சினிமா பின்னணி இல்லாததால் கஷ்டப்பட்டேன் : ஜெனிலியா
‘துஜே மேரி கஸம்’ இந்தி படம் மூலம் சினிமாவுக்கு வந்தேன். விளம்பர படங்கள் தான் அந்த வாய்ப்பை எனக்கு வாங்கி தந்தது. எனது பெற்றோர், சினிமாவை சார்ந்தவர்கள் அல்ல. நாங்கள் நடுத்தர குடும்பம்.

சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்திலிருந்து வந்தேன். அதனால் ஆரம்பத்தில் திரைத்துறையில் நிலைக்க கஷ்டப்பட்டேன். சில தவறான படங்களை ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு திரைத்துறையில் நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் மூலம் நல்லது, கெட¢டது அறிய முடிந்தது.
மும்பைக்கு சென்றால், ‘இந்தி படங்களைவிட தமிழில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே’ எனக் கேட்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறேன். என்னை முன்னணி நடிகையாக்கியது தென்னிந்திய சினிமாதான். அதன் பின் ஆமிர்கான் தயாரித்த ‘ஜானே யா ஜானே னா’ படம்தான் என்னை இந்தியில் பிரபலமாக்கியது.

இப்போது தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறேன். இப்படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
Colombo Time
0 Response to "சினிமா பின்னணி இல்லாததால் கஷ்டப்பட்டேன் : ஜெனிலியா"
Post a Comment