எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஸ்ரேயா குத்தாட்டம்

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி போட்டு ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டதால் ஓவர் நைட்டில் உச்சத்தில் இருந்து கீழே விழுந்தவர் நடிகை ஸ்ரேயா.
வடிவேலுவுடன் ஆட்டம் போட்ட நடிகை தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று அந்த நேரத்தில் அஜித் படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயா இந்த அனுபவத்துக்கு பிறகு ஒத்தப்பாட்டு என்றால் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்.



இருப்பினும் பல வாய்ப்புகள் கைநழுவிப் போயின. இதனால் வருத்தத்தில் இருந்த அம்மணி, கந்தசாமியை ரொம்பவே நம்பியிருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு கந்தசாமி பெயர் வாங்கிக் கொடுத்தாலும், அடுத்து புதிய பட வாய்ப்புகள் எதுவும் கணியவில்லை.



வாய்ப்பில்லாமல் இருக்கும் ஸ்ரேயா இப்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் சிக்கியிருக்கிறார். தெலுங்கில் தான் இயக்கி வரும் புலி படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாட்டுக்கு ஸ்ரேயாவை ஆட்டம் போட வைக்க முடிவு செய்த எஸ்.ஜே., அணுக வேண்டிய முறையில் அணுகி டபுள் ஓ.கே.வும் வாங்கி விட்டாராம். புலியை தமிழில் தனது நடிப்பில் எடுக்க திட்டமிட்டிருக்கும் சூர்யா, அந்த படத்திலும் ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறாராம்!

0 Response to "எஸ்.ஜே.சூர்யா படத்தில் ஸ்ரேயா குத்தாட்டம்"

Post a Comment