தடுக்கி விழுந்தார் வடிவேலு!

பில்டிங் ஸ்டிராக், பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக் என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தாரோ, வடிவேலுவின் பேஸ்மென்ட் ரொம்பதான் ஆட்டம் கண்டிருக்கிறது.


பல கோடிகளை .சுருட்டி விட்டதாக தன் நிழல் மாதிரி இருந்தவர்கள் மீதே குற்றம் சுமத்த வேண்டிய அளவுக்கு ஏமாந்த சோனகிரியாகிவிட்டார் வைகைப்புயல். நல்லவேளையாக இதில் தலையை நுழைத்த ஒரு சில பெரிய மனிதர்கள் இரண்டு பேரையும் நெருங்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.


போகிற போக்கை பார்த்தால் இந்த காம்பினேஷனை மீண்டும் ஒரு படத்தில் நாம் கண்ணார காணக் கூடும் என்கிறார்கள். நல்ல விஷயம்தான்.


நாம் சொல்லப் போவது நிஜமாகவே அவரது பேஸ்மென்ட் வீக்கை பற்றி! சுறா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா லேடி ஆண்டாள் பள்ளியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட வடிவேலு திடீரென்று ஒயர் தடுக்கி கீழே விழ, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.


நாலைந்து கேமிராவை வைத்து நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இவரது பெயரை சொன்னதும் ஆர்வத்தோடு எழுந்து ஓடிய வடிவேலு, கீழே தரையில் கிடந்த கேமிரா ஒயர்களை கவனிக்கவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்தார். நல்லவேளையாக முகத்தில் காயம் ஏதுமில்லை.


விழுந்த வேகத்தில் எழுந்த வடிவேலு, ஒன்னும் சதியில்லையே... என்று கேட்டு சிரித்துவிட்டு அதே வேகத்திலேயே மீண்டும் மேடைக்கு ஓடினார்.

0 Response to "தடுக்கி விழுந்தார் வடிவேலு!"

Post a Comment