'கோல்டன் குளோப்' விருது : 'அவதார்' சிறந்த படம்
ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய விருது “கோல்டன் குளோப் அவார்டு” கடந்த வருடம் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இவ்விருதுகள் கிடைத்தன. ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசைக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றார்.2010-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று அறிவிக்கப்பட்
டன. சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது அவதார் படத்துக்கு கிடைத்தது. இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த டைரக்டருக்கான “கோல்டன் குளோப்” விருதை பெற்றார்.
டன. சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது அவதார் படத்துக்கு கிடைத்தது. இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த டைரக்டருக்கான “கோல்டன் குளோப்” விருதை பெற்றார்.சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது ஜெப் பிரிட்ஸஸ்க்கு “கிரேசி ஹார்ட்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருதை சன்ட்ரா புல்லக் “த பிளைன்ட் சைடு” என்ற படத்தில் நடித்ததற்காக பெற்றார். வெளிநாட்டு மொழியில் சிறந்த படமாக “த ஒயிட் ரிப்பன்” என்ற ஜெர்மனிய படம் தேர்வு செய்யப்பட்டது.
“அவதார்” படம் உலகம் முழுவதும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலை அள்ளுகிறது. வேற்று கிரக மனிதர்கள் பற்றிய கதையே இப்படம்.
Colombo Time
0 Response to "'கோல்டன் குளோப்' விருது : 'அவதார்' சிறந்த படம்"
Post a Comment