திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போராட வேண்டும் : ஸ்ரேயா

'ஜக்குபாய்' படம் தந்தை-மகள் சம்பந்தப்பட்ட கதை. தந்தையுடன் மகள் 5 நாட்கள் தங்கி செலவிடுகிறாள். அப்போது அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படம் தியேட்டருக்கு வரும் முன்பே திருட்டு வி.சி.டி.யில் வெளியானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. திரையுலகினரை ஒட்டு மொத்தமாக அதிர வைத்துள்ளது. இது திரையுலகின் முதுகெலும்பையே நொறுக்குவது போல் உள்ளது.



திரையுலகைச் சேர்ந்த ஆயிரக்கணக்கணக்கான மக்களின் வருமானத்தை நாசமாக்கியுள்ளது. ஒருநாள் திருட்டு வி.சி.டி. சினிமா உலகில் பெரிய சக்தியாக வளர்ந்து விடும் என்று அச்சப்படுகிறேன். எனவே அனைவரும் இணைந்து திருட்டு வி.சி. டி.க்கு எதிராக போராடவேண்டும். “குட்டி” படத்தில் எனது நடிப்பை பாராட்டி நிறைய பேர் பேசுகிறார்கள்.



“சிக்கு புக்கு” படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

0 Response to "திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போராட வேண்டும் : ஸ்ரேயா"

Post a Comment