காம உணர்வை தூண்டும் பிகினி : வித்யாபாலன்

பிகினி உடையால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். காம உணர்வை தூண்டும் அந்த உடையை அணிந்து நான் நடிக்க மாட்‌‌டேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.





பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பட்டியில் இடம் பிடித்திருக்கும் வித்யாபாலன் தற்போது நடித்து முடித்துள்ள இஷ்கியா படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறார். இதன் அடுத்த பரிணாம வளர்ச்சி பிகினி உடைதான் என்று பாலிவுட் பக்கம் செய்திகள் பரவி வருகின்றன.






இதுபற்றி அம்மணியிடம் கேட்டால்… அலறியடித்து ஓடுகிறார்.
பிகினியா… நானா…? நோ… நோ! என்று சொல்லும் வித்யாபாலன், நான் கண்ணை உறுத்தும் கவர்ச்சிக்கு எதிரானவள். பா படத்திலும் சரி, இஷ்கியா படத்திலும் சரி… சேலைகளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். சேலைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில்தான் நமது உண்மையான அழகு தெரியும். அதுதான் எனக்கு சவுகரியமாகவும் இருக்கிறது. பிகினி உடை தேவையில்லாத‌ை சர்ச்சைகளைத்தான் உருவாக்கும். காம உணர்வையும், காம எண்ணங்களையும் தூண்டி விடும் அந்த உடையை அணிந்து நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.

0 Response to "காம உணர்வை தூண்டும் பிகினி : வித்யாபாலன்"

Post a Comment