விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை : அஜித்

அஜித் முன்னை மாதிரி இல்லாமல் இப்போது ரொம்பவே மாறிவிட்டார் போலும். ’யாராவது என்னைப் பற்றி தவறாக பேசினால் அதற்கு நான் தேவையில்லாமல் விளக்கம் கொடுப்பதில்லை


இதனாலே பல பிரச்சனைகள் எனக்குத் தூரமாகப் போய்விடுகின்றன. நமக்கு சிலரைப் பிடிக்காது. அதற்கு இதுதான் காரணம் என்று இல்லை. காரணமே இல்லாமல் கூட ஒருவரை நமக்கு பிடிக்காமல் போகலாம். அந்த வகையில் எனக்கும் கூட சிலரைப் பிடிக்காமல் போகலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.



எவ்வளவு நல்லது பண்ணினாலும் சிலரை மட்டும் சந்தோஷப்படுத்தவே முடியாது. இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்டேன். எந்த வித விமர்சனங்களுக்கும் நான் இனிமேல் பதில் சொல்லப் போவதில்லை’ என்கிறார் அஜித்.



நெசமாலுமே மனுஷன் மாறிட்டாரு போல...!

0 Response to "விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை : அஜித்"

Post a Comment