ராதிகா பாணியில் ரோஜா
நடிகை ரோஜா சினிமாவில் நடித்து திருமணம் ஆன பிறகு தெலுங்குதேசம் கட்சில் குதித்தார். தேர்தலில் நின்றவருக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.ஆனாலும், மக்கள் பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வேன் என்று அறிவித்த நடிகை ரோஜா அதன் பிறகு அரசியலில் தொடர்ந்தார்.
இப்போது திடீரென சின்னத்திரையில் குதிக்க உள்ளார். ஏற்கனவே ராதிகா, ரம்யாகிருஷ்ணன் என சினிமா நடிகைகள் பட்டாளம் சின்னத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க
ரோஜாவின் வரவு சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.டிவியில் நடிப்பதால் அரசியல் பணிகள் பாதிக்கப்படாதா என்று கேட்டால், ‘நிச்சயமாக பாதிக்காது. ஏன் என்றால் அரசியல் பணிகள் போக மீதி நேரத்தைதான் டிவிக்காக ஒதுக்கப் போகிறேன்...’ என்கிறார்.
அரசியல்தான் கைகொடுக்கவில்லை. டிவியாவது கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.
Colombo Time
0 Response to "ராதிகா பாணியில் ரோஜா"
Post a Comment