அமிதாப்பும் அமைதியானார் : கோவிந்தாவாகும் கொழும்பு விழா

ஜுன் மாதம் கொழும்பில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவுக்கு குள்ளமணி, வையாபுரி கூட போக மாட்டார்கள் போலிருக்கிறது.
அப்படி ஒரு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள் இங்குள்ள தமிழ் இன உணர்வாளர்கள். வைகோ, திருமா, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த திரைப்பட விழாவுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.


ரஜினி, கமல் மட்டுமல்ல, விஜய், அஜீத், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த அழைப்பிதழை கையால் கூட வாங்க முன்வரவில்லையாம். கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று கொழும்புக்கு எந்த கலைஞர்களும் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்த அரசியல் தலைவர்களுக்கு பெரும் வெற்றி. அதே நேரத்தில் மும்பையில் இருக்கும் அமிதாப் என்ன செய்வார்?


ராஜபக்சேவிடம் இந்த விழா குறித்து நேரில் விவாதித்துவிட்டு வந்திருக்கும் அவர், கடைசி நேரத்தில் கழன்று கொள்ள இயலுமா? ஆனால் அதற்கெல்லாம் யோசனை வைக்காமல் தனது தொண்டர்களை மும்பைக்கே அனுப்பி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் சீமான். இவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள் அமிதாப் வீட்டின் முன் கூடி கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். போகாதே... போகாதே இலங்கைக்கு போகாதே என்பதுதான் அங்கே எழுப்பப்பட்ட முக்கிய கோஷம். அவர்களை உள்ளே அழைத்த அமிதாப் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தாகவும் தகவல்.


போகிற போக்கை பார்த்தால் இலங்கையில் விழா நடக்குமா என்பதே கேள்விக்குறியாக கிடக்கிறது

600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!!

வரும் ஏப்ரல் 30-ம் தேதி ரிலீசாகிறது விஜய்யின் 50வது படமான, சன் பிக்ஸர்ஸின் சுறா.

விஜய் பட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 600 திரையரங்குகளில் உலகம் முழுக்க இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.


சென்னை நகருக்குள் மட்டும் 16 திரைகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த விஜய் படமும் சென்னையில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்கிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்களே இல்லை என்பதாலும் குறைந்தது இரு வாரங்கள் ஓபனிங் நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.


இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாருடன் மீண்டும் பணிபுரிய விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.


இதற்கிடையே, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை காவல்காரன் படம் முடிந்ததும் தொடங்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படத்துக்காக விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் தோன்றவிருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவப்பு மழை படத்திற்கு இலங்கையில் தடை!

சுரேஷ் ஜோகிம்-மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த கின்னஸ் படம் சிவப்பு மழை. 12 நாட்களில் உருவாக்கப்பட்ட படம் இது.


ஒருபுறம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்டாலும், மறுபுறம் ஈழ விடுதலை போராட்டத்தின் வலியையும் சொல்லிய படம் அது. (அதை முழுமையாக சொல்லியிருக்கிறார்களா என்பது வேறு விஷயம்) படத்தின் நாயகன் சுரேஷ் ஜோகிம் ஒரு அவுஸ்திரேலியா ஈழத்தமிழர் என்பதும் இப்படி ஒரு படம் அமைய காரணமாக இருந்தது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை இலங்கையில் வெளியிட தடை விதித்துள்ளது ராஜபக்சேவின் அரசு.


தமிழகத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிற அதே நேரத்தில் கொழும்பு போன்ற நகரங்களிலும் அப்படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள் விநியோகஸ்தர்கள். தமிழகத்தில் எடுக்கப்படுகிற படங்களுக்கே இந்த வரவேற்பு என்றால் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய பிரச்சனையை காட்டுகிற படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்க வேண்டும்? ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் முதலிலேயே இந்த படத்தை வெளியிட முட்டுக்கட்டை போட்டிருக்கிறது அந்த அரசு.



இதை எதிர்த்து போராடுகிற நிலையில் எவரும் இல்லை என்பதால், இலங்கை தவிர பிற இடங்களில் தொடர்ந்து திரையிடும் முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார் சுரேஷ் ஜோகிம்.

எத்தனை பேரை காதலிப்பது : ப்ரியாமணி கேள்வி

ப்ரியாமணி தமிழ் படங்களில் நடித்த போது அவர் யாருடன் எல்லாம் ஜோடி சேர்ந்தாரோ அந்தந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்த்து ஏராளமான கிசுகிசுக்கள் உலா வந்தன.


அவர் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்த போதிலும் ஆங்காங்கே கிசுகிசுவைக் கொளுத்திப் போட்டுவிடுகிறார்களாம்.


‘எந்த நடிகருடன் நடிக்கிறேனோ அவருடன் காதல் என்று கதை கட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். நான் ஒருத்தி எத்தனை பேரைத்தான் காதலிப்பேனாம்... அட போங்கப்பா நீங்களும் உங்க கிசுகிசுவும்...’ என்று ரொம்பவே அலுத்துக் கொள்கிறார் ப்ரியாமணி

ராவணன் புதிய தகவல்கள்

இந்தியில் ராவண். தமிழில்...? ராவண், ராவணா, ராவணன், அசோக வனம்... இப்படி அரை டஜன் பெயர்கள் சொன்னார்கள். இறுதியில் ராவணன் என்ற பெயரை டிக் செய்திருக்கிறார் மணிரத்னம்.

இந்தியில் ட்ரெய்லர் வெளியிட்டுவிட்டார்கள். இன்று டி சீ‌‌ரிஸ் படத்தின் ஆடியோவை வெளியிடுகிறது. தமிழில் இதெல்லாம் எப்போது என்று ரசிகர்கள் முணுமுணுக்க‌த் தொடங்கியிருக்கிறார்கள்.


இந்தி ஆடியோ ரைட்ஸை டி சீ‌‌ரிஸ் வாங்கியிருப்பதைப் போல தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் ஆடியோ வெளியிடப்படும் என்கிறார்களே தவிர உறுதியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தெலுங்கில் ராவணன் படத்துக்கு மணிரத்னம் வைத்திருக்கும் பெயர் வில்லன்.


ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் ஈகோ மணிரத்னத்துக்கு ச‌ரிவராததால் படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு சந்தோஷ்சிவனே ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து வருகின்றன. நான்கு படங்களுக்கு‌‌ரிய ஃபுட்டே‌ஜ் இருப்பதால் பணிகள் மெதுவாகவே நடக்கின்றன. ஜூன் 18 ராவணன், ராவண், வில்லன் மூன்றும் திரைக்கு வருகிறது.

சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தை

1994-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் சுஷ்மிதானசென். 1996-ல் 'தஸ்தக்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


அர்ஜூன் நடித்த 'முதல்வன்' படத்தில் 'சக்கலக்க பேபி சக்கலக்க பேபி லுக்கு விட தோணலையா' என்ற ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜூன் ஜோடியாக “ரட்சகன்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். கமல் எடுக்கும் “மர்மயோகி” படத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.



சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் குழந்தைகள் மீது பிரியம். இதையடுத்து “ரீனி” என்ற பெண் குழந்தையை தத்து எடுத்தார். அக்குழந்தையை தன்னை போல் அழகிப் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய பயிற்சிகள் அளித்து வருகிறார். தற்போது அலிஷா என்ற இன்னொரு மூன்று வயது பெண் குழந்தையையும் தத்து எடுத்துள்ளார். அக்குழந்தையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு அழைத்து வந்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார்.


மாணவ்மேனன் என்பவரை சுஷ்மிதா காதலித்தார். இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனிமையை குழந்தைகளுடன் கழிக்கிறார்.

அண்ணா பர்சனல் கேள்வி வேண்டாம் : நயன்தாரா கெஞ்சல்

கேள்விய பதிலால அடிக்கறதுன்னு ஒரு வழக்கம் இருக்கு. ஆனா கேள்விய 'வேறொரு விஷயத்தால' அடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? கொஞ்சம் பெங்களுரு வரைக்கும் வந்தா தெரிஞ்சுரப்போவுது!


கன்னடத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. உபேந்திரா ஜோடியாக இவர் நடித்து வரும் படத்தின் பெயர் கிச்சகா. நயன்தாரா ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார் என்றதுமே நிருபர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஆஜராகிவிட்டார்கள். கேட்கிற கேள்வியில மனசுக்குள்ளே இருக்கிற பிரபுதேவாவை அந்தம்மா கக்கிரணும் என்கிற மாதிரி முறைப்பு ஒவ்வொரு நிருபரிடமும். (யாரு பெத்த புள்ளய யாரோ பிக்கப் பண்ணுறதுக்கு இவங்களுக்கு ஏன்யா இத்தனை ஆக்ரோஷம்) ஆனால் இவங்க வந்திருக்கறது தெரிஞ்சே கேரவேனை விட்டு இறங்கல நயன்தாரா. தனது உதவியாளரை அனுப்பி ஒவ்வொருத்தரோட பேரு, அவங்க வேலை செய்யுற பத்திரிகை நிறுவனம் எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு வரச்சொன்னார்.



லிஸ்ட் கைக்கு வந்ததும், பட்டு பட்டுன்னு வேலைகள் ஆரம்பமாச்சு. கவருக்குள்ளே 'கவுரவத்தை' நிரப்பி, பிரிச்சு பார்க்கிற நிமிடத்திலேயே ஒவ்வொருவரும் பீஸ் பீஸாகிற மாதிரி போட்டு அனுப்புனாராம். விஷயம் அவங்க கைக்கு போயி அரை மணி நேரம் கழிச்சு கீழே இறங்கிய நயன் நிருபர்களிடம், "அண்ணா பர்சனல் கேள்வி வேண்டாம். ப்ளீஸ்" என்ற கூற, அதுக்கு மேல அது பற்றி கேட்க அவங்க என்ன மனசாட்சி இல்லாதவங்களா என்ன?

ஹ‌ரி இயக்கத்தில் தனுஷ்

ஒரு படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை அறிவிப்பதுதான் ஹ‌ரியின் ஸ்டைல். சேவல் சுமாராகப் போனதால் இந்த நடைமுறையில் சின்ன சறுக்கல்.


சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சிங்கம் முடிவடைந்த நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்.

ஹ‌ரி அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பது அனைவருக்கும் தெ‌ரியும். தாமிரபரணி படத்தை தயா‌ரித்தவர்கள் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.


கதை இல்லாமல் படமெடுத்தாலும் அ‌ரிவாள் இல்லாமல் படமெடுக்கமாட்டார் என்று ஹ‌ரி பற்றி சொல்வதுண்டு. தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு அருவா என்று பெயர் வைத்திருப்பதாகவும் காற்று வாக்கில் வருகின்றன செய்திகள். உண்மையா இது?


நூறு சதவீதம் பொய்யாம். சாமி, கோவில், அருள் என்று பெயர் வைத்தவர் எப்படி அருவா என்ற பெயரை‌த் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள் யூனிட்டில். பெண்களுக்குப் பிடிக்கும் நல்ல நாக‌‌ரீகமான பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.


கிடைச்சதும் சொல்லுங்க.

அ‌‌ஜீத் நடிக்க விரும்பும் இயக்குனர்

அ‌‌ஜீத்தின் அப்ரோச் ஸ்டைலே தனிதான். ஏறக்குறைய நம்ம சூப்பர் ஸ்டார் போல. எதையும் பட்டென்று போட்டுடைப்பது இவர்களின் ஸ்டைல். அரசியல் மட்டும் விதிவிலக்கு.


ஐரோப்பாவில் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அ‌‌ஜீத் திடீரென்று இளம் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‌ஜி உங்க டைர‌க்சனில் நடிக்கணும். ஸ்கி‌‌ரிப்ட் ரெடி பண்ணுங்க. ஒரே வ‌ரியில் விருப்பத்தை கூறியிருக்கிறார் அ‌‌ஜீத்.


அந்த இயக்குனர், பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன்.


தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். அ‌‌ஜீத்தே நேரடியாகப் பேசியதால் சிம்பு படத்தை அவர் தள்ளி வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.

நலமுடன் வீடு திரும்பினார் லதா ரஜினி

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா ரஜினி நேற்று நலமுடன் வீடு திரும்பினார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியும் கல்வியாளருமான லதா ரஜினிகாந்துக்கு சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்து வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு 1 மணிக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.


உடனடியாக அவரை, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழா பணிகளில் தீவிரமாக இருந்ததால் லதா ரஜினிக்கு இந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.


ரஜினியும், மகள் சௌந்தர்யாவும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர்.
லதா ரஜினியின் உடல் நிலை நேற்று முழுமையாக சீரானது. இதைத் தொடர்ந்து ரஜினி, சௌந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் லதாவை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது நலமுடன் ஓய்வில் உள்ளார் லதா ரஜினி என்று போயல் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா என்ன பன்ணினாலும் பிடிக்கும் : மம்தா மோகன்தாஸ்

சிவப்பதிகாரம் படத்தின் மூலம் மம்தா மோகன்தாஸை தமிழுக்கு அழைத்து வந்தார் கருபழனியப்பன்.

அந்தப் படம் புஸ்ஸாகிவிட அதன்பிறகு, எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மறுபடியும் தெலுங்க்குப் போனார் மம்தா. அங்கே இவரது ஹாட் கவர்ச்சி ரசிகர்கள் மனதில் ஒரு நிரந்த இடத்தைப் பெற்றுத்தந்துவிட, நாகர்ஜுனாவுடன் இரண்டு படங்கள் நடித்தார்.


இப்போதும மலையாளத்தில் தலைகாட்டி வரும் மம்தா மீண்டும் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்திருக்கிறார். (இங்கதான் கொட்டித் தர்றாங்களாக்கும்) ஆனால் அவரைக் கேட்டால், தமிழ்சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பா இங்கே சாதிப்பேன் என்கிறார்.

இவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஹீரோ சூர்யாதானம். அவர் என்ன பண்ணிலும் மம்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.


அட... சினிமாவிலதாங்க.....

என்ஜாய் வித் குஷ்பு!

நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வித்தியாசங்களை செய்து வரும் விஜய் டிவி அடுத்து ‘அழகிய தமிழ் மகன்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை துவங்க உள்ளது.

இதில் பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே அனுமதி. இளம் இளைஞர்களை போட்டியில் கலந்து கொள்ள வைத்து அவர்களில் அழகிய தமிழ் மகன் ஒருவருக்கு மகுடம் சூட்ட போகிறது விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக பொறுப்பேற்றிருப்பவர் குஷ்பு. இளைஞர் நிகழ்ச்சியில் குஷ்பு... அட ஒரு குட் காம்பினேஷன்தாங்க!


‘இந்தப் போட்டியில் பங்கு பெறும் தமிழ் மகன்கள் அழகுக்கு இலக்கணமாக இருக்கவேண்டுமாம். விஜய் டிவி & குஷ்பு பணியில் அழகின் இலக்கணம் என்னவோ...

தமன்னாவுக்கு கார்த்தி சிபாரிசு

கார்த்தி தமன்னா இனைந்து நடித்தப்படம் ‘பையா’ இந்தப் படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இநத ஜோடி இணைகிறது.

படத்தின் பெயர் சிறுத்தை. இத்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள். ஆனால் அவர் தம்மைவிட உயரம் அதிகம் என்று நினைத்தாரோ என்னவோ “அனுஷ்கா வேண்டாம் தமன்னாவை போடுங்கள்...” என்று தயாரிப்பு மற்றும் இயக்குநரிடம் பலமாகவே சிபாரிசு செய்தாராம் இந்த பையா.


ஹீரோ சொன்னா மறுபேச்சு பேசமுடியுமா என்ன...?

ஹீரோவுக்கு ஜோடியாக தமன்னாவையே ஒ.கே. செய்திருக்கிறது இயக்குர் தரப்பு...

நடிகைகள் உடலைக் காட்டினால்தான் படம் ஓடும்!: மல்லிகா ஷெராவத்

நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத்.


பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார்.


போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது:


இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.


அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டு நான் பட்ட அவமானம் கொஞ்சமல்ல. அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி உன்னிடம் இல்லை என்று கூறி நிராகரித்தனர்.


ஆனாலும் நான் முயற்சியை கைவிடவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோகிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முக அழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.


அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது குவாலிஸ் என்ற படத்தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது.இதற்கு அடுத்து மர்டர் என்ற படத்தில் நடித்தேன்.


இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே போர்த்திக் கொண்டு குடும்பப் பெண்ணாகத்தான் நடிப்பேன் என்றால் இனி வேலைக்காகாது.


எனக்கு யாரும் போட்டியில்லை... நானும் யாருக்கும் போட்டியில்லை.ஐஸ்வர்யா ராய்க்கு முக அழகு நன்றாக உள்ளது. இதே போல் அவரது உடல் தோற்றமும் நன்றாக உள்ளது. எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது என்றார்.

நாய் இறந்த சோகம்...நாளெல்லாம் அழுத நமீதா!

தனது செல்ல நாய் கூஃபி இறந்த சோகம் தாளாமல் ஒரு நாள் முழுக்க அழுது புலம்பினார் நமீதா.அதற்கு மேல் சென்னையில் இருக்கப் பிடிக்காததால் நேற்று மாலை கிளம்பி மும்பை சென்றார்.நமீதா சூரத்திலிருந்தபோது வளர்த்த நாய் இந்த கூஃபி. சென்னையில் அவர் குடியேறியதும் தன் செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்துவிட்டார்.


சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது.இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம்.


பின்னர் படப்பிடிப்பையல்லாம் கேன்சல் செய்துவிட்டு, மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்றார்."கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. எனவே கொஞ்ச நாளைக்கு மன ஆறுதலுக்காக அம்மா அப்பாவிடம் இருக்கப் போகிறேன்" என்றார் நமீதா!

ரஞ்சிதாவைப் போல் எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது! தமன்னா ஆவேசம்!

'ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக எல்லா நடிகைகளையும் தப்பாக நினைக்க கூடாது'' என்று நடிகை தமன்னா கூறினார்.

கார்த்தி தமன்னா ஜோடியாக நடித்து லிங்குசாமி டைரக்டு செய்துள்ள புதிய படம் பையா'. இந்த படத்தை பற்றிய அறிமுக கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.


அதில் கார்த்தி, தமன்னா, டைரக்டர் லிங்குசாமி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிபதிவாளர் மதி, வசனகர்த்தா பிருந்தாசாரதி, எடிட்டர் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.


அப்போது தமன்னாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றிற்கு தமன்னா அளித்த பதில்களும் வருமாறு:


கேள்வி: சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடியாக நடித்தீர்கள். இப்போது அவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடியாக நடிக்கிறீர்கள் இரண்டு பேரில் காதல் காட்சிகளில் நடிப்பதற்கு சவுகரியமாக இருந்தவர் யார்?


பதில்: அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்'.


கேள்வி: ஆன்மிகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

பதில்: கோவிலுக்கு போவேன், சாமி கும்பிடுவேன் அதோடு சரி. ஆன்மிகத்தில் மிகையாக ஈடுபாடு கிடையாது.


கேள்வி: சிலநாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவரும் நடிகை ரஞ்சிதா விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது, ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது.


கேள்வி: ரஞ்சிதா விவகாரத்தினால் ஒட்டுமொத்த நடிகைகளின் இமேஜ்' பாதிக்கப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது.


கேள்வி: இந்திப்படத்தில் நடிப்பதை சில நடிகைகள் பெருமையாக கருதுகிறார்களே... அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. எனக்கு தமிழிலும், தெலுங்கிலும் நிறைய படங்கள் இருக்கிறது. என்வேலை, எனக்கு திருப்தியாக இருக்கிறது என்றார்

நான் சாமியார்களை நம்புவதில்லை-திரிஷா

எந்த ஆசிரமத்துக்கும் நான் இதுவரை போனதில்லை, சாமியார்களை நம்புவதுமில்லை... கடவுளை மட்டுமே நம்புவேன்'' என்று நடிகை திரிஷா கூறினார்.



விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சிலம்பரசன், திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


இதில் நிருபர்களுக்கு த்ரிஷா அளித்த பேட்டி:

சில நடிகைகள் ஆசிரமத்துக்கு சென்று சாமியாரிடம் ஆசி பெற்று வருகிறார்களே? நீங்கள் எந்த ஆசிரமத்துக்காவது சென்றிருக்கிறீர்களா?

அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஆசிரமங்களுக்கு நான் போனதில்லை. இனிமேல் நான் போகமாட்டேன். நான் சாமியைத்தான் நம்புவேன், சாமியார்களை நம்புவதில்லை. கடவுளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதெப்படி ஒரு சாதாரண மனிதன் கடவுளாக முடியும்... மனிதர்களை கடவுளாக நினைத்து காலில் விழுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.


விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே?

கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் நான் நடித்தேன்.படத்தில் சிலம்பரசனைவிட, வயதில் மூத்த பெண்ணாக நடித்திருக்கிறீர்களே?அதற்காக நான் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் சண்டை போட்டேன். அவர், என்னை சமாதானப்படுத்தினார். அப்படி ஒரு காம்பினேஷன் நல்ல க்யூட்டாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.


கேரள கிறிஸ்தவப் பெண்கள் யாரையாவது பார்த்து அவர்கள் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டீர்களா?

இல்லை. கௌதம் மேனன் சொன்னதைக் கேட்டு நடித்தேன். அவர் சொன்ன சில விஷயங்களில் எனக்கு முதலில் சம்மதமில்லை. ஆனால் கடைசியில் அவர் சொன்னதுதான் ஜெயித்தது, என்றார் த்ரிஷா.

ஆப்தரக்ஷகா… கண்கலங்கிய ரஜினி!

தனது நெருங்கிய நண்பர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த கடைசி படமான ஆப்த ரக்ஷகாவை பார்த்து கண் கலங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.ஏவிஎம் பிரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்தார் ரஜினி. அவருடன் படத்தின் இயக்குநர் வாசுவும் இருந்தார்.


சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி வெளியாகி வசூலிலும், அதிக நாட்கள் ஓடியதிலும் புதிய சாதனையைப் படைத்தது. தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகளால வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி மட்டுமே.விஷ்ணு வர்தன் நடித்த ஆப்தமித்ரா கன்னடப் படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி.இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகமான ஆப்தரக்ஷகா தயாராகியுள்ளது.

பி வாசு இயக்க விஷ்ணுவர்தன் நடித்துள்ளார். அவர் நடித்த கடைசி படம் இதுவே. இந்தப் படம் முடிந்ததுமே விஷ்ணுவர்தன் மரணமடைந்துவிட்டார்.விமலாராமன், சந்தியா, லட்சுமி கோபாலசாமி, சீனிவாசமூர்த்தி, வினித், கோபால்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த இரண்டாம் பாகத்தை சந்திரமுகியின் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும், அதில் ரஜினி நடிக்க வேண்டும் என விரும்பினார் வாசு. ஆனால் இதற்கு ரஜினி ஆரம்பத்திலிருந்தே பிடிகொடுக்காமல் இருந்தார்.


கருத்து எதுவும் கூறவில்லை அவர். ஆனால் இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் ரஜினி.இந்த நிலையில், இந்த படத்தை ரஜினிக்கு சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிரிவியூ தியேட்டரில் சிறப்பு காட்சியாக திரையிட்டுக் காட்டினார்கள். படத்தைப் பார்த்து முடித்ததும் இயக்குநர் பி வாசுவை கட்டித் தழுவிப் பாராட்டிய ரஜினி, ‘ரொம்ப பிரமாதம்பா’ என்று புகழ்ந்தார்.குறிப்பாக கடைசி 10 நிமிட காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது படம் எனப் பாராட்டினார்.


சந்திரமுகி பாகம் -2 அல்லது வேட்டையன் என்ற பெயரில் இந்தப் படத்தை தமிழில் எடுக்க பி வாசு திட்டமிட்டுள்ளார்.இந்தப் படத்திலும் ரஜினி நடிக்க வேண்டும் என்று வாசு தன் விருப்பத்தை மீண்டும் கூற, ரஜினி முடிவு எதுவும் சொல்லாமல், வாசுவை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.ரஜினி படம் பார்த்த பிறகு, சிவாஜி பிலிம்ஸ் உரிமையாளர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோருக்கும் ஆப்த ரக்ஷகா திரையிட்டுக் காட்டப்பட்டதாம். படத்தைப் பார்த்து வாசுவைப் பாராட்டினார் ராம்குமார்.‘அண்ணன் (ரஜினி) சரின்னா, இப்பவே பூஜைக்கு நாங்க தயார்’ என்றார் பிரபு.அண்ணன் முடிவு என்னவோ..!

மீண்டும் கார் ரேஸ்… பயிற்சியில் பங்கேற்ற அஜீத்!

நடிகர் அஜீத் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று வெள்ளிக்கிழமை இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பயிற்சியில் அவர் பங்கேற்று கார் ஓட்டினார். அதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.கார் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அஜீத். நடிப்பைவிட கார் பந்தயத்தையே அதிகம் விரும்பிய அவர், ஒரு கட்டத்தில் 6 மாதங்கள் நடிப்பு, 6 மாதங்கள் ரேஸ் என்று அறிவித்தார்.


ஆனால் படங்கள் தொடர்ந்து அடிவாங்க, கோடம்பாக்கத்தில் இடத்தைத் தக்கவைப்பதே முக்கியம் என அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவுரை கூறினர்.இதனால் எப்போதாவது ஆசைக்கு ஒரு முறை ரேஸ் கார்களை ஓட்டிப் பார்த்துக் கொள்வார். அந்த வகையில் மீண்டும் ஒரு முறை கார் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜீத்.எம் ஆர் எப் சேலன்ஞ் 2010 என்ற பெயரில் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இருங்காட்டுக் கோட்டையில் சிறப்பு கார் பந்தயம் நடக்கிறது.



இதற்கான ‘வார்ம் அப் போட்டி’ இன்று வெள்ளிக்கிழமை சென்னை மோட்டார் ரேஸ் ட்ராக்கில் நடந்தது. அஜீத் இந்த போட்டியில் பங்கேற்று 1600 சிசி எம்ஆர்எப் பார்முலா காரை ஓட்டினார். அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் மற்றும் அஸ்வின் சுந்தர் ஆகியோர் உதவினர்.ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் அஜீத்தும் பங்கேற்கிறார் என எம்ஆர்எப் செய்திக் குறிப்பு கூறுகிறது.


இந்த இறுதிப் போட்டியின் உணவு இடைவேளையில் பிரபல பாடகர்கள் ஷாலினி சிங் மற்றும் கார்த்திக் பாடுகிறார்கள்.ஆக.. வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலும் ஆக்ஷனும் கலந்த தினமாக இருக்கும், சென்னை ரசிகர்களுக்கு!

ரஞ்சிதா தலைமறைவினால் மணிரத்னம் அப்செட்

நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம்.


ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.


கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கலில் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, “எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்

சிம்புவை முத்தமிட்டது தவறல்ல: திரிஷா

சிம்பு திரிஷா முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று திரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:


முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்த மிட்டேன். அதில் தவறல்ல.இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் டைரக்டர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன்.


திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கேரக்டரை பாராட்டி மெயிலில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன்.

இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை.“ஜெஸ்சி” போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது.ரவிதேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தனர். நானும் சம்மதித்தேன். ஆனால் அதற்கு மொத்தமாக நிறைய நாட்கள் கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களில் நடிக்க வேண்டி இருப்பது பற்றி சுட்டி காட்டினேன். பிறகு அப்படத்தில் இருந்து விலகி விட்டேன்.

எனக்கு பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருப்பது பற்றி எனக்கு தெரியாது.கமல் என்னை அழைத்து யாவரும் கேளிர் பட கேரக்டர் பற்றி சொன்னார். அப்படத்தில் நான் வித்தியாசமாக தெரிவேன். என் உடைகளை புதிய ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயார் செய்கிறார்கள். கமல் எதையும் கச்சிதமாக செய்யக்கூடியவர். படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே தயார்படுத்திக்க சொல்வார்.

200 ஆண்டுகளுக்கு முந்தைய 'தேவலீலை'!

200 ஆண்டுகள் பின்னோக்கி எடுக்கப்படும் திகில் கலந்த மாயாஜால சினிமா வான 'தேவலீலை' முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.உலக சக்தி அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று ஒருவன் தவமிருந்து பெறுகிறான்.


அவனுடைய தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான்.பவுர்ணமி இரவுக்குள், அவன் ஒரு வேலையை செய்தாக வேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்திகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்ற நிலை.இதை அவன் செய்து முடித்தானா இல்லையா என்பதை கிளைமேக்சாக வைத்து தேவலீலை படத்தை உருவாக்கி வருகின்றனர்.


200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடக்கிறது.சிருங்கேரி, தர்மஸ்தலா, குதிரைமுக்கு, செஞ்சி, சித்தூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மலைகள், காடுகள் அடர்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.கதையின் நாயகன் தனக்குமார். நாயகிகள் ரூபா பட், கவிதா, ஸ்வேதா, புஷ்பா நாயக், சுனிதா என மொத்தம் ஐந்து பேர்.


நாயகன் கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் உண்டாம்.கதை-திரைக்கதையை துளசி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு-இயக்கம், கிருஷ்ணா-பிரபாகர். இசை, துர்கா. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்

காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக.


கார்த்திக் (சிம்பு)சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டதா‌ரி. ஸ்லோமோஷனில்ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும்கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது.
மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார். பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை.
இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம்.சிம்புவுக்கு லைஃப் டைம் கேரக்டர். அலட்டாமல் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். த்‌ரிஷா மீது கண்டதும் காதல் கொள்வதும், ரயிலில் தனிமையில் த்‌ரிஷாவை தன்வயப்படுத்துவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள்.
அமெ‌ரிக்காவில் த்‌ரிஷாவிடம்தனது காதலியை விவ‌ரிக்கும் இடத்தில் சிம்பு வாங்குவது டிஷ்டிங்சன். அசத்தலான காட்சி, அருமையான நடிப்பு.யாரையும் ஒருமுறை காதலிக்க‌த் தூண்டும் கதாபாத்திரம்த்‌ரிஷாவுக்கு. மலையாள கிறிஸ்தவ பெண் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். காதலில் உருகுவதும், அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் தடுமாறுவதும் த்‌ரிஷாவுக்கு இயல்பாக வருகிறது.
காதல் காரணமாக திருமணத்தை நிறுத்துகிறவர் சிம்புவை விட்டு பி‌ரிந்து செல்வதை ஏற்க முடியவில்லை. தாலிகட்டும் நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியதை அவரது வீட்டில் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வதும் ஆச்ச‌ரியம். இவர்கள்இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொருவர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ்.
இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து சி‌ரிக்கிறதுதிரையரங்கு. ஹீரோவுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும் நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குன‌ரின் புத்திசாலித்தனம்.இவரது பணத்தில்தான் சிம்பு த்‌ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில்படத்தின் லா‌ஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.
அதிசயிக்கத்தக்க காதல் சிச்சுவேஷன் எதுவும் இல்லாமல் வசனங்களின் மூலமே காட்சிகள் நகர்கின்றன. நீ என்னைவிட ஒரு வயசு சின்னவன். தம்பின்னு வீட்ல சொன்னா யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க என்று சிம்புவை த்‌ரிஷா கலாய்க்கும் இடம், ஆலப்புழையில் இருவரும் சந்திக்கும் இரவு‌க் காட்சி என முக்கியமான அனைத்துக் காட்சிகளும் வசனங்கள் மூலமே வண்ணமாக்கப்படுகிறது. முக்கியமாக திருமணத்தை நிறுத்திய அன்று த்‌ரிஷா, சிம்புசந்திக்கும் அந்த பௌர்ணமி இரவு.
தமிழ் சினிமாவின் சிறந்த பத்து காதல் காட்சிகளை தேர்வு செய்தால் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும்.ஆண்டனி பாபு வழக்கமான காதலைஎதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த்‌ரிஷாவுக்குஇருக்கிறார். தவிர்த்திருக்கலாம். த்‌ரிஷாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கும், இயக்குனருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை.
குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கிவரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.படத்தின் மிகப் பெ‌ரிய ப்ளஸ் இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டும் அற்புதம். ஓசானா பாடல் எழுந்து ஆட வைக்கும் புத்துணர்ச்சி. எடிட்டர் படத்தின் இரண்டாம் பகுதியில் ‌ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்தி‌ரி போட்டிருக்கலாம்.தனது காதல் கதையை சிம்பு திரைப்படமாக எடுக்கும் யுக்தி பாராட்டுக்கு‌ரியது என்றாலும், சிம்புவும், த்‌ரிஷாவும் இணைந்துவிட்டது போல் காட்டி இறுதியில் 90 டிகி‌ரியில் கதையை மாற்றுவது சின்ன தடுமாற்றம்.
சின்னச் சின்ன குறைகளை மீறிஇந்தக் காதல் நம்மை ஈர்க்கவே செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா... விருப்பத்துக்கு‌ரிய தேர்வு.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் புதிய படம்

ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் ட்‌ரீம் வொர்க்ஸ் ஸ்டுடியோஸ் அடுத்து வார் ஹார்ஸ் என்ற படத்தை தயா‌ரிக்கிறது.அனில் திருபாய் அம்பானியின் பிக் பிக்சர்ஸ் இதன் ஒரு பார்ட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

வார்ஹார்ஸ் - போர் குதிரை - 1982ல் MichaelMorpurgo எழுதிய நாவல். முதலாம் உலகப் போ‌ரின் பின்னணியில் ஒரு சிறுவனுக்கும் குதிரை ஒன்றுக்கும் நடுவில் உள்ள நட்பை சொல்லும் கதையிது. இதை படித்தது முதல் படமாக்க வேண்டும் என்று விரும்பியதாகஸ்பீல்பெர்க் தெ‌ரிவித்துள்ளார்.

படத்தின் திரைக்கதையை லீ ஹாலுடன் இணைந்து ஸ்பீல்பெர்க் எழுதுகிறார். படத்தை அவரே இயக்குவாரா இல்லை வேறு யாரேனும் இயக்குவார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

referred at : http://tamil.webdunia.com/entertainment/film/fromhollywood/0912/22/1091222083_1.htm

புதிய மர்லின் மன்றோ

இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் மர்லின் மன்றோவின் புகழ் அப்படியேதான் இருக்கிறது. மர்லினின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் மை வீக் வித் மர்லின் என்ற படம் ஹாலிவுட்டில் தயாராகிறது.


மர்லின் நடித்த படத்தின் அசிஸ்டெண்ட் டைரக்டர் எழுதிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.மர்லின்மன்றோவாக நடிக்க ஸ்கேர்லெட் ஜான்சன், லிண்ட்ஸே லோகன் போன்ற பிரபலங்களின் பெயர்கள் ப‌ரிசீலிக்கப்பட்டன. இறுதியில் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்தவர், மிச்செல் வில்லியம்ஸ். மை வீக் வித் மர்லின் படத்தின் இயக்குனரும், தயா‌ரிப்பாளரும்மிச்செலின் பெயரை தேர்வு செய்திருந்தாலும், இதுவரை அவர் மர்லின் வேடத்தில்நடிக்க சம்மதம் தெ‌ரிவிக்கவில்லையாம்.


மிச்செல் சமீபத்தில் மரணமடைந்த ஹீத் லெட்ஜ‌ரின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

referred at : http://tamil.webdunia.com/entertainment/film/fromhollywood/0912/08/1091208103_1.htm

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.


இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிதயாரிக்கிறார்.

கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

தடுக்கி விழுந்தார் வடிவேலு!

பில்டிங் ஸ்டிராக், பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக் என்று எந்த நேரத்தில் சொல்ல ஆரம்பித்தாரோ, வடிவேலுவின் பேஸ்மென்ட் ரொம்பதான் ஆட்டம் கண்டிருக்கிறது.


பல கோடிகளை .சுருட்டி விட்டதாக தன் நிழல் மாதிரி இருந்தவர்கள் மீதே குற்றம் சுமத்த வேண்டிய அளவுக்கு ஏமாந்த சோனகிரியாகிவிட்டார் வைகைப்புயல். நல்லவேளையாக இதில் தலையை நுழைத்த ஒரு சில பெரிய மனிதர்கள் இரண்டு பேரையும் நெருங்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.


போகிற போக்கை பார்த்தால் இந்த காம்பினேஷனை மீண்டும் ஒரு படத்தில் நாம் கண்ணார காணக் கூடும் என்கிறார்கள். நல்ல விஷயம்தான்.


நாம் சொல்லப் போவது நிஜமாகவே அவரது பேஸ்மென்ட் வீக்கை பற்றி! சுறா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா லேடி ஆண்டாள் பள்ளியில் சில தினங்களுக்கு முன் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட வடிவேலு திடீரென்று ஒயர் தடுக்கி கீழே விழ, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.


நாலைந்து கேமிராவை வைத்து நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இவரது பெயரை சொன்னதும் ஆர்வத்தோடு எழுந்து ஓடிய வடிவேலு, கீழே தரையில் கிடந்த கேமிரா ஒயர்களை கவனிக்கவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்தார். நல்லவேளையாக முகத்தில் காயம் ஏதுமில்லை.


விழுந்த வேகத்தில் எழுந்த வடிவேலு, ஒன்னும் சதியில்லையே... என்று கேட்டு சிரித்துவிட்டு அதே வேகத்திலேயே மீண்டும் மேடைக்கு ஓடினார்.

ஹாலிவுட் படங்களில் பிஸியாகிவிட்ட சிந்து மேனன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு ரவுண்ட் வந்த ஈரம் பட புகழ் சிந்துமேனன், இப்போது இரு ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படங்களின் படப்பிடிப்பும் துவங்கிவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் படப்பிடிப்புகள் நடப்பதால் அடிக்கடி இருநாட்டுக்கும் பறந்தபடியுள்ளாராம்.


இந்தப் பட வாய்ப்பு குறித்து அவர் கூறுகையில், "இது இன்று நேற்று வந்த வாய்ப்பல்ல, கடந்த 2007-ம் ஆண்டிலேயே என்னை ஒப்பந்தம் செய்தார்கள். கடந்த அக்டோபரில்தான் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். இன்னொரு ஆங்கிலப் பட வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பிராட் பீட்டர் என்பவர் இயக்குகிறார். ஒரு பெண்ணுக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு ஆணின் கதை இது..." என்றார்.


இந்தப் படத்துக்கான வாய்ப்புக்காக இன்டர்வியூவுக்கெல்லாம் போனாராம் சிந்து. இன்னொரு படத்தில் சற்று குண்டாகத் தெரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். அதற்காக இரண்டு மாதங்களுக்கு நன்கு சாப்பிட்டு குண்டாகப் போகிறாராம் சிந்து.


அதே நேரம், இரண்டு கன்னடப் படங்கள், இரு தமிழ்ப்படங்கள், இரு தெலுங்குப் படங்கள் என இங்கும் எக்கச்சக்க வாய்ப்புகளாம்.


தனது கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்றால் மட்டுமே ஒப்புக் கொள்கிறாராம்.

பெண் குழந்தைக்கு தந்தையானார் ஷாம்!

12 பி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, இயற்கை, உள்ளம் கேட்குமே என வித்தியாசமான படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கிக் தெலுங்குப் படம் ஆந்திராவில் வசூல் சாதனை புரிந்தது. இப்போது அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தில்லாலங்கிடியில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கிறார். அகம் புறம், தூசி என புதிய படங்கள் ரிலீஸாக உள்ளன.


ஷாமின் மனைவி தஷிஷுக்கு நேற்று பெங்களூர் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்தார் ஷாம்.


ஷாமுக்கு ஏற்கெனவே ஸமைரா என்ற பெண் குழந்தை உள்ளார்.

பத்மபூஷன் விருது பெற்றார் இசைஞானி

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கைகளால் பெற்றுக் கொண்டார் இசைஞானி இளையராஜா.

7 ந் தேதி டில்லியில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில் இந்த விருதை பெற்றுக்கொண்ட ராஜா, தன்னுடன் விருது பெற்றவர்கள் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இதே போன்றதொரு நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் நடந்தது. அப்போது பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டவர்களுள் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசைஞானி இளையராஜா பத்மபூஷன் விருது பெற்ற அதே 7 ந் தேதி லண்டனில் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். லண்டன் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள் அங்குள்ள மக்கள்.

ரஹ்மானின் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களின் கேள்வி பதிலுக்காகவும் நேரம் ஒதுக்கியிருந்தார் இசைப்புயல். தமிழகத்திலிருந்து சென்ற இந்த இருபெரும் இமயங்களுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த கவுரவம், ஒட்டுமொத்த தமிழர்களுக்கே கிடைத்த கவுரம்தான்!

ரம்பா - இந்திரன் திருமண நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த மேஜிக்உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.