நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!
ஷதெனாவட்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர், பூனம் பாஜ்வா. அந்த படத்தில் இவர், ஜீவா ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து பரத் ஜோடியாக, ஷசேவல்' படத்தில் நடித்தார். இப்போது, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஷகச்சேரி ஆரம்பம்' படத்தில், மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்.
இதே படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், சிறப்பு தோற்றமாக நிஷா கோத்தாரி பங்குபெறுகிறார். ஷஷவாடா வாடா பையா...என் வாசல் வந்து போயா...என் வாசல் தாண்டி வந்து வாசம் வாங்கிப் போயா...'' என்று தொடங்கும் அந்த பாடல் காட்சியில் ஜீவா, பூனம் பாஜ்வா, நிஷா கோத்தாரி ஆகிய மூன்று பேரும் நடனம் ஆடினார்கள்.
இதற்காக, ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. ஷவஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம்பெற்ற போட்டி நடன பாடல் போல், இந்த பாடலிலும் பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் போட்டிபோட்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் விட்டுக்கொடுக்காமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே நீயா, நானா? என்ற சவால் எழுந்தது. அது, சண்டையாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள். இருவரும் கைகலப்பில் இறங்குகிற சூழ்நிலை ஏற்பட்டதால், உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
நடிகர் ஜீவாவும், டைரக்டர் திரைவண்ணனும் குறுக்கிட்டு, இருவருக்கும் இடையே சமரசம் செய்தார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது. பூனம் பாஜ்வாவும், நிஷா கோத்தாரியும் ஜீவாவுடன் தொடர்ந்து நடனம் ஆடினார்கள்.
Colombo Time
0 Response to "நடிகைகள் கைகலப்பு: நடிகர் ஜீவா சமரசம் செய்தார்..!"
Post a Comment