ஒரே படத்தில் நயன், நமிதா, சினேகா

தெலுங்கில் நடிக்கும் பாலகிருஷ்ணா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவர். கிருஷ்ணா என்பதற்கேற்ப ஒரே படத்தில் பல கோபிகர்களுடன் கொஞ்சும் ரமணா இவர்.


கோபிகர்கள் என்றால் ஓரமாக வந்து நிற்கும் துக்கடா நடிகைகள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு கோடி வாங்கும் முன்னணிகள்.



தற்போது இவர் சிம்ஹா என்ற படத்தில் நடிக்கிறார். சிங்கத்துக்குதான் ஒன்றுக்கு மேற்பட்ட துணை இருக்குமே. பாலகிருஷ்ணாவுக்கும் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு பீல்டில் முன்னணியில் இருக்கும் நயன்தாரா, நமிதா, சினேகா மூவரும் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி. மூவருக்கும் டூயட்டும் சில காட்சிகளும் கியாரண்டி. படம் அங்கு தோல்வியடைந்தாலும் இந்த நடிகைகளுக்காக தமிழில் டப் செய்யப்படும் என்பதும் உறுதி.




நீங்கள் அடிக்க வரமாட்டீர்கள் என்றால் இன்னொரு தகவல். நாம் இங்கு சினேகா என்று குறிப்பிட்டிருப்பது நமது ஹோம்லி சினேகா அல்ல. தெலுங்கில் கவர்ச்சி கடைவி‌ரிக்கும் சினேகா உல்லல். என்ன... சினேகா ரசிகர்கள் ஹேப்பிதானே?

0 Response to "ஒரே படத்தில் நயன், நமிதா, சினேகா"

Post a Comment