கமல் படத்துக்கு இளைய இசையமைப்பாளர்
கமல் நடிக்கும் யாவரும் கேளிர் விரைவில் தொடங்கப்பட உள்ளது. த்ரிஷா கமலுக்கு ஜோடி. கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார்.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தயாரிக்கிறது. சமீபகாலமாக இளைய இசையமைப்பாளர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பளித்து வருகிறார் கமல். தசாவதாரம் படத்தின் பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு
தேவி ஸ்ரீபிரசாத்துக்கு அளிக்கப்பட்டது. உன்னைப்போல் ஒருவனில் ஸ்ருதிஹாசன். யாவரும் கேளிர் படத்துக்கு இசையமைக்கயிருப்பவர் தமன் சாய்.
தேவி ஸ்ரீபிரசாத்துக்கு அளிக்கப்பட்டது. உன்னைப்போல் ஒருவனில் ஸ்ருதிஹாசன். யாவரும் கேளிர் படத்துக்கு இசையமைக்கயிருப்பவர் தமன் சாய். தெலுங்கில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த தமன், பாய்ஸ் படத்தில் நடித்த நான்கு இளைஞர்களில் ஒருவர். டிரம்மரான இவரது இசையார்வமே இவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ஈரம் படத்துக்கும் தமன்தான் இசை. இவரது இசையில் முன்தினம் பார்த்தேனே, இனிது இனிது படங்கள் விரைவில் வெளிவரயிருக்கின்றன. தமனைப் பொறுத்தவரை அவரது கேரியரில் கிடைத்திருக்கும் முதல் பெரிய வாய்ப்பு இது. அசத்துங்க பையா.
Colombo Time
0 Response to "கமல் படத்துக்கு இளைய இசையமைப்பாளர்"
Post a Comment