நலமுடன் வீடு திரும்பினார் லதா ரஜினி

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா ரஜினி நேற்று நலமுடன் வீடு திரும்பினார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியும் கல்வியாளருமான லதா ரஜினிகாந்துக்கு சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்து வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு 1 மணிக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.


உடனடியாக அவரை, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழா பணிகளில் தீவிரமாக இருந்ததால் லதா ரஜினிக்கு இந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.


ரஜினியும், மகள் சௌந்தர்யாவும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர்.
லதா ரஜினியின் உடல் நிலை நேற்று முழுமையாக சீரானது. இதைத் தொடர்ந்து ரஜினி, சௌந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் லதாவை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது நலமுடன் ஓய்வில் உள்ளார் லதா ரஜினி என்று போயல் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Response to "நலமுடன் வீடு திரும்பினார் லதா ரஜினி"

Post a Comment