‘அறுவடை’ பேரை மாத்தியாச்சு....
ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க ஆரவாரமாக துவங்கப்பட்ட படம் ‘அறுவடை’. இந்தப் படத்தை அரவிந்த் இயக்கி வருகிறார்.ஹென்றி தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இப்போது ஓசைப்படாமல் மாற்றியிருக்கிறார்களாம். ‘அறுவடை’... இந்த பெயரை மாற்றி ‘வந்தே மாதரம்’ என்று வைத்திருக்கிறார்கள்.
அறுவடை என்ற பெயர் நன்றாகத்தானே இருக்கிறது... அப்புறம் ஏ
ன் பெயர் மாற்றினார்கள்... விசாரித்துப் பார்த்தால். அறுவடை என்னும் பெயர் என்னமோ மாதிரி இருக்கிறது. ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பதால் பெயரிலும் ஒரு கம்பீரம் ஒரு தேசியப்பற்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் இப்போது ‘வந்தே மாதரம்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கம்.
ன் பெயர் மாற்றினார்கள்... விசாரித்துப் பார்த்தால். அறுவடை என்னும் பெயர் என்னமோ மாதிரி இருக்கிறது. ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பதால் பெயரிலும் ஒரு கம்பீரம் ஒரு தேசியப்பற்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் இப்போது ‘வந்தே மாதரம்’ என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கம்.படத்தின் பெயர்தான் மாறியிருக்கே தவிர கதை எல்லாம் அதே கதை தானாம். ‘அர்ஜூன் படங்களில் இதுவரை அவர் மட்டும்தான் எதிரிகளைப் பந்தாடிக் கொண்டிருந்தார். இந்தப் படத்தில் பாருங்கள்... மெகா ஸ்டார் மம்முட்டியும் இணைந்து எதிரிகளைப் பந்தாடுவார்...’ என்கிறார் படத்தின் இயக்குனர்.
படம் பார்க்க வர்ற ரசிகர்களைப் பந்தாடாம இருந்தா சரி...
Colombo Time
0 Response to "‘அறுவடை’ பேரை மாத்தியாச்சு...."
Post a Comment