காதலித்து திருமணம் செய்யவே விருப்பம் : ஸ்ரேயா
தனுசுடன் நடித்த குட்டி படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். நான் அழகாக இருப்பதாக கடிதங்களும் குவிகிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என் அழகின் ரகசியம் தியானம், யோகா உடற்பயிற்சியும் செய்கிறேன்.சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் டான்சர் ஆகி இருப்பேன். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யுடன் நான் நடனம் ஆடியது மறக்க முடியாது அனுபவம்.
சென்னையில் எனக்கு பிடித்த இடம் பீச் கோவையில் ஈசா யே
கா ஆஸ்ரமும் பிடிக்கும். அங்கு போகும் போதெல்லாம் ஆஸ்ர மத்தில் தங்கி விட்டு வருகிறேன்.
கா ஆஸ்ரமும் பிடிக்கும். அங்கு போகும் போதெல்லாம் ஆஸ்ர மத்தில் தங்கி விட்டு வருகிறேன்.சிக்கு புக்கு படத்தில் தற்போது நடித்து வருகிறேன். அதில் கிளாமராக தோன்றுகிறேன். விஜய்யுடனும் மீண்டும் சேர்ந்து நடிப்பேன். இன்றைய கால கட்டத்தில் நிறைய இளம்பெண்களுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை ஆசை இருக்கிறது. அந்த கனவை விடாதீர்கள். அதை நிறைவேற்ற கடினமாக உழையுங்கள்.
தமிழ் திரையுலகம் கதாநாயகர்களை சார்ந்து உள்ளது. அது மாற வேண்டும். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் நடிக்க ஆசை. தமிழில் எனக்கு பிடித்த நடிகர் ரஜினி. இந்தியில் ஷாருக்கானை பிடிக்கும். நடிகைகளில் திரிஷா, மதுபாலாவை பிடிக்கும். அஜீத் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன்.
பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தை விட காதலித்து திருமணம் செய்யவே எனக்கு விருப்பம் உள்ளது. ஆனாலும் இதுவரை கல்யாணம் பற்றி முடிவு செய்ய வில்லை என்றார்.
Colombo Time
0 Response to "காதலித்து திருமணம் செய்யவே விருப்பம் : ஸ்ரேயா"
Post a Comment