தயாநிதி அழகிரியின் ‘தூங்கா நகரம்’

வாரணம் ஆயிரம்’ படத்தை வாங்கி ரீலிஸ் செய்து வெற்றி கண்ட தயாநிதி அழகிரி அடுத்தாக ‘தமிழ்படம்’ என்ற படத்தை தயாரித்தார்.


இந்தப் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓட, தயாரித்த முதல் படத்திலேயே வெற்றி பெற்ற தயாநிதியை ஒட்டு மொத்த திரையுலகமும் திரும்பிப் பார்க்கிறது. இப்போது அவர் அடுத்த ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகிவிட்டார்.



அடுத்து இவர் தயாரிக்கும் படம் ‘தூங்கா நகரம்’. கதை மதுரையும் அதை சார்ந்த பகுதியிலும் சுழல்வதாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் கவுரவ் இந்தப் படத்தை இயக்குகிறார். பசங்க ‘விமல்’, நாடோடிகள் ‘பரணி’ ரேணிகுண்டா ‘நிஷாந்த்’ நடிக்கிறார்கள். அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். சுந்தர் சி. பாபு இசை அமைக்க விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

0 Response to "தயாநிதி அழகிரியின் ‘தூங்கா நகரம்’"

Post a Comment