மீடியாக்களுக்கு சினேகன் கடிதம்
யோகி’யில் இரண்டாவது நடிகராக வந்துக் கலக்கியவர் சினேகன். இவர் பாடலாசிரியரும் கூட. யோகியில் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு வெளியான, மீடியாக்களின் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
இது குறித்து சினேகன் பத்திரிகையாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்…
கவனிப்பார் இன்றி கிடக்கும் திரை உலக குழந்தைகளுக்கு அன்னை தெரசா போல ஆதரவு தரும் மீடியா நண்பர்களுக்கு, உங்களால் புகழப்பட்ட சினேகன் நன்றி மடல்!
அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்காது, விமர்சிக்கபடாத நடிகன் சிறந்த கலைஞனாக முடியாது!! உங்கள் விமர்சனங்கள் என் வாழ்கைக்கு வலு சேர்த்து இருகின்றது, இரண்டாவதாக வருபவனை உலகம் ஒரு போதும் நினைவு வைத்துகொள்ளாது என்ற வார்த்தையை பொய்யாக்கி “யோகி”யில் இரண்டாவதாக வந்த என்னை மக்களிடையே முதலாவதாக கொண்டு சென்றது.. உங்கள் விமர்சனம்தான்.
விமர்சனங்கள் எல்லோர் மீதும் பாயும், ஆனால் புத்திசாலிகள் மட்டுமே அதை உபயோகபடுத்திக்கொள்வார்கள், நான் அடையும் உயரம் என் சிறகுகளின் பலத்தை பொருத்தது, என்னை மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும் பலமான சிறகுகள் நீங்கள் தான்.. கொலம்பஸ் பாதி வழியில் தன் பயணத்தை முடித்து, வந்தவழி திரும்பி இருந்தால், வரலாறு அவரை நினைவு வைத்துக்கொண்டு இருக்காது.. நானும் திரைகடலில் பாடலாசிரியர் என்ற பலத்துடன் நடிகனாகவும் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன், நீங்கள் தான் என் கலங்கரை விளக்குகள், உங்கள் வழிகாட்டுதலுடன் என் பயணம் வெற்றி பயணமாகட்டும்.ந்த சடையனை, தமையனாக பாவித்து நீங்கள் தந்த விமர்சனத்திற்கு நன்றி…
நட்போடும்,
நன்றியோடும்,
சினேகன்
Colombo Time
0 Response to "மீடியாக்களுக்கு சினேகன் கடிதம்"
Post a Comment