இம்சை தரும் ஹீரோயின்!

சிவா மனசில சக்தி, மதுரை சம்பவம் என்று இரண்டே படங்கள். 'பொளந்து கட்டுதே பொண்ணு' என்று ரசிகர்களிடம் ஏதோபித்த பாராட்டுகள் பெற்றார் அனுயா.

ஆனால் ஆளு எங்கய்யா...? என்று கேட்கிற மாதிரி ஆகிவிட்டது நிலைமை. காரணம்? சம்பளம் பெரிய பிரச்சனை இல்லை. தமிழ் தெரியாது அனுயாவுக்கு.
தமிழ் என்ன, ஆங்கிலம், இந்தி கூட தெரியாமல் கோடம்பாக்கத்தில் கோலோச்சும் நடிகைகளுக்கு மத்தியில் இதெல்லாம் ஒரு காரணமா?


அப்படியில்லை. தனக்கு கதை சொன்னால் மட்டும் போதாது. முழு ஸ்கிரிப்டும் பேப்பரில் வேண்டும் என்கிறாராம். (போச்சுரா...?) இருந்தா கொடுத்திருவாங்க. இங்கு பாதி பேர் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு போய் யோசிக்கிற ஆளுங்களாச்சே. அனுயாவின் கண்டிஷனை கேட்டதும் ஆளே எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
லேட்டஸ்டாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் அனுயா, அந்தகால நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் அந்த படத்தில். "எனக்கு ஆங்கிலத்தில் ஸ்கிரிப்டை டிரான்ஸ்லேட் பண்ணி அனுப்புங்க. தேதியை பிறகு ஒதுக்கி தர்றேன்" என்கிறாராம்.
தானமா வந்த வாய்ப்பு. பல்லை பிடிச்சு பார்க்குதே பொண்ணு...

0 Response to "இம்சை தரும் ஹீரோயின்!"

Post a Comment