் வீட்டையும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் நடிகர் நடி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள இப்படம் தமிழிலும் ரிலீசாகிறது. அந்த படத்தை புறக்கணிக்கவும், திரையிட விடாமல் தடுக்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இலங்கை சர்வதேச படவிழாவில் “ராவணன்” படத்தை திரையிடவும் திட்டமிடப்பட்டது. அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
|
ரெட்டைச்சுழியில் பாரதிராஜா பேத்தியாக நடித்தேன். நன்றாக நடிக்காதவர்களை அவர் கடுமையாக திட்டுவார், அடிப்பார் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே அவருடன் நடிக்க முதலில் பயமாக இருந்தது. இதுபற்றி அவரிடமே கேட்டேன். பதிலுக்கு பாரதிராஜா சிரித்தார். ரொம்ப காலத்துக்கு முன்புதான் நான் அப்படி இருந்தேன். சரியாக நடிக்காதவர்களை கண்டிப்பதெல்லாம் முன்பு நடந்தவை என்றார். அவர் வெளிப்படையாக பேசக்கூடியவர் சிறப்பாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். அங்காடி தெரு படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். என் நடிப்பை பார்த்து ஏராளமான பாராட்டுகள் வருகிறது. படப்பிடிப்பு குழுவினரின் கூட்டு முயற்சியால்தான் அந்த படம் சிறப்பாக வந்தது. டைரக்டர் வசந்தபாலன் இயக்கும் இன்னொரு படத்திலும் இதே படத்தில் உள்ள எல்லோரும் மீண்டும் பணியாற்ற உள்ளோம் என்றார். |
நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும். வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம். சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம். ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார். எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.” மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். |
இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கை த் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடு
ப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.
அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.
இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.
விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.
மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.
இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
காங்கிரசில் சேரப்போகிறாராம்! தற்போது லண்டனில் இருக்கிற குஷ்பு அங்கிருந்தபடியே ஒரு அஸ்திரத்தை ஏவியிருக்கிறார். "எனக்கு காங்கிரஸ் கட்சி மேல பெரிய அபிமானம் உண்டு. அதனால் சென்னை வந்ததும் கலந்து பேசி காங்கிரஸ்ல சேரலாம்னு இருக்கேன்" இதுதான் குஷ்பு போட்ட புதுக்கோலம். குதுகலம்தான் தொண்டர்களுக்கு. "அன்னை சோனியாவின் தலைமையை ஏற்க யார் முன்வந்தாலும் அவங்களை முழு மனசோடு வரவேற்போம்" என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும். தமிழகத்தில் மேல்சபை வருவததாக அறிவிப்பு வந்த நாளில் இருந்தே குஷ்புவுக்கும் அதில் இடம் உண்டு என்ற வதந்திகள் உலவ துவங்கின. இப்போது வதந்தி உண்மையாகும் நிலை வந்திருக்கிறது. ஆக, சத்தியமூர்த்தி பவனுக்குள் மேலும் ஒரு கோஷ்டி! |
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை ஆகிய இரண்டு படங்களை அடுத்து கண்ணன் இயக்கும் புதிய படம் 'வந்தான் வென்றான்'.
இதிலும் பரத் நடிப்பதாக இருந்தது. கடைசிநேர சறுக்கலில் பரத் இடத்திற்கு வந்திருக்கிறார் ஜீவா.
ரேஸ் குதிரையில் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவா, மெள்ள மெள்ள ஒவ்வொரு குதிரையாக முந்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அதற்கும் விதியும் கொஞ்சம் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோ படத்திலிருந்து சிம்பு விலகியதுதான் ஜீவாவின் பாய்ச்சலுக்கு இன்னொரு காரணம். கே.வி.ஆனந்த் படத்திலேயே நடிக்க வந்திட்டோம். ஜோடி விஷயத்தில் கொஞ்சம் எட்டித் தாவலாமே என்று நினைத்த ஜீவா, வந்தான் வென்றான் படத்திற்கு த்ரிஷாவை ஜோடியாக கேட்டாராம்.
தங்க விசிட்டிங் கார்டில் பெயர் பொறித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. குனிந்து பார்க்க முடியுமா அவரால்? "போயும் போயும் ஜீவாவுடன் ஜோடி சேர்வதா, ம்ஹ§ம்" என்று கூறிவிட்டாராம். மயிலு போனா என்ன, மரிக்கொழுந்து நான் இருக்கேன் என்று இப்போது கால்ஷீட் கொடுத்திருப்பவர்...? அழகு, மெழுகு அற்புத சிற்பம் தமன்னாவாம்!
மனுசனுக்கு மச்சமே குதிரையாயிருக்குப்பா...

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத் .
இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.
இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.
நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.

திருப்பதி: திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.
அதே நேரம், திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை ஒதுக்கவில்லை என்ற கோபத்தில் நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 1000 படங்களில் நடித்த, சிறந்த நடிகை விருது வாங்கிய தனக்கு அந்த தகுதி இல்லையா என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
தரிசனம் முடிந்தபிறகு நேற்று அதிகாலையில் காரில் சென்னை திரும்பினார்.
தமிழக எல்லையில் உள்ள கீர்த்தளம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்வதற்காக டிரைவர் காரை திருப்பினார்.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் நடிகை மனோரமாவும் அவருடன் வந்தவர்களும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். கிராம மக்கள் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் மனோரமா காயம் அடைந்தார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
பின்னர் சென்னை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

திரிஷா அவரது தாய் உமா கிருஷ்ணனுடன் ஆரம்பத்தில் புரசைவாக்கத்தில் வசித்தார். தற்போது அடையாறு கேட் நட்சத்திர ஹோட்டல் அருகில் சொந்த வீடு வாங்கி குடியேறியுள்ளார்.
அந்த வீட்டில் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளன.
வீட்டின் முன்நவீன கெமரா பொருத்தப்பட்டு உள்ளது. வெளியே யார் நின்றாலும் வீட்டுக்குள் இருந்து பார்க்கலாம். வீட்டின் கதவுக்கு பூட்டு கிடையாது. அதற்கு பதில் வாய்ஸ் லேசர் சிஸ்டம் என்ற தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது.
திரிஷாவும், தாய் உமா கிருஷ்ணனும் கதவு அருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக் கொள்ளும்.
வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால் தான் கதவு திறக்கும்.
எம். ஜி. ஆரின் பழைய அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ‘அண்டக்கா கஜம் அபுக்சா குஜம் திறந்திடு சீசேம்’ என்று சொன்னதும் மர்ம குகையின் ராட்சத கதவு தானாக திறக்கும். அது போல திரிஷா வீட்டு கதவும் அவர் குரல் கேட்டால் மட்டுமே திறக்கிறது.
திரிஷா அடிக்கடி ஓய்வெடுக்க வெளிநாட்டு போவதுண்டு. அங்குள்ள புது டெக்னாலஜிகளை தெரிந்து கொண்டு வீட்டில் அறிமுகப்படுத்துகிறார். அது போல் வந்ததுதானாம் வாய்ஸ்லேசர் சிஷ்டம் பூட்டு.
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா...
நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள்
செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை
கிஞ்சித்தும் இல்லை.
யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள்
வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை,
தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்,
திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.
இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.
யாழ்நகர்
(!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு
ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப்
போகும்!.
ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த
கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த
மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.
அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.
இதற்கிடையில்
வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல,
அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக்
களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள
முடிவெடுக்கிறார்.
இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.
தன்னையும்
கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா?
என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.
இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.
கடலுக்குப்
போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை
திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும்
வரவில்லை.... அது சுறா.
உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல
வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து
பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில்
குத்தாட்டம் போடுகிறார்!.
விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம்
போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர்
உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !
வடிவேலுவை
இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார்
போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட்.
குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத்
தெரிந்தாலும் சரவெடி.
நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.
வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.
ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.
மணிசர்மாவின்
பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின்
அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.
ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.
சிவப்பு மழை
கின்னஸ் ரெக்கார்டுக்காக 12 நாளில் எடுக்கப்பட்ட படம். தயாரிப்பாளரும் ஹீரோவுமான சுரேஷ் ஜோகிம் இலங்கை தமிழர் என்பதால், தனது வலியையே பதிவாக்க முயன்றிருக்கிறார். கை புண்ணை கண்ணாடியில் காட்டும் முயற்சி! ஆனால் அந்த கண்ணாடியே கை புண்ணை மேலும் கிழிக்கிற மாதிரி அங்கங்கே சொதப்பல்கள்.
அமைச்சரின் மகளான மீரா ஜாஸ்மினை கடத்திச் செல்கிறார் சுரேஷ் ஜோகிம். பதறுகிறது அமைச்சர் வட்டாரமும், அதிகாரிகள் வட்டாரமும். சிறையிலிருக்கிற கைதி ஒருவனை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் உன் மகள் அவ்வளவுதான் என்று போனில் எச்சரிக்கை விடும் சுரேஷ், செகண்ட் ஆஃபில் மீரா ஜாஸ்மினின் மனசுக்குள் இடம் பிடிக்கிற அளவுக்கு ரொம்ப நல்லவராகி விடுகிறார். எப்படி என்பதும், எதற்காக கைதியை விடுவிக்க சொன்னார் என்பதும் படத்தின் முக்கிய திருப்பங்கள். க்ளைமாக்ஸ் யூகிக்க முடியாதது என்றாலும், இதற்கு முன்பு வந்த ஒரு வெற்றி படத்தின் ஜெராக்ஸ் என்பதால் சப்!
இலங்கை தமிழரான ஜோகிம், மருத்துவ முகாமில் நடக்கும் கொடூரங்களை சொல்கிற போது கண்கள் கசிகின்றன. ஆனால், இலங்கை ராணுவத்தையும் அநியாயத்தை தட்டி கேட்கிற பிறவிகள் மாதிரி காட்டியிருக்கிறாரே, அடுக்குமாய்யா? தன்னிடம் சிறை பட்டிருக்கும் மீராஜாஸ்மினின் கட்டை விரலை அறுத்து மந்திரிக்கு அனுப்புவது மாதிரி காட்சி. ஆனால் அது 'ச்சும்மா' என்கிறபோது மீராவுக்கு மட்டுமல்ல, நமக்கும் திருப்தி.
தொலைக்காட்சி நிருபராக மீராஜாஸ்மின். முதல் சில நிமிடங்கள் கையில் கட்டும், வாயில் பிளாஸ்திரி ஒட்டுமாக தவிக்கிறார். பிறகு சுரேஷ§டன் சேர்ந்து சேம் சைட் கோல் போடுகிற லெவலுக்கு வந்துவிடுகிறாரா, சுகம் தருகிறது அவரது சுந்தரமுகம். அதற்காக விறுவிறுப்பான திரைக்கதைக்கு பிரேக் போடுகிற மாதிரி இவருக்கு பாடல் காட்சிகளை வைத்து போரடித்திருக்க வேண்டுமா?
மந்திரியாக சுமன். நாடி நரம்புகள் எல்லாம் நடித்திருக்கிறது. வில்லன் பாத்திரத்திலிருந்து விலகியிருப்பதே ஆறுதல். போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் ராஜீவ் பேசுகிற ஒரே டயலாக், "டென்ஷன் ஆவதரா ப்ளீஸ்". இதையே அவர் திரும்ப திரும்ப பேசுவது டென்ஷன் ஆக்கி தொலைக்கிறது. போலீஸ் யூனிபார்ம் மாதிரியே நச்சென்று பொருந்தியிருக்கிறார் போஸ் வெங்கட்.
இலங்கை ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார் அலெக்ஸ். அந்த கோர முகம் அப்படியே மேட்ச் ஆகியிருக்கிறது இவருக்கு. நடிப்பும் பலே. இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள். வசனங்களில் அனல் பறக்க வேண்டுமே, ம்க்கும்!
பெரிய மைதானங்கள் இல்லை. சின்ன எல்லைக்குள்ளேயே விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வநாதன். எடிட்டர் வி.டி.விஜயன் அங்கங்கே போட்டிருக்கும் கத்தரி, படத்திற்கு வேகம் சேர்க்கிறது. தேவா இசையில் அறிமுக பாடல் அசத்தல்.
கலர்ஃபுல் மழையில், கொஞ்சம் கண்ணீரின் இழை!
Designed by kandeepan
Converted into kandee Templates by Theme Craft