ஹரி இயக்கத்தில் தனுஷ்
ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை அறிவிப்பதுதான் ஹரியின் ஸ்டைல். சேவல் சுமாராகப் போனதால் இந்த நடைமுறையில் சின்ன சறுக்கல்.சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சிங்கம் முடிவடைந்த நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்.
ஹரி அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பது
அனைவருக்கும் தெரியும். தாமிரபரணி படத்தை தயாரித்தவர்கள் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
அனைவருக்கும் தெரியும். தாமிரபரணி படத்தை தயாரித்தவர்கள் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.கதை இல்லாமல் படமெடுத்தாலும் அரிவாள் இல்லாமல் படமெடுக்கமாட்டார் என்று ஹரி பற்றி சொல்வதுண்டு. தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு அருவா என்று பெயர் வைத்திருப்பதாகவும் காற்று வாக்கில் வருகின்றன செய்திகள். உண்மையா இது?
நூறு சதவீதம் பொய்யாம். சாமி, கோவில், அருள் என்று பெயர் வைத்தவர் எப்படி அருவா என்ற பெயரைத் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள் யூனிட்டில். பெண்களுக்குப் பிடிக்கும் நல்ல நாகரீகமான பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.
கிடைச்சதும் சொல்லுங்க.
Colombo Time
0 Response to "ஹரி இயக்கத்தில் தனுஷ்"
Post a Comment