இரண்டாவது சுற்றில் கௌதமன்

‘சந்தனக்காடு’, ‘ஆட்டோ சங்கர்’ போன்ற தொடர்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கௌதமன். இவர் முதலில் இயக்கிய படம் முரளி, சிம்ரன் நடித்த ‘கனவே கலையாதே’.



ஆனால் அதற்குப் பிறகு எந்த வாய்ப்புகளும் கிடைக்காததால் இவர் டிவி பக்கம் போய்விட்டார் வெற்றிகரமாக இரண்டு தொடர்களைக் கொடுத்தவர் இப்போது மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.



இவர் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘மகிழ்ச்சி’. இந்தப் படம் எழுத்தாளர் நீல பத்மனாபனுடையது. அவருடைய இந்த நாவல் படித்தபோது கௌதமனின் மனதைப் பாதிக்க அவர் எழுத்தளாரிடம் அந்த நாவலை படமாக்க விரும்புவதாக சொல்லியிருக்கிறார். உடனே அவரும் மறுப்பேதும் சொல்லாமல் ஓ.கே. சொல்லிவிட்டார். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் கௌதமனும், சீமானும் இணைந்து நடிக்கிறார்கள்.


கற்றது தமிழ் படத்தில் நடித்த அஞ்சலி தான் இவருக்கு ஜோடியாம். முரட்டு மனிதர் கேரக்டரில் சீமான் வரும் போது அப்ளாஸ் அள்ளும் என்கிறார்கள். கன்னியாகுமரி பகுதிகளில் நடப்பது போன்ற கதை என்பதால் குமரிமாவட்டத்தை ரவுண்டு கட்டி படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் கௌதமன்.



இந்த இரண்டாவது சுற்றாவது கைகொடுக்குமா என்றுப் பார்க்கலாம்...!!!

0 Response to "இரண்டாவது சுற்றில் கௌதமன்"

Post a Comment