சூடுபிடிக்கும் சொர்ணமால்யா விவகாரம்

சாரி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி...’ என்ற படத்தில் நடித்த போது ரசிகர்களை சூடாக்கிய சொர்ணமால்யா, இப்போது சூடான விவாகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.



இவர் ரயிலில் வரும் போது இவருடன் ரயிலில் பயணித்த ஒருவர் தன்னைத் தொட்டு சில்மிஷம் செய்ததாக பகிரங்கமாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் சொர்ணமால்யா. உடனேயே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவர் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார். இதற்குப் பின்னால் ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்று எண்ணப்படுகிறது.



சமீபத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி நடித்தும் வருகிறார் சொர்ணமால்யா. சமீபகாலமாக மீடியாக்களின் வெளிச்சம் ஏதும் அவர் மேல் படாமல் இருந்தது. இந்தத் தொடருக்குப் பின்னர், மீடியா அவரை உற்று நோக்குகிறது. இதைப் பயன்படுத்தி ஒருவேளை விளம்பரம் தேடிக் கொள்கிறாரோ என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர்.



எது எப்படியோ, சினிமாவில் கட்டிப்பிடித்து நடிக்கும் சொர்ணமால்யா... இப்போது யாரோ ஒருவர் தொட்டார் என்பதற்காக காவல்நிலையம் படியேறியிருக்கிறார்...’ என்று சிலர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதும் நம் காதுகளுக்குக் கேட்காமல் இல்லை.

0 Response to "சூடுபிடிக்கும் சொர்ணமால்யா விவகாரம்"

Post a Comment