நிகில் பேச்சு...நெக்குருகிய விஷால்!
‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேவி திரையரங்கில் நடந்தது.
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் அரிவாள், துப்பாக்கி இல்லாத விஷாலை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் ரசிகர்களும், மேடையில் இருந்த விருந்தினர்களும். கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, “இந்த படத்திலே அரிவாள் துப்பாக்கிக்கு பதிலாக விஷால் கையில் மூன்று ஹீரோயின்களை கொடுத்திட்டாரு டைரக்டர். பார்ப்போம்... எப்படி ஹேண்டில் பண்ணியிருக்காருன்னு” என்றார்.
படத்தின் மூன்று ஹீரோயின்களில் விழாவுக்கு வந்திருந்தவர் நீது சந்திரா மட்டுமே. வணக்கம், நன்றி என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளை தெள்ளந் தெளிவாக கற்று வைத்திருப்பார் போலும். ஆனால், “சீக்கிரம் தமிழ் கத்துப்பேன்” என்று உறுதி மொழி அளித்தார். விஷால் பேச்சில் அநியாயத்துக்கு நிஜம். “ரசிகர்கள் எப்படி நடிச்சா கை தட்டுவாங்களோ, அப்படி யோசிச்சுதான் இந்த படத்தை எடுத்திருக்கோம். நான் நடிச்ச படங்களுக்கு பெரிய அளவில் ஆடியோ ரிலீஸ் வைத்ததில்லை.
இப்படி ஒரு விழா எடுக்கணும்னு நினைச்சவுடன் யாரையெல்லாம் கூப்பிடலாம் என்று யோசிச்சோம். நாம நல்லாயிருக்கணும்னு மனசார வாழ்த்துறவங்களை மட்டும் கூப்பிடலாம் என்று முடிவு செஞ்சோம். இங்கே மேடையில் இருக்கிற எல்லாரும் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க” என்றார்.
“பென்ஹர் படத்தை கூட தமிழ்லே ரீமேக் பண்ணிடலாம் போலிருக்கு. ஆனால் மூன்று ஹீரோயின்களை ஒரு படத்தில் நடிக்க வைக்கிற கஷ்டம் இருக்கே...?” என்று அவர் பெருமூச்சு விட, அந்த சோகக்கதையை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய நிகில் முருகன், விஷால்-விக்ரம் கிருஷ்ணா அண்ணன் தம்பி பாசத்தை இதிகாச புராண பாத்திரங்களோடு ஒப்பிட்டு பேச, நெக்குருகி நின்றார் விஷால்!
Colombo Time
0 Response to "நிகில் பேச்சு...நெக்குருகிய விஷால்!"
Post a Comment