தமிழுக்கு வரும் 'ஹைட் அன்ட் ஷீக்' hide and Seek
ஹைட் அன்ட் ஷீக்’ (HIDE AND SEEK) என்ற பெயரில் இந்திப் படம் ஒன்றை படு மிரட்டலாக தயாரித்திருக்கிறது மொசர்பேர் நிறுவனம். இந்த நிறுவனம் தமிழில் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கண்டேன் காதலை’ படம் பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.இப்போது இந்நிறுவனம் இந்தி மட்டுமல்லாது மலையாளத்திலும் படங்களைத் தயாரித்து வருகிறது. சமீபத்தில் ‘ஹைட் அன்ட் ஷீக்’ படத்தின் டிரையிலர் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரைலரைப் பார்த்து அதிராதவர்களே இல்லை. காரணம், ஆங்கிலத் த்ரில்லர் படங்களுக்கு இணையான மேக்கிங் இந்தப் படத்தில் காணப்பட்டது.

ஏற்கனவே ராம்கோபால் வர்மா போன்றவர்கள் இந்தியில் த்ரில்லர் படங்களை எடுத்து வெளியிட்டிருந்தாலும் ‘ஹைட் அன்ட் ஷீக்’ படம் தான் முதல் த்ரில்லர் படமாக இருக்கும். அந்த அளவுக்கு காட்சி ஒளி ஒலி என அனைத்திலும் இந்தப் படம் சிறந்து வந்திருக்கிறதாம்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பரத் அதிக சம்பளம் கேட்பதால் வேறு நடிகர்களை குறிவைத்துக் கொண்டிருக்கிறது மொசர்பேர்.
Colombo Time
0 Response to "தமிழுக்கு வரும் 'ஹைட் அன்ட் ஷீக்' hide and Seek"
Post a Comment