வேட்டைக்காரன் பட விமர்சனம்
படத்தின் இயக்குனர் பாபுசிவன், விஜய்யின் பரம ரசிகராக இருந்திருப்பார் போலிருக்கிறது. விஜய் படத்தின் கதைகளையே சுட்டு விஜயிடமே கதை சொல்லியிருக்கிறார். 'பழைய சட்டை, பளபள பட்டன்' என்று காட்சிகள் அங்கங்கே கண்ணடிப்பதால் ரசனையும் அலுப்பும் ரவுண்டு கட்டி அடிக்கிறது.
+2 வில் பலமுறை பெயிலாகி, கடைசியில் பாஸாகிற விஜய்க்கு, அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அவர் தாய் தந்தையாக வருவோர் படத்தின் முதல் காட்சியில் வந்தது தான், பின்னர் அவர்களைப் பற்றி பேச்சே இல்லை. இடையில் ஒரு காட்சியில் கூட வரவில்லை என்பது மிகுந்த ஆச்சரியம். பின்பு சென்னைக்கு வருகிறார் விஜய், புதிதாக சென்னை வரும் விஜய்க்கு அனைத்து சந்து பொந்துகளும் தெரிகிறது, உடனே ஆட்டோ ஓட்ட ஆரம்ம்பிக்கிறார், அது தான் எப்படி என்று தெரியவில்லை, கொஞ்சம் இயக்குனரிடம் கேட்கவேண்டும், ஒரு வேளை அவர் ஆட்டோவில் சட் நவ்( டாம் டாம் ) யூஸ்பண்ணி இருப்பாரோ என்று தோன்றுகிறது.
கமெரா ஒரு சதத்திற்கு உதவாவு, காட்சிகளைப் படம் பிடித்த விதம் படுகேவலம். அத்துடன் விஜய் அணியும் உடைகள் படுமோசம், விஜய்க்கு தொப்பை(வண்டி) இருப்பது இவர் போடும் இந்த உடுப்புகளால் தெளிவாக காட்டப்படுகிறது. அதாவது இவரை ஒரு மாணவன் எனச் சித்தரிக்க முயலவில்லை இயக்குனர், ஒரு அப்பாவைப் போலச் சித்தரித்துள்ளார் என்பதே உண்மை.
சென்னைக்கு வருகிறார் விஜய். வந்த இடத்தில் வம்புசண்டை. மெயின் வில்லன் சலீம் கோஷின் மகனை துவையல் ஆக்கி ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். "யார்ரா அவன்? அவன் எனக்கு வேணும்?" என்று தேட ஆரம்பிக்கிறார்கள் சலீம் கோஷ்டியினர். தாறுமாறாக ஒரு வார்... (நார் நாராக கிழிவது நம்மை தவிர வேறு யார்?) இடது கையில் இந்திய ராணுவத்தையே மறைத்து வைத்திருப்பாரோ என்று ஐயுற வைக்கிற அளவுக்கு 'தடி தாண்டவராயன்'களை துவைத்து தொங்க போடுகிறார் விஜய். இதற்கிடையில் இவர் ஆதர்ஷ அதிகாரியாக நினைத்திருக்கும் ஸ்ரீஹரி, இதே வில்லன் கோஷ்டிகளால் என்னவானார் என்பதையும் அறிகிற விஜய், அதற்கும் சேர்த்து தனது நரம்பை புடைக்க, இடி, மழை, மின்னல், இன்னல் என்று கலவையாக அடிக்கிறது தியேட்டரில்!
நடுநடுவே வரும் விஜய்-அனுஷ்கா காதல் மட்டும் பூக்களின் சந்தை!
தமிழ்நாடே வியக்கும் ஒரு உதவி கமிஷனர், நடுரோட்டில் குருடாக்கப்படுவதும், அவர் குடும்பம் உயிரோடு தீக்கிரையாவதும், அதை ஒரு ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை என்பதும், திரைக்கதைக்கு மட்டுமே சவுகர்யமான மிஸ்டேக்! அந்த உதவி கமிஷனர் ஸ்ரீஹரி, திரையில் தோன்றும் போதெல்லாம் அதிர வைக்கிறார். பொறுத்தமான தேர்வு.
அதிரவே அதிராமல் வில்லத்தனம் செய்கிற சலீம் கோஷம் இன்னொரு அசத்தல். அதற்காக படத்தில் அவர் செய்கிற காரியங்களும், விஜய்யை அழைத்துக்கொண்டு போய் தன்னுடைய பராக்கிரமங்களை விவரிப்பதும் பேத்தல்! பயம்... பயம்... என்று காதருகில் கிசுகிசுக்கிறாரே, இன்னொரு முறை சொல்லித் தொலைப்பாரோ என்ற பயமே வருகிறது! இவர் எம்.எல்.ஏ ஆகாமலே மந்திரியாகி விடுகிறார் என்பது ஸ்கிரிப்ட்டில் விழுந்த ஸ்கிராட்ச்!
மொத்தத்தில் வேட்டைக்காரனுக்கு வேட்டு விழுந்துள்ளது அவ்வளவுதான். இதில் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன் !
இதைவிட சுவாரசியமான விடயம் என்னவென்றால், பல கொலைகள் மிகுந்த படமான பேராண்மைக்கு 18 வயதுடையவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று கொடுப்பதற்குப் பதிலாக 12 வயதுடையவர்கள் பார்க்கலாம் என ஐரோப்பாவில் சான்றிதழ் கொடுத்துவிட்டு, வேட்டைக்காரனுக்கு 15 வயதுடையவர்களே பார்க்கலாம் எனச் சான்றிதழ் வழங்கியுள்ளனர் ஐரோப்பிய சென்சர் போர்ட், இதனால் ஐரோப்பாவில் உள்ள பல தமிழர்கள் தமது பிள்ளை குட்டியுடன் சென்று படம் பார்க்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் மற்றும் B4U அமைப்பும் மொத்தத்தில் இப்படத்தை எடுத்து ஐரோப்பாவில் நட்டத்தை சம்பாதித்திருப்பதாக அறியப்படுகிறது. படம் ஐரோப்பாவில் ஊத்திகிச்சு என்பதே உண்மை... இதில் சில அனுபவம் உங்களுக்கும் இருக்குமில்ல, வேட்டை ஆராம்பிச்சுடுத்துடோ......... ஊ ஊ ஊ ஊ ஊ ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ...
Colombo Time
0 Response to "வேட்டைக்காரன் பட விமர்சனம்"
Post a Comment