பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறேன் : நயன்தாரா

நயன்தாரா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த அடூர்ஸ் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடித்த பாடிகார்டு படம் இன்று ரிலீசானது.




இதில் பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதுபற்றி நயன்தாரா சொல்கிறார்.
சித்திக் சிறந்த கதாசிரியர் பாடிகார்டு படத்தின் கதை பிடித்ததால் சம்பளத்தை குறைவாக பேசி நடித்தேன். காமெடி, திருப்பங்களுடன் யதார்த்தமாக படம் வந்துள்ளது.




சித்திக்கின் நெருங்கிய நண்பர் பிரபுதேவா. இரு பாடல் காட்சிகளுக்கு பிரபு தேவா டான்ஸ் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சித்திக் பிரியப்பட்டார். பிரபுதேவாவிடம் இதுபற்றி பேசினார். அவரும் சம்மதித்து இரு பாடல் காட்சிகளுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார்.




நான் பத்திரிகையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை என்று கூறுகின்றனர். பேச என்னிடம் எதுவும் இல்லாததால் ஒதுங்கி இருக் கறேன். இந்த வருடத்தை பொறுத்த வரை எனக்கு சிறந்த வருடமாகதுவங்கியுள்ளது. அடூர்ஸ் தெலுங்கு படம் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறேன். பாடி கார்டு படமும் வெற்றி பெறும்.




சொந்த வாழ்விலும் திரையுலக வாழ்விலும் நிறைய பிரச்சினைகளில் சிக்கினேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை என்றார்.

சிவன் சென்ட்டிமென்ட் சிக்கினார் தனுஷ்...

தமிழ் சினிமாவே ஒரு சென்ட்டிமென்ட் கூடாரம்தானே? "திருப்பதிக்கு போகணும். செலவுக்கு காசு கொடுங்கள்" என்று குறிப்பிட்ட சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குனர்களிடம் கேட்டால் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார்கள்.



இதை புரிந்து வைத்திருக்கும் பலர் ஆங்காங்கே அறுவடை நடத்தி வருவது சுவாரஸ்யமான தகவல். இப்போது கால்ஷீட்டையும் அப்படி வாங்க கிளம்பி விடுவார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது சுப்ரமணிய சிவாவின் டெக்னிக்.


தனுஷ் ஒரு சிறந்த சிவ பக்தராம். (நம்புங்க ஃபிரண்ட்ஸ், இது அவரு வாயாலேயே சொன்ன விஷயம்) அவரிடம் போய் என் படத்திலே நீங்க சிவ பக்தரா நடிக்கணும்னு கேட்டதுதான் தாமதம். சரி என்று ஸ்பாட்டிலேயே கால்ஷீட் கொடுத்துவிட்டார்.


‘சீடன்’ படத்தில் தனுஷ் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வருகிற மாதிரி அவரை சிவ பக்தராக காட்டியிருக்கிறாராம் சுப்ரமணிய சிவா. அட, இவரு பேரும் சிவான்னே முடியுதே? சிவாய நமஹ....

10 ஆண்டு கழித்து அரசியல்: சினேகா

நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.




யார் வேண்டுமானாலும் இப்போது அரசியலுக்கு வந்து விடலாம். மக்களுக்கான போராட்டத்தை நடத்திய அனுபவம் தேவையில்லை, அடிப்படை தகுதி தேவையில்லை. சினிமாக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், நான்கு படங்களில் நடித்தாலே நாற்காலி கனவுக்குப் போய் விடுகிறார்கள்.






அந்த வரிசையில் தற்போது சினேகாவும் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வர மாட்டாராம். பத்து வருடங்களுக்குப் பிறகு அது குறித்து தெரிவிப்பாராம்.






தமிழக திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட `வைஜயந்தி ஐபிஎஸ்' படம் ரீமேக்காக `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது. விஜயசாந்தி நடித்த வேடத்தில், சினேகா நடிக்கிறார். கிச்சா இயக்குகிறார். இசையமைப்பாளர் தினா. ஒளிப்பதிவு பூபதி.




இப்படம் குறித்து சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,




'நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இந்த 9 வருடங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும், மாறுபட்ட வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் அவ்வப்போது ஏற்படும்.






சேலையை விட்டால், சுடிதார். சுடிதாரை விட்டால், பாவாடை அல்லது தாவணி என ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து அலுத்துப்போய் விட்டது.




இந்த சூழ்நிலையில் தான் டைரக்டர் கிச்சா, என்னை தேடி வந்தார். வைஜயந்தி ஐபிஎஸ் படத்தை மறுபடியும் தயாரிக்கப் போகிறோம். நீங்க போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார்.




என்னை வச்சு காமெடி...கீமெடி பண்ணலையே...? என்று சீரியசாகவே நான் அவரிடம் கேட்டேன். போட்டோ ஷூட் எல்லாம் முடிந்த பிறகும் கூட, எனக்கு நம்பிக்கை இல்லை.




அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக நம்மாலும் போலீஸ் வேடம் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்ட ஏற்பட்டது.






எப்படி நடக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், துப்பாக்கியை எப்படி பிடிக்க வேண்டும்? என்றெல்லாம் கிச்சா எனக்கு சொல்லி தந்தார்.
நீங்க சிரிக்கவே கூடாது என்றார். அதன்படி, படம் முழுக்க நான் சிரிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, `பவானி' ஒரு பரீட்சார்த்தமான படம்தான்.




இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, நிறைய அடிபட்டேன். அதேபோல் பல ஸ்டண்ட் நடிகர்களை நிஜமாகவே நான் அடித்து விட்டேன்.
வைஜயந்தி ஐபிஎஸ் படத்துக்கு பிறகுதான் விஜயசாந்தி அரசியலுக்கு வந்தார். அதேபோல் நானும் வருவேனா என கேட்கிறார்கள்.






முதலில் பவானி படம் திரைக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம். நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன்' என்றார்.

கேமராவும் கையுமாக சிம்பு

கோ படத்தில் ஒரு பிரபலமான பத்திரிக்கையின் போட்டோ கிராஃபர் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சாதாரண பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் அரசியலில் நுழைந்து எப்படி கலக்குகிறார் என்பதை மையமாகக் கொண்டுள்ளது கோ படக்கதை.


அதிரடியான சண்டைக் காட்சிகள் படத்தில் உண்டு என்றாலும், கதை காமெடியாகவே நகருமாம். போட்டோ கிராஃபர் வேடம் என்பதால் தனக்கு நெருக்கமான நிஜ போட்டோ கிராஃபர்களிடம் அவ்வப்போது டிப்ஸ் கேட்டு வருகிறார்.


அதேபோல அரசியல் விஷயங்களை தன் தந்தை விஜய டி.ராஜேந்தரின் ஆலோசனை பக்கபலமாக இருக்கிறது என்கிறார் சிம்பு. முன்புபோல தற்போது சிம்பு இல்லை, மற்றவர்களின் ஆலோசனையை ஏற்கிறார் என்பதே பெரிய விஷயம்.

எனக்கு வெளிநாடு பிடிக்காது : ரீமா சென்

ரெண்டு நாள் சூட்டிங்கிற்கு லீவு விட்டாச்சுன்னாலே வெளிநாட்டுக்கு பறக்கும் நடிகைகள் மத்தியில் ரீமா சென் கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.


ஹாலி‌ டேக்களில் எந்த நாட்டுக்கு போவீர்கள் என்று அம்மணியிடம் கேட்டால், கோபக்கனல் பார்வை வீசுகிறார். எனக்கு வெளிநாடு போவதில் எல்லாம் ஆர்வம் இல்லை. வெளிநாட்டுக்காரர்களெல்லாம் நம்ம நாட்டை பார்க்க இங்கே வரும்போது, நாம ஏன் வெளிநாட்டுக்கு போகணும். நம்ம நாட்டிலேயே ரசித்து பார்க்கக் கூடிய எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, என்கிறார் ரீமா.


சரி... அம்மணி விடுமுறை காலங்களில் விரும்பி போகும் இடங்கள் எவை தெரியுமா? கோவாவும், குற்றாலமும்தானாம்!

திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போராட வேண்டும் : ஸ்ரேயா

'ஜக்குபாய்' படம் தந்தை-மகள் சம்பந்தப்பட்ட கதை. தந்தையுடன் மகள் 5 நாட்கள் தங்கி செலவிடுகிறாள். அப்போது அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன.
இந்தப் படம் தியேட்டருக்கு வரும் முன்பே திருட்டு வி.சி.டி.யில் வெளியானது அதிர்ச்சி ஏற்படுத்தியது. திரையுலகினரை ஒட்டு மொத்தமாக அதிர வைத்துள்ளது. இது திரையுலகின் முதுகெலும்பையே நொறுக்குவது போல் உள்ளது.



திரையுலகைச் சேர்ந்த ஆயிரக்கணக்கணக்கான மக்களின் வருமானத்தை நாசமாக்கியுள்ளது. ஒருநாள் திருட்டு வி.சி.டி. சினிமா உலகில் பெரிய சக்தியாக வளர்ந்து விடும் என்று அச்சப்படுகிறேன். எனவே அனைவரும் இணைந்து திருட்டு வி.சி. டி.க்கு எதிராக போராடவேண்டும். “குட்டி” படத்தில் எனது நடிப்பை பாராட்டி நிறைய பேர் பேசுகிறார்கள்.



“சிக்கு புக்கு” படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

நடிக‌ர் சூர்யா, இய‌க்குன‌ர் கே.எ‌ஸ்.ரவ‌ி‌க்குமா‌ர் வீடுக‌ளில் வருமான வ‌ரி‌த்‌துறை‌யின‌ர் சோதனை

நடிகர் சூர்யா, இய‌க்குன‌ர் கே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர் ‌வீடுக‌ளி‌ல் வருமான வ‌ரி‌த்‌துறை‌யின‌ர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


செ‌ன்னை ‌தியாகராய‌ர் நக‌ரி‌ல் உ‌ள்ள ‌சூ‌ர்யா வீ‌ட்டிலு‌ம், அடையா‌றி‌ல் உ‌ள்ள சூ‌‌ரியா, ஜோ‌திகா ‌வீ‌ட்டிலு‌ம் நடைபெ‌ற்று வரு‌கிறது.


மேலு‌ம் செ‌ன்னை சைதா‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள இய‌க்குன‌ர் கே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர் ‌வீ‌ட்டிலு‌ம் வருமான வ‌ரி‌த்துறை‌யின‌ர் ‌சோதனை நட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

காலை 7 ம‌ணி‌‌க்கு தொட‌ங்‌கி இ‌ந்த சோதனை தொட‌ர்‌ந்து நடைபெ‌‌ற்று வரு‌கிறது. சோதனையில் எதுவும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் வருமான வ‌ரி‌த்‌துறை‌யின‌ரி‌ன் இந்த திடீர் சோதனையால் தமிழ் திரையுலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'கோல்டன் குளோப்' விருது : 'அவதார்' சிறந்த படம்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய விருது “கோல்டன் குளோப் அவார்டு” கடந்த வருடம் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இவ்விருதுகள் கிடைத்தன. ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசைக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றார்.


2010-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது அவதார் படத்துக்கு கிடைத்தது. இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த டைரக்டருக்கான “கோல்டன் குளோப்” விருதை பெற்றார்.



சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது ஜெப் பிரிட்ஸஸ்க்கு “கிரேசி ஹார்ட்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருதை சன்ட்ரா புல்லக் “த பிளைன்ட் சைடு” என்ற படத்தில் நடித்ததற்காக பெற்றார். வெளிநாட்டு மொழியில் சிறந்த படமாக “த ஒயிட் ரிப்பன்” என்ற ஜெர்மனிய படம் தேர்வு செய்யப்பட்டது.



“அவதார்” படம் உலகம் முழுவதும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வசூலை அள்ளுகிறது. வேற்று கிரக மனிதர்கள் பற்றிய கதையே இப்படம்.

மலையாளத்தில் நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் : விஜய்

தமிழ் நாட்டில் எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல் கேரளாவிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். இங்கும் எனக்கு ஆதரவு இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


கேரளாவில் எனது படங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களின் ஆதரவு துணைபுரிகிறது. தமிழ், மலையாள மக்களை பிரித்து பார்க்க முடியவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக என்றென்றும் உங்கள் உள்ளத்தில் இருக்க விரும்புகிறேன்.


சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமலை ரொம்ப பிடிக்கும். அவர்கள் நடித்த படங்களை நிறைய பார்த்துள்ளேன். அதில் ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டேன்.அதன்மூலம் எனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி ரசிகர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறேன்.
ஒரு படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் டைரக்டர்தான் முக்கிய காரணம். கதைப்படி என்ன செய்யவேண்டும் என்பதை டைரக்டர்தான் முடிவு செய்வார்.




ஹீரோவாக இருந்தாலும், சிரிப்பு நடிகராக இருந்தாலும்,வில்லனாகஇருந்தாலும்அதனைதிறம்பட செய்ய வைப்பது டைரக்டர்தான். எனவே மலையாளமோ, தமிழோ, எந்த மொழி படமானாலும் டைரக்டர்தான் சினிமாவில் முக்கியமானவராக உள்ளார்.



மலையாளத்தில் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். கதைதான் முக்கியம். பணம் அல்ல. மலையாள டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன். மலையாள திரைப்படங்களை ரீ-மேக் செய்து தமிழில் நடித்துள்ளேன். என்னோடு சேர்ந்து நடித்த-நடிக்காத அனைவருமே எனக்கு பிடிக்கும். எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வேட்டைக்காரன் : இதெப்படி இருக்கு?

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடுவின் 'மொழித் திறமை' குறித்து அவரது அசிஸ்டென்ட் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கூறுகையில், சார், 'நான்கு மொழிகளில் தெலுங்கு' பேசுவார் என்று பிரமாதப்படுத்திக் கூறுவார்.


அந்தக் கணக்காக ஆகியுள்ளது வேட்டைக்காரன் பட விளம்பரங்கள்.
வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.
டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர் சென்னையில். இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.


மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.


ஏன் இந்தக் குழப்பம், குளறுபடி என்று தெரியவில்லை.

கமல் ஜோடி த்ரிஷா

கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்தில் கமல் ஜோடியாக கேட்டு, கால்ஷீட் இல்லை என்றவர் த்ரிஷா.




பிறகு கமல் இயக்கி நடிக்க இருந்த 'மர்மயோகி'க்கு தேர்வானார். திடீரென படம் நின்றது. இப்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில், கமல் ஜோடியாகிறார் த்ரிஷா.

இசைஞானி கலகலப்பு

பெப்சி அமைப்பின் செயலாளர் ஜி.சிவா இயக்கும் படம் குலசேகரனும், கூலிப்படையும். தனம் என்ற படத்தில் சங்கீதாவை ஏங்க ஏங்க காட்டி ரசிகர்களை கிறங்கடித்தவர் இவர்.


இந்த புதிய படத்தின் துவக்க விழாவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதால், அவரையே முதல் வாழத்து சொல்ல அழைத்திருந்தார் சிவா.


விழாவில் கலந்து கொண்ட இன்னொரு ஆச்சர்யம் இசைஞானி இளையராஜா. பொதுவாக எந்த விழாவுக்கும் வருவதில்லை ராஜா. ஆனால் இந்த விழாவுக்கு வந்திருந்தவர், வெகுநேரம் அமர்ந்திருந்ததோடு கலகலப்பாக பலரிடமும் பேசிக் கொண்டிருந்தார். இத்தனை பேர் திரண்டிருந்தாலும் வராத ஒருவர் படத்தின் நாயகன் பிரகாஷ்ராஜ்தான்.


தனது வாழ்த்துரையில் இதையும் லேசாக குத்திக்காட்டினார் இசைஞானி. "வராதவங்களுக்குதான் முதல் வணக்கம் வைக்கணும். பிரகாஷ்ராஜுக்கு என் வணக்கம்" என்று அவர் சொல்ல, பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராஜா இப்படியெல்லாம் பேச மாட்டாரே என்ற ஆச்சர்யத்தோடு கவனித்தார்கள் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள்.

சொக்கிப்போன பார்த்திபன்

மேலும் ஒரு ‘ஆயிரத்தில் ஒருவன்’ நியூஸ்... பொத்தி பொத்தி வைத்திருந்தார்கள் பார்த்திபன் கேரக்டரை. ட்ரெய்லரில் கூட இவரது கால்களை காட்டுவார்களே தவிர, கெட்டப்பை காட்டவில்லை. காரணம், இந்த கேரக்டர் மீது ஒரு பில்டப் தொடருட்டுமே என்றுதான்.


நினைத்த மாதிரியே இவரது கேரக்டரை பிரமாதம் என்கிறது சினிமா வட்டாரம். படம் பார்த்துவிட்டு வெளியே வருகிற திரையுலக நண்பர்கள் பார்த்திபனுக்கு போன் அடித்து அசத்திட்டீங்க என்கிறார்களாம். இத்தனைக்கும் படத்தின் கதையை பார்த்திபனுக்கே சொல்லவில்லை செல்வராகவன். "இங்கே நில்லுங்க. அங்கே பாருங்க. இந்த டயலாக்கை இப்படி பேசுங்க" என்றுதான் ட்யூஷன் எடுத்தாராம். அவர் சொன்னதை செய்ததற்கே இத்தனை பாராட்டுகள். இன்னும் சுதந்திரம் கொடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? இது பார்த்திபனின் புலம்பலாகவும் இருக்கக்கூடும். போகட்டும்...



பார்த்திபனை பாராட்டிய இன்னொரு பெரிய தலை, நடிகர் சிவகுமார். "ஒரு ராஜா எப்படியிருப்பார்னு காட்டிட்டே" என்றாராம். "தமிழ்சினிமா இதுவரை காட்டிய ராஜாக்கள் எப்படியோ? ஆனால் நீ போட்டதுதான் ஒரிஜனல் ராஜா வேஷம்" என்பது அவரது பாராட்டாம். ரொம்பவே சொக்கிப் போயிருக்கிறார் பார்த்திபன்.