சினிமாவே வேண்டாம்... அரசியலுக்கு வரட்டா?! தியேட்டருக்கு வெளியே பட்டையைக் கிளப்பி வருகிறது அஜீத் சினிமா!

நேரு ஸ்டேடியத்தில் அஜீத் அன்று வைத்த நெருப்பு இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் எல்லாப் பக்கங்களிலும் எரிகிறது. அஜீத் நினைத்தாலும், அவருக்காக எழுந்து நின்று கைதட்டிய ரஜினி நினைத்தாலும், அடக்க முடியாத அளவுக்கு இருக்கிறது விவகாரம்!


முதல்வர் கருணாநிதிக்கு 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா'. அதில் மேடை ஏறி மைக் பிடித்த அஜீத், மறைமுகமாகப் பலரையும் பதம்பார்த்தார். எந்தப் பிரச்னைகள் வந்தாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கைவிடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி, தமிழனே கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும், விட மாட்டேங்குறாங்க... வந்தாலும் மிரட்டுறாங்க! - இப்படி அஜீத் பேசப் பேச, கூட்டத்தில் செம கரகோஷம். முதல் வரிசையில் இருந்த ரஜினி, படக்கென்று எழுந்து நின்று கை தட்டி, தன்னுடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது.



அஜீத் ஒரு மலையாளி. அவருக்கு தமிழ், தமிழ்நாடு குறித்த பாசமே கிடையாது. தமிழ்நாட்டுக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, தமிழ் ரசிகர்கள் தரும் பணத்தில் உயிர் வாழ்ந்துகொண்டு, தமிழனுக்காகப் போராட, வாதாட அஜீத் வர மாட்டாரா? நடிகர் சங்கத்தில் இருந்தால் சங்கம் சொல்வதைக் கேட்க வேண்டும். மீறி வர மாட்டேன் என்பது ஒழுங்குமீறிய செயல். அதை யார் செய்தாலும் விட மாட்டோம் என்று ஒரு தரப்பினரும்...


திடீர் திடீரென்று தமிழினப் பாசம் பொத்துக்கொண்டு பீறிட்டு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதும், அதற்குப் பின்னால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அநாதையாக விட்டுவிடுவதுமாக திரையுலகம் இதுவரை எத்தனையோ பிரச்னைகளைக் கையில் எடுத்த வேகத்தில் கைவிட்டு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் போராடினால் போதாது என்று ராமேஸ்வரம் போய்ப் போராடியது சினிமா உலகம். ஆனால், அடுத்த சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மொத்தமாகக் கொன்று குவிக்கப்பட்டபோது, சென்னை தெருவுக்குக்கூட வரவில்லை. ஒகேனக்கல் பிரச்னைக்காக, கர்நாடக மாநிலத் தேர்தல் முடியட்டும் என்று முதல்வர் கருணாநிதி சொன்னதுமே சினிமாக்காரர்களது கோபம் வற்றிப்போனது. அதாவது, தமிழ்நாடு அரசாங்கத்துக்குக் கோபம் வராத விஷயங்களாகப் பார்த்துப் போராடுவதையும் பேட்டிகள் கொடுப்பதையும் தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் அஜீத் பேசியதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று மற்றொரு தரப்பினருமாக இந்தப் பிரச்னைக்கு இரண்டு முகங்கள் இருந்தன.



ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், அஜீத்துக்கு எதிராகப் பேட்டியளிக்க... 'தலயைத் திட்டினா தலையே இருக்காது' என்று திட்டியபடி ஒரு குரூப் அவரது வீட்டைத் தாக்கியதாக வழக்கு பதிவானது. முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்குத் திடீரென்று வந்த ரஜினி, 'அஜீத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை' என்றும் சொல்லிப் போனார். அன்றைய தினமே அஜீத்தும், கோபாலபுரம் வந்தார். கருணாநிதியைப் பார்த்தார். 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார். 'நீங்கள் பேசியதில் உறுதியாக இருக்கிறீர்களா?' என்று கேட்டபோது, கருணாநிதி ஸ்டைலில் 'கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்றார். தான் சொன்னது சரியே என்ற முடிவில் அஜீத் இருப்பதையே இது காட்டியது.


ஸ்டேடியத்தில் எழுந்து நின்று கை தட்டிய கோபம் ரஜினி மீது பாக்கி இருக்க... சொன்னதில் என்ன தவறு என்று கோபாலபுரம் வாசலில் அவர் கொடுத்த பேட்டி சினிமா சங்கத்தினர் சீற்றத்தை அதிகப்படுத்தியது. ரஜினி, அஜீத் இருவர் மீதும் நடவடிக்கை எடுப்போம், செயல்படவே விட மாட்டோம் என்று அறிக்கைப் பேட்டிகள் வந்தன. சினிமாவில் அதிகபட்சத் தண்டனையான 'ரெட் கார்டு' போடப் போகிறார்கள் என்றும் வதந்தி கிளம்பியது. எப்படி முடியும்? ரஜினி நடிக்கும் 'எந்திரன்' சன் டி.வி-யின் தயாரிப்பு. அஜீத்தின் 50-வது படத்தை எடுக்கப் போவது தயாநிதி அழகிரி. எனவே, இரண்டு பேரையும் நினைத்த நேரத்தில் கை வைக்க முடியாது என்று சிரிக்கிறார்கள்.ஆனால், எதுபற்றியும் கவலைப்படுகிற ஆளாக அஜீத் இல்லை என்கிறார்கள் நண்பர்கள். அஜீத் உண்மையைத்தான் பேசினார் என்பதற்கு ஒரே சாட்சி ரஜினி. அஜீத் பேசியதும் எழுந்து நின்று கைதட்டியதன் மூலம் அது தெளிவானது. அவர் பேசியதை முதல்வருக்கு எதிரானதாகச் சிலர் திசை திருப்பினர்.


ஆனால், தன்னை யார், எதற்காக மிரட்டினார்கள் என்பதை முதல்வரைச் சந்தித்தபோது அஜீத் சொல்லிவிட்டார். அஜீத் சொன்ன விளக்கத்தை முதல்வர் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதற்குச் சாட்சி, கலைஞர் டி.வி-யில் வரும் 'பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா' விளம்பரத்தில் இதுவரை வராமல் இருந்த அஜீத் பெயர் இப்போது வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு மேலும் அதைப் பெரிதுபடுத்த அஜீத் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் அவரது நண்பர்கள், மேலும் சில விளக்கங்களைச் சொல்கிறார்கள்.தமிழ்ப் பிரச்னை, தெலுங்குப் பிரச்னை என்று அஜீத் பார்க்கவில்லை.


கருணாநிதியா... ஜெயலலிதாவா என்ற வேறுபாடும் இல்லை. ஒரு நடிகன் எல்லா விஷயத்துக்கும் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் தவறு என அஜீத் நினைக்கிறார். அரசியலைக் கட்சிகள் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கென்ன என்பதுதான் அவரது கொள்கை. ஆளுங்கட்சிக்கு ஆதரவான விழாக்களில் மட்டும் கலந்துகொண்டால் மற்ற கட்சிகளை எதிர்ப்பதாக ஆகாதா என்றும் அவர் கேட்கிறார். மற்ற ஹீரோக்கள் இதைப்பற்றி யோசிப்பது இல்லை. அஜீத் யோசிக்கிறார். அதுதான் அவருக்குள்ள சிக்கல். அவர் அரசியலை முழுமையாகத் தெரிந்துகொள்ள நினைக்கிறார். அதனால்தான் ஒதுங்கி நிற்க விரும்புகிறார். படத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சிலர் அறிவுரை சொன்னதும், கோபமானார்.


இது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது. அதைப்போல அரசியலுக்கு அட்வைஸ் பண்ணினால் யார் ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் அவரது கேள்வி. ஒரு கட்டத்தில், 'கேமராவுக்கு முன்னால நிற்கிறதே எனக்குப் பிடிக்காமப் போயிடும்போல.. இப்படியே கொட்டிக் கொட்டி என்னையும் அரசியலுக்கு வரவெச்சிருவாங்கபோல.


மன்னிப்பு கேட்டாத்தான் சினிமாவில் நடிக்க முடியும்னா, சினிமாவே வேண்டாம்னுகூட முடிவெடுத்திருவேன். அப்போ, எனக்கு செக்யூரிட்டி? பேசாம அரசியலுக்கு வரட்டா? என்று மிக நெருங்கிய நண்பர்களிடம் மனதின் பாரத்தை இறக்கி ஆலோசனை கேட்டிருக்கிறார். பலரும் பலவிதமாக ரூட் காட்ட, இறுதி முடிவை இப்போது தள்ளிவைத்திருக்கிறார்! என்கிறார்கள்.கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் சினிமாக்காரர்கள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும் மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். 1996 மற்றும் 2001 தேர்தலில் ரஜினியும், 2006 தேர்தலில் வாக்குகளைப் பிரித்துக்காட்டி விஜயகாந்த்தும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். 'அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிரான கொந்தளிப்புகள் இருந்தாலும், அதைத் தூண்டிவிட்டு சூட்டை அதிகப்படுத்துபவர்களாக ஹீரோக்கள் இருந்தார்கள். இந்த அடிப்படையில் வரும் தேர்தலில் அஜீத் வருகை அமைந்துவிடக் கூடும். அஜீத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஒட்டப்படும் போஸ்டர்கள் இதற்கான க்ரீன் சிக்னலாகப் பளிச்சிடுகின்றன!

கல்லூரியில் ஒருநாள் ஆசிரியையான ஸ்ரேயா

ஆமதாபாத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பிரபல பிசினஸ் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர்.




மாணவ- மாணவிகளுக்கு பாடமும் நடத்தி உள்ளனர். அவர்களை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தெலுங்கு, தமிழ் படங்களில் ஸ்ரேயா முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடித்த “சிவாஜி” தமிழ் படம் இந்தியில் “டப்பிங்” செய்து வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். ஆமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் கல்லூரி ஸ்ரேயாவை ஒரு நாள் தங்கள் கல்லூரியில் பாடம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தது. அதை ஏற்று 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் ஆசிரியையாக இருந்து பாடம் நடத்தினார்.






சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதுபற்றி ஸ்ரேயா கூறும்போது, "திரைப்பட பிசினஸ் பற்றி பாடம் நடத்த அக்கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்காக இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் பற்றி 5 நாட்கள் படித்து விஷயங்களை தெரிந்து கொண்டேன். சர்வதேச அளவில் நமது திரைப்படங்களின் மார்க்கெட் நிலவரம் குறித்தும் விவரங்கள் சேகரித்தேன். பிறகு மாணவ-மாணவிகள் மத்தியில் அதுபற்றி சொற்பொழிவு நிகழ்த்தினேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது." என்கிறார் ஸ்ரேயா.

விடுமுறைக்கு காத்திருக்கும் பையா

பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுடன் மல்லுக்கு நின்றது லிங்குசாமியின் பையா. பையாவுக்கு பல வருடங்கள் முன்பே தொடங்கப்பட்ட படம் என்ற சீனியா‌ரிட்டி அடிப்படையில் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுக்கு அனுமதி வழங்கினர்.


ஆயிரத்தில் ஒருவன் வெளியான பிறகு எப்போது வேண்டுமானாலும் பையாவை வெளியிடலாம். இது சங்கம் கொடுத்த தீர்ப்பு. ஜனவ‌ரி இறுதியிலேயே பையா திரைக்கு வரும் என்றார்கள். பிறகு பிப்.19க்கு ‌ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இப்போது அந்த‌த் தேதியிலும் படம் வெளியாகவில்லை. ஏன்? ஐபிஎல் போட்டிகள், மாணவர்களுக்கு தேர்வு என்று பல நெருக்கடிகள் இருப்பதால் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. இந்த நெருக்கடிகள் காரணமாக கோடை விடுமுறைக்கு ‌ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் இன்னொரு படம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.



ரசிகர்களுக்கு ஹாலிடே ட்‌ரீட் காத்திருக்கு.

கார் ரேஸ் : அ‌ஜீ‌த் கிளப்பிய சந்தேகம்

ரேஸ் ட்ராக்கிற்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் அ‌ஜீ‌த்குமார். இருங்காட்டுக் கோட்டையில் நடந்த எம்.ஆர்.எஃப். 1600 கார் ரேஸில் அ‌ஜீ‌த்தான் ஸ்டார் ஆஃப் தி ரேஸ்.


அ‌ஜீ‌த்தின் இந்த திடீர் முடிவு பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. மீண்டும் அ‌ஜீ‌த் ரேஸில் தீவிரமாக ஈடுபடுவாரா என்பது அதில் ஒன்று. கார் ரேஸில் அ‌ஜீ‌த் தீவிரமாக இருந்தபோதுதான் அவரது படங்கள் வ‌ரிசையாக தோல்வியடைந்தன. மேலும், ரேஸில் அடிபட்டால் அ‌ஜீ‌த்தை வைத்து படங்கள் தயா‌ரிப்பவர்கள் கதி என்னாகும் என்றும் கேள்விகள் கிளம்பின.



இந்த கேள்விகள் எழுப்பியவர்களை அ‌ஜீ‌த் கடுமையான மொழியில் கண்டித்தார். ஆனால் அவரது ரேஸ் மோகம் அதிக நாள் நீடிக்கவில்லை. தொடர் தோல்விகள், நெருக்கடிகள் காரணமாக ரேஸில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தார். அதேபோல் பல வருடங்கள் ரேஸில் கலந்து கொள்ளவுமில்லை. இந்நிலையில் இருங்காட்டுக் கோட்டையில் நடந்த ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். இப்போது எழும் கேள்வி, மீண்டும் ரேஸில் முழு வீச்சில் கலந்து கொள்வாரா?


ரசிகர்களும், தயா‌ரிப்பாளர்களும் பயப்பட வேண்டாம். அந்த மாதி‌ரி எந்த எண்ணமும் அ‌ஜீ‌த்துக்கு இல்லை. சென்னையில் நடந்ததால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டாராம். மற்றபடி சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் வயது, உடல் எடை எதுவும் தற்போது அ‌ஜீ‌த்திடம் இல்லை. சினிமாதான் அவரது ஒரே இலக்கு என்று நம்பிக்கை தருகிறார்கள் அ‌ஜீ‌த்துக்கு நெருக்கமானவர்கள்.

கவர்ச்சியில் கலக்கும் பிரியாமணி

பிரியாமணி தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து ஆந்திரா பட உலகையே அதிர வைத்து வருகிறார்.


அவரது அரைகுறை ஆடைப்படங்களை இணைய தளங்களில் பார்த்து 'பருத்தி வீரன்' முத்தழகியா இவர் என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.
தமிழில் சமீபத்தில் ரிலீசான 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆறுமுகம்' படங்களில் மூடிக்கொண்டுதான் நடித்தார். அதன் பிறகு 'துரோணா' என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலாக நீச்சல் உடையில் தோன்றினார். நீச்சல் உடை பட போஸ்டர்கள் ஆந்திரா முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தின.
தற்போது 'சாத்யம்' என்ற தெலுங்கு படத்தில் அதை விட ஒரு படி மேலே போய் ஜெகபதி பாபுவுடன் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கம் காட்டி உள்ளார்.


ஜெகபதி பாபுக்கும் பிரியாமணிக்கும் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கள் வருகிறது. இருவரும் பல வருடங்களில் இணைந்து நடித்துள்ளனர். 'சாத்யம்' பட படுக்கை அறை சீன்கள் காதலை நிரூபிப்பதாக உள்ளது என்கின்றனர். இந்த சூடான படங்கள் இணைய தளங்களில் பரவி வருகின்றன.



பிரியாமணியின் கவர்ச்சி படங்களை பார்த்து தமிழ், தெலுங்கு திரையுலக குத்தாட்ட நடிகைகளே ஆடிப்போய் உள்ளனர்.

அசல் படம் பார்த்தால் தங்கம் பரிசு!

அஜித்தின் அசல் படம் பார்க்க வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்கப்புதிர் ‌போட்டியை அறிவித்திருக்கிது அசல் டீம்!
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்‌கொண்டிருக்கும் அசல் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் ஒரு ‌போட்டி கூப்பன் வழங்கப்படுகிறது.


அந்த கூப்பனை நிரப்பி, அசல் படம் பார்த்தற்கான டிக்கெட்டை இணைக்க வேண்டும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ரசிகர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் 30 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க நாணயமும், இரண்டாவது 30 நபர்களுக்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது 60 பேருக்கு தலா கால் பவுன் தங்க நாணயமும், நான்காவது 225 பேருக்கு வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர 660 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்துள்ளது.

இப்போட்டி பிப்ரவரி 15 முதல் மார்ச் 1ம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய பிரபுதேவா-நயன்தாரா!

பிரபுதேவா நயன்தாராவின் கள்ளக்காதல் கண்டு ஊரே ஆனந்தப்படுகிறது. ஆனால் அதை உருப்படியாக கொண்டாட முடியாமல் தவிக்கிறது ஜோடி.


சமீபத்தில் கலைஞர் பாராட்டு விழாவில் அசத்தலாக ஆடி, ஊர் பேசும் பேச்சுக்கு உறுமி மேளம் அடித்தார்கள். ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார்கள். ஆனால், இருவரின் ஆட்டத்தை பார்த்து பெரும் கோபத்திலிருக்கிற ரமலத் மட்டும், "வரட்டும் அவ. பார்த்துக்கிறேன்" என்று பல்லை கடிக்கிறார். இந்நிலையில் பெங்களுருக்கு கன்னட படத்தின் போட்டோ செஷனுக்காக போயிருந்த நயன்தாரா, கூடவே பிரபுதேவாவையும் அழைத்துப் போயிருந்தார். திரும்பி வரும்போது சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிக் கொண்டது இந்த ஜோடி.


வேறொரு வி.ஐ.பி காக காத்திருந்த செய்தியாளர்கள் இவர்கள் கை கோர்த்தடி வருவதை கண்டதும் உஷாரானார்கள். கேமிராவை அந்த பக்கம் திருப்பலாம் என்றிருந்தால்...? ஜோடி எஸ்கேப். அங்கிருந்து தப்பி பன்னாட்டு விமான தளம் வழியாக வெளியேறிவிட்டார்களாம். ஏமாந்து போன செய்தியாளர்கள், இப்படி எல்லாருக்கும் பயந்து ஓடுறதுக்கு பதிலாக, ஒரு முடிவுக்கு வந்து அதை முறையா அறிவிச்சு தொலையலாமே என்கிறார்கள்.


திருட்டு தம்முக்குதான் ருசி அதிகம்!

இம்சை தரும் ஹீரோயின்!

சிவா மனசில சக்தி, மதுரை சம்பவம் என்று இரண்டே படங்கள். 'பொளந்து கட்டுதே பொண்ணு' என்று ரசிகர்களிடம் ஏதோபித்த பாராட்டுகள் பெற்றார் அனுயா.

ஆனால் ஆளு எங்கய்யா...? என்று கேட்கிற மாதிரி ஆகிவிட்டது நிலைமை. காரணம்? சம்பளம் பெரிய பிரச்சனை இல்லை. தமிழ் தெரியாது அனுயாவுக்கு.
தமிழ் என்ன, ஆங்கிலம், இந்தி கூட தெரியாமல் கோடம்பாக்கத்தில் கோலோச்சும் நடிகைகளுக்கு மத்தியில் இதெல்லாம் ஒரு காரணமா?


அப்படியில்லை. தனக்கு கதை சொன்னால் மட்டும் போதாது. முழு ஸ்கிரிப்டும் பேப்பரில் வேண்டும் என்கிறாராம். (போச்சுரா...?) இருந்தா கொடுத்திருவாங்க. இங்கு பாதி பேர் ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு போய் யோசிக்கிற ஆளுங்களாச்சே. அனுயாவின் கண்டிஷனை கேட்டதும் ஆளே எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.
லேட்டஸ்டாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் அனுயா, அந்தகால நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் அந்த படத்தில். "எனக்கு ஆங்கிலத்தில் ஸ்கிரிப்டை டிரான்ஸ்லேட் பண்ணி அனுப்புங்க. தேதியை பிறகு ஒதுக்கி தர்றேன்" என்கிறாராம்.
தானமா வந்த வாய்ப்பு. பல்லை பிடிச்சு பார்க்குதே பொண்ணு...

பாவனாவுக்கு விரைவில் திருமணம்

அஜீத் ஜோடியாக நடித்த “அசல்” படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு, மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்துள்ளார்.


பாவனா 2002-ல் திரையுலகுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள திருச்சூரில் வசிக்கிறார்.
மலையாள நடிகைகள் பலர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். கோபிகா, நவ்யா நாயர், காவ்யா மாதவன் உள்ளிட்ட பலருக்கு திருமணம் முடிந்துள்ளது. எனவே பாவனாவுக்கும் விரைவில் திருமணம் நடத்த தாய் புஷ்பா, தந்தை பாலச்சந்திரமேனன் முடிவு செய்துள்ளனர்.


பொருத்தமான மாப்பிள்ளையை அவர்கள் தேடி வருவதாக பாவனா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். திருமண தகவல் மையங்களுக்கு சென்றும் வரன் தேடி வருகிறார்கள். ஜாதகமும் பார்க்கின்றனர்.

பாய் ஃப்ரெண்டுடன் ரீமாசென்

நடிகர் நடிகைகள் சில சமயங்களில் பார்ட்டிகள் கொடுத்து சக நடிகர் நடிகைகளை அசத்துவது உண்டு. அந்த வகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரேயாவும் ரீமாசென்னும் கலந்து கொண்ட படங்கள் இப்போது இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளன.


விஷேசம் என்னவென்றால் இந்தப் படங்களில் ஸ்ரேயா, ரீமா சென் இருவரும் பாய்ப்ரெண்டுடன் மது குடிப்பது போலவும் பின்பு அவரது சட்டையை கழற்றுவது போலவும் காட்சிகள் உள்ளன. ஏற்கனவே ரீமாசென், ஸ்ரேயா தனக்கு தோழி தான் என்று பேட்டி அளித்து இருந்தார். இந்நிலையில் இப்போது இணையத்தில் வெளியாகி உள்ள இவர்கள் இருவரும் பாய் ப்ரெண்டுடன் கூத்தடிக்கும் இப்படங்கள்தான் இப்போது ஆன்லைன் மீடியாவின் ஹாட் டாபிக்.

விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை : அஜித்

அஜித் முன்னை மாதிரி இல்லாமல் இப்போது ரொம்பவே மாறிவிட்டார் போலும். ’யாராவது என்னைப் பற்றி தவறாக பேசினால் அதற்கு நான் தேவையில்லாமல் விளக்கம் கொடுப்பதில்லை


இதனாலே பல பிரச்சனைகள் எனக்குத் தூரமாகப் போய்விடுகின்றன. நமக்கு சிலரைப் பிடிக்காது. அதற்கு இதுதான் காரணம் என்று இல்லை. காரணமே இல்லாமல் கூட ஒருவரை நமக்கு பிடிக்காமல் போகலாம். அந்த வகையில் எனக்கும் கூட சிலரைப் பிடிக்காமல் போகலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.



எவ்வளவு நல்லது பண்ணினாலும் சிலரை மட்டும் சந்தோஷப்படுத்தவே முடியாது. இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்டேன். எந்த வித விமர்சனங்களுக்கும் நான் இனிமேல் பதில் சொல்லப் போவதில்லை’ என்கிறார் அஜித்.



நெசமாலுமே மனுஷன் மாறிட்டாரு போல...!

ராதிகா பாணியில் ரோஜா

நடிகை ரோஜா சினிமாவில் நடித்து திருமணம் ஆன பிறகு தெலுங்குதேசம் கட்சில் குதித்தார். தேர்தலில் நின்றவருக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.
ஆனாலும், மக்கள் பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வேன் என்று அறிவித்த நடிகை ரோஜா அதன் பிறகு அரசியலில் தொடர்ந்தார்.

இப்போது திடீரென சின்னத்திரையில் குதிக்க உள்ளார். ஏற்கனவே ராதிகா, ரம்யாகிருஷ்ணன் என சினிமா நடிகைகள் பட்டாளம் சின்னத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க ரோஜாவின் வரவு சின்னத்திரை ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

டிவியில் நடிப்பதால் அரசியல் பணிகள் பாதிக்கப்படாதா என்று கேட்டால், ‘நிச்சயமாக பாதிக்காது. ஏன் என்றால் அரசியல் பணிகள் போக மீதி நேரத்தைதான் டிவிக்காக ஒதுக்கப் போகிறேன்...’ என்கிறார்.
அரசியல்தான் கைகொடுக்கவில்லை. டிவியாவது கை கொடுக்குமா என்று பார்க்கலாம்.

'ஆயிரத்தில் ஒருவன்’ தோல்வி காரணம் என்ன?


தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த செல்வராகவனுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ தந்தது அதிர்ச்சித் தோல்வி.

சில வருடங்களை செலவிட்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படப்பிடிப்பு கிராபிக்ஸ் என இதற்காக மெனக்கெட்ட செல்வராகவன் படம் முடிவடைந்து வெளியிடும் நேரத்தில் விக்ரமின் கால்ஷீட் கிடைக்க அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கினார். இதனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இருந்து செல்வராகவனின் கவனம் சிதறியது.

ஒரு கட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். அதன் பிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான் இதற்கு மேலும் விட்டால் அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் தாமே முன்னின்று அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை வெளியிட்டார். மேலும் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதில் பத்து சதவீதத்தை கூட ‘ஆயிரத்தில் ஒருவன்’ பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

என் சந்தோஷத்தை கெடுக்காதீங்க! : நயன்தாரா

இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க என்று நயன்தாரா கூறியுள்ளார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. முதல் படத்தில் பாவாடை தாவணியில் அழகு பதுமையாக ஜொலித்த நயன்தாரா... அடுத்தடுத்த படங்களில் கிளாமரை கூட்டினார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல அம்மணியின் அழகும் மெல்ல மல்ல மறையத் தொடங்கியது. இதனை நேரடியாகவே பலரும் நயனிடம் தெரிவித்ததால் சமீப காலமாக அவர் ஆயுர்வேத சிகிச்சையில் இறங்கியிருக்கிறார் என்பது தனி சங்கதி. சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நெருக்கம் காதலாகி கசிந்துருகிய நயன்தாரா, அதன் பின்னர் சிம்புவிடம் இருந்து விலகினார்.




விடாமல் துரத்திய சிம்புவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தமிழ் சினிமாவில் சிலகாலம் தலைகாட்டப் போவதில்லை என்ற அதிரடி அறிவிப்புடன் ஐதராபாத் போனார். அந்த நேரத்தில் சிம்பு பிரிவால் வாடிய நயனுக்கு ஆறுதலாக சேர்ந்தவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா. காலப்போக்கில் பிரபுதேவாவுடனான நட்பு காதலாக மாறியது. இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு நெருக்கமானார்கள். கல்யாணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதுபற்றி நயனிடமோ, பிரபுவிடமோ கேட்டால்... பதில் சொல்ல மறுத்து வந்தனர்.




இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன் ஜோடி போட்டு ஆட்டம் போட்டார் நயன்தாரா. இதுபற்றி பேட்டியளித்த பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாராவை உதைக்கப் போவதாக பகிரங்கமாகவே அறிவித்தார். இதுகுறித்து நயன்தாராவிடம் நிருபர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். அதற்கு அவர் அளித்த பதில் ரமலத்தை எச்சரிக்கும் விதமாகவும் இருந்தது. நயன்தாரா கூறுகையில், கடந்த ஆண்டு எனக்கு சோதனையான ஆண்டு. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம். நான் நடித்த படங்கள் நன்றாக போகின்றன. பிரபுவுடன் சேர்ந்து நடனமாடியது, அதுவும் தமிழ் திரையுலகின் முக்கியமான விழாவில் நடனமாடியது மறக்க முடியாத அனுபவம். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் சந்தோஷத்தை கெடுக்காதீர்கள்... ப்ளீஸ்ல என்றார். அதோடு தன் மீது யாரும் அவ்வளவு எளிதாக கை வைத்து விட முடியாது என்றும் நயன்தாரா கூறியிருக்கிறார்.

GOA flim first on net

Part1~http://www.megaupload.com/?d=2SM3C5TN
Part2~http://www.megaupload.com/?d=3FK5ZSB1[b]
Part 3~http://www.megaupload.com/?d=ZZ8Q6ET2[/b]

Michael Jackson Collection




Instrumental Version - Michael Jackson



THE GIRL IS MINE - Michael Jackson ft. Will.i.am





Michael Jackson - The Way You Make Me Feel





Michael Jackson - 25 Years Thriller 2008




History Begins - Michael Jackson



1. Billie Jean

2. Way You Make Me Feel

3. Black or White

4. Rock With You

5. She's Out of My Life

6. Bad

7. I Just Can't Stop Loving You - Siedah Garrett, Michael Jackson

8. Man in the Mirror

9. Thriller

10. Beat It

11. Girl Is Mine - Michael Jackson, Paul McCartney

12. Remember the Time

13. Don't Stop 'Til You Get Enough

14. Wanna Be Startin' Somethin'




Love Songs - Michael Jackson


M.p3 -- HQ
1. Who's Lovin' You (single version) - Jackson 5
2. A Fool For You - Jackson 5
3. Everybody's Somebody's Fool
4. Got To Be There
5. We're Almost There
6. We've Got A Good Thing Going
7. Maybe Tomorrow (album version) - Jackson 5
8. Call On Me (original mix)
9. You Are There
10. One Day In Your Life
11. If I Don't Love You This Way
12. Wings Of My Love
13. I'll Come Home To You
14. I'll Be There (alternate version) - Jackson 5
Michael Jackson-30th Anniversary
1. Wanna Be Startin' Somethin' (w/ Usher, Mya and Whitney Houston)
2. Ben (Billy Gilman)
3. It Wasn't Me / Angel (Shaggy Feat, Ricardo Rikrock)
4. Heal The World (Monica, Deborah Cox, Mya, Rha Digga, Tamia)
5. I Want You Back (Li'l Romeo, Master P)
6. She's Out Of My Life (Marc Anthony)
7. Bootylicious / Billie Jean (Destiny's Child)
8. You Are Not Alone (Liza Minneli)
9. I Just Can't Stop Loving You (James Ingram, Gloria Estefan)
10. Man In The Mirror (98 Degrees, Usher, Luther Vandross)
11. Can You Feel It (Opening Jackson's Reunion Song)
12. ABC / OPP / Stop The Love You Save (The Jacksons)
13. I'll Be There (The Jacksons)
14. I Want You Back (The Jacksons)
15. Dancin' Machine (The Jacksons, 'N Sync)
16. Shake Your Body Down To The Ground (The Jacksons Closing Finale)
17. The Way You Make Me Feel (Michael Jackson)
18. Black or White (Slash, Michael Jackson)
19. Beat It (Slash, Michael Jackson)
20. Billie Jean (Michael Jackson)
21. You Rock My World (Usher, Michael Jackson)

குட்டி (தமிழ் திரைப்படம்)








போர்க்களம் (தழிழ் திரைப்படம்)








அசல் (2010) ஆடியோ 320 Kbps


01. Asal - Sunitha Menon
02. Kuthiraikku Theriyum - Surmukhi & SreeCharan
03. Tottodaing - Mukesh & Janani
04. Yengay Yengay - S. P. Bala
05. Yea Dushyantha - Surmukhi & Kumaran
06. Em Thandhai - Bharadwaj07. Yengay Yengay - Karthikeyan

Ravi Shankarரின் அருமையான இசை அல்பம்



Artist: Ravi Shankar

Title Of Album: Ragas & Talas

Year Of Release: 1963

Label: Angel Records

Genre: Indian Classical, RagaQuality: Lossless

Bitrate: Lossless

Total Time: 52:43

Total Size: 250 M



1. Rupak Tal

2. Raga Madhu-Kauns

3. Raga Jogiya

4. Dhun



கமல் படத்துக்கு இளைய இசையமைப்பாளர்

கமல் நடிக்கும் யாவரும் கேளிர் விரைவில் தொடங்கப்பட உள்ளது. த்‌ரிஷா கமலுக்கு ஜோடி. கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார்.


உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தயா‌ரிக்கிறது. சமீபகாலமாக இளைய இசையமைப்பாளர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பளித்து வருகிறார் கமல். தசாவதாரம் படத்தின் பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பு தேவி ஸ்ரீபிரசாத்துக்கு அளிக்கப்பட்டது. உன்னைப்போல் ஒருவனில் ஸ்ருதிஹாசன். யாவரும் கேளிர் படத்துக்கு இசையமைக்கயிருப்பவர் தமன் சாய்.



தெலுங்கில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த தமன், பாய்ஸ் படத்தில் நடித்த நான்கு இளைஞர்களில் ஒருவர். டிரம்மரான இவரது இசையார்வமே இவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த ஈரம் படத்துக்கும் தமன்தான் இசை. இவரது இசையில் முன்தினம் பார்த்தேனே, இனிது இனிது படங்கள் விரைவில் வெளிவரயிருக்கின்றன. தமனைப் பொறுத்தவரை அவரது கே‌ரிய‌ரில் கிடைத்திருக்கும் முதல் பெ‌ரிய வாய்ப்பு இது. அசத்துங்க பையா.

கோவா

சப் டைட்டில் சொல்கிற மாதிரியே இது வெங்கட் பிரபுவின் ஹா(கா)லி டே தான்!

எப்போதும் ஜாலி பண்ணியே பழகிய வெங்கட் பிரபு தமிழர்களால் அதிகம் உசுப்பேற்றப்பட்டதாலோ என்னவோ, கெக்கக் ‘Gay’ என்று சிரிக்க வைக்க முயல்கிறார். (ஸாரி பிரதர். இத உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கலே) மற்றபடி முதல் சீனிலிருந்து முதல் பாதி வரை அடிக்கடி சரவெடி!


பண்ணைபுரத்தில் துவங்குகிறது கதை. உள்ளூர் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட பிரேம்ஜி, அவர்தம் நண்பர்கள் வைபவ், ஜெய் மூவரையும் பஞ்சாயத்தில் நிறுத்துகிறார்கள். அங்கு சொல்லப்படும் தீர்ப்பு பிரண்ட்ஷிப்புக்கு குண்டு வைக்கிறது. (காசு வெட்டி போட்ருவாங்களாம். அப்படின்னா? அதுக்கு பிறகு இந்த நண்பர்கள் சேரவே கூடாதாம்) வேறு வழியில்லாமல் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிற அவர்கள், தனது கன்னங்கரேல் நண்பன் செக்கச் செவேல் வெள்ளைக்காரியோடு செட்டில் ஆவதை கண்டு அதிர்கிறார்கள். கோவாவுக்கு போனால் வெள்ளைக்காரியை லவ் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவோடு அந்த ஊருக்கு போனால்...?


நடக்கும் சம்பவங்களும், சங்கடங்களும் கலகலப்பும் கடுகடுப்புமாக படத்தை நகர வைக்கிறது. தம்மாத்துண்டு கதையில் பிரேம்ஜியிடம் ‘பிட்சா’ ருசி! ஜெய், வைபவ் இருவரும் தனி தனித்தனியாக போடுகிற காதல் டிராக்கிலும் கலகலப்பு.


கதையை பெரிதாக நம்பியதை விட பிரேம்ஜியின் அசட்டுத் தனத்தையே அதிகம் நம்பியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதுவும் சரிதான் என்பது போலவே அமைந்திருக்கிறது பிரேம்ஜியின் ரவுசு. வெள்ளைக்காரியை உருப்படியாக உஷார் பண்ணுவது இவர் மட்டும்தான் என்பதால், இவருக்கு கொஞ்சம் கூடுதல் அட்ராக்ஷன் கொடுக்க முயல்கிறார் வெங்கட். அதற்காக அவருக்கு நீலக்கலர் பெயிண்ட் அடித்து கிருஷ்ணராக உலவ வைப்பதெல்லாம் கண்ணை உறுத்துது சாமீய்... அடிக்கடி மைண்ட் வாய்சில் இவர் பாடும் ‘கண்கள் இரண்டால்...’ ஒரு கட்டத்தில் ஜவ்வடித்து போகிறது. ஜேம்ஸ் வசந்தன் இந்த பாடலுக்கு ராயல் டி கேட்காத வரைக்கும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

ஜெய்-பியா ஜோடி காதலில் இழையோடும் குழப்பமும், மென்மையும் அழகான ஹைக்கூ. காதலில் விழுந்த பின்பும் வெள்ளைக்காரிக்காக காத்திருக்கும் ஜெய்யின் பிடிவாதம் உடையும் போது நமக்கும் ஒரு நிம்மதி. வைபவ்-சினேகா காதலில் அநியாயத்திற்கு உப்புமாத்தனம். அதுவும் அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கும் நகையை வைபவ் அடித்துக் கொண்டு எஸ்கேப் ஆவதை சினேகா தனது பேவரைட் சிரிப்பால் மன்னிப்பது போங்கு ஆட்டம்! இந்த எபிசோடில் வந்து போகும் பிரசன்னா, சிம்பு இன்ப அதிர்ச்சியை தருகிறார்கள் ரசிகர்களுக்கு. அட, ஒரு சீனில் நயன்தாரா கூட! விசில் பறக்கிறது தியேட்டரில்.


ஐயர் கடை ஆப்பத்தில், ஆட்டுக்கால் பாயாவை சேர்த்த மாதிரி சம்பத்-அரவிந்த் கேரக்டர்கள். இரண்டு பேருக்கும் ஒரு டூயட் வேறு. கொடுமை! பிரேம்ஜியும் சம்பத்தும் பேசிக் கொண்டிருப்பதை அரவிந்த் ஒட்டுக் கேட்டு, அதை வேறு மாதிரி யூகித்துக் கொள்கிற காட்சி அதிபயங்கர அருவருப்பு.
வெங்கட் பிரபுவுக்கேயுரிய கடி ஜோக்குகள் ஆங்காங்கே தூவப்பட்டிருப்பதுதான் சீட்டுக்கு பக்கத்திலேயே கேன்ட்டீனை திறந்து வைத்த இன்பத்தை தருகிறது. ஒரு சாம்பிள்... மெதுவா சொல்லேண்டா என்று பிரேம்ஜி அதட்ட, சொன்ன வார்த்தையையே ஒவ்வொரு எழுத்தாக ஜெய் சொல்லும் அந்த காட்சி!

கோவாவுக்கு ஸ்பெஷல் ட்ரிப் அடித்த குளுமையை தருகிறது சக்தி சரவணனின் ஒளிப்பதிவு. யுவனின் இசையில் எல்லா பாடல்களும் அசத்தல்.
ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் இவர்களுடன் வெங்கட் பிரபு? இந்த கூட்டணிக்கு எதிரா கோடம்பாக்கத்திலே ஒரு அவசர பஞ்சாயத்தை கூட்டி யாராவது காசு வெட்டி போடுங்கப்போய்ய்ய்ய்ய்ய்

சினிமா பின்னணி இல்லாததால் கஷ்டப்பட்டேன் : ஜெனிலியா

சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்ததால் கஷ்டப்பட்டேன் என்றார் ஜெனிலியா.
அவர் கூறியதாவது,



‘துஜே மேரி கஸம்’ இந்தி படம் மூலம் சினிமாவுக்கு வந்தேன். விளம்பர படங்கள் தான் அந்த வாய்ப்பை எனக்கு வாங்கி தந்தது. எனது பெற்றோர், சினிமாவை சார்ந்தவர்கள் அல்ல. நாங்கள் நடுத்தர குடும்பம்.




சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்திலிருந்து வந்தேன். அதனால் ஆரம்பத்தில் திரைத்துறையில் நிலைக்க கஷ்டப்பட்டேன். சில தவறான படங்களை ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு திரைத்துறையில் நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் மூலம் நல்லது, கெட¢டது அறிய முடிந்தது.
மும்பைக்கு சென்றால், ‘இந்தி படங்களைவிட தமிழில் அதிக கவனம் செலுத்துகிறீர்களே’ எனக் கேட்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறேன். என்னை முன்னணி நடிகையாக்கியது தென்னிந்திய சினிமாதான். அதன் பின் ஆமிர்கான் தயாரித்த ‘ஜானே யா ஜானே னா’ படம்தான் என்னை இந்தியில் பிரபலமாக்கியது.



இப்போது தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறேன். இப்படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள்

"வருது வருது... ஆ விருது விருது..." என்று வருஷம் முழுக்க பாடிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.



இசைக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது கிடைத்திருக்கிறது இவருக்கு. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விருது தனக்கு கிடைக்க கூடும் என்று கூறியிருந்தார் அவர். நினைத்த மாதிரியே கிடைத்துவிட்டது.




ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்று தந்த அதே ஸ்லம் டாக் மிலியனர் படம்தான் இந்த விருதுகளையும் பெற்று தந்திருக்கிறது. ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்ததற்காகவும், அப்பாடலை எழுதிய குல்சாருடன் இணைந்து ஒரு விருதும் என இரண்டு கிராமி விருது பெற்றிருக்கும் ரஹ்மானின் சந்தோஷம் இந்த வருடம் முழுக்க தொடரும் போலிருக்கிறது.
இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் ரஹ்மான். இறக்கை கட்டி பறக்குதடா தமிழனோட மனசு...

காம உணர்வை தூண்டும் பிகினி : வித்யாபாலன்

பிகினி உடையால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். காம உணர்வை தூண்டும் அந்த உடையை அணிந்து நான் நடிக்க மாட்‌‌டேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.





பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பட்டியில் இடம் பிடித்திருக்கும் வித்யாபாலன் தற்போது நடித்து முடித்துள்ள இஷ்கியா படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறார். இதன் அடுத்த பரிணாம வளர்ச்சி பிகினி உடைதான் என்று பாலிவுட் பக்கம் செய்திகள் பரவி வருகின்றன.






இதுபற்றி அம்மணியிடம் கேட்டால்… அலறியடித்து ஓடுகிறார்.
பிகினியா… நானா…? நோ… நோ! என்று சொல்லும் வித்யாபாலன், நான் கண்ணை உறுத்தும் கவர்ச்சிக்கு எதிரானவள். பா படத்திலும் சரி, இஷ்கியா படத்திலும் சரி… சேலைகளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். சேலைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில்தான் நமது உண்மையான அழகு தெரியும். அதுதான் எனக்கு சவுகரியமாகவும் இருக்கிறது. பிகினி உடை தேவையில்லாத‌ை சர்ச்சைகளைத்தான் உருவாக்கும். காம உணர்வையும், காம எண்ணங்களையும் தூண்டி விடும் அந்த உடையை அணிந்து நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.