செல்வாவின் 'முறியடி'

நான் அவனில்லை’ வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் செல்வா, அதே பேனருக்காக அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை ‘நான் அவனில்லை 2’ என்ற டைட்டிலில் இயக்கி சமீபத்தில் வெளியிட்டார்.


இந்தப் படமும் முதலுக்கு மோசமில்லை என்ற வகையைச் சார்ந்ததாகிப் போனது. இந்தப் படம் வெளியாகும் முன்பே ‘முடியடி’ என்ற படத்தில் பிஸியாகிவிட்டார் செல்வா. இந்தப் படத்தில் ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன். இவர் ‘அபியும் நானும்’ படத்தில் நடிகராக அறிமுகமானவர். கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் வந்துக் கலக்கியவர்.



இந்தப் படம் ஆக்க்ஷனும் த்ரில்லரும் கலந்த கலவையாக இருக்கும். இதில் கணேஷ் வெங்கட்ராமன் வக்கீலாக நடிக்கிறார். பணம் இல்லாதவர்களுக்காக கோர்ட்டுக்கு வந்து வாதாடும் வக்கீல் கேரக்டர் இவருக்கு. இவருக்கு ஜோடி ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்த அதே ரம்யா நம்பீசன் தான்.


சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் வந்து மிரட்ட உள்ளார். இந்தப் பாடத்தின் படப்பிடிப்பு இப்போது பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

0 Response to "செல்வாவின் 'முறியடி'"

Post a Comment