வேட்டைக்காரன் பாடல் விமர்சனம்
விஜய் தனது கடந்த மூன்று படங்களும் சரியாக போகாத நிலையில் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வரப்போகிறது வேட்டைக்காரன். தற்போதுள்ள நிலைமையில் அவரது ரசிகர்கள் அவரை விட அந்த படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். விஜய்யும் சன் பிக்சர்ஸ் தன் படத்தை வாங்கியதில் முக்கிய பங்காற்றியதாக செய்திகளில் வந்தது.
விஜய்க்கு சில படம் சரியாக ஓடவில்லை என்றாலும் படப்பாடல்கள் எப்படியும் ஹிட் ஆகி விடும், இளைஞர்களிடையே குழந்தைகளிடையே அவரது படப்பாடலுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
கடந்த படம் வில்லு சரியாக போகவில்லை என்றாலும் அதில் உள்ள பாடல்கள் சூப்பர் ஹிட் தான், அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கலக்கி இருப்பார். இன்றும் கூட நான் அடிக்கடி என் Ipod ல் கேட்கும் பாடல்கள் வரிசையில் உள்ளது, குறிப்பாக க்ளப் மியூசிக் பாடல்களை விரும்பி கேட்பேன்.
வேட்டைக்காரன் படத்திலும் பாடல்கள் நன்றாக உள்ளது, இசை விஜய் ஆண்ட்டனி. வழக்கமான குத்து பாடல்களே அதிகம் உள்ளன. தற்போது பலர் அவற்றை விமர்சித்தாலும் பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும். விஜய் பட (குத்து) பாடல்கள் பிடிக்காதவர்களுக்கு இந்த படத்தின் பாடல்களும் பிடிக்காது.
இனி பாடல்கள்
நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
அறிமுக பாடலாக இருக்கிறது, எனக்கு இந்த பாடலே ரொம்ப பி
டித்தது, பாடலில் இளைய தளபதியின் குட்டி தளபதியும்!!! ஆடியுள்ளார், எனவே குழந்தைகள் மத்தியில் ஹாட் பாடலாகவும் மியூசிக் சேனல்களில் அதிகம் கேட்கப்படும் பாடலாகவும் இருக்கும். சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடல் கபிலன்
நான் அடிச்சா தாங்கமாட்ட
நாலு மாசம் தூங்கமாட்ட
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
அறிமுக பாடலாக இருக்கிறது, எனக்கு இந்த பாடலே ரொம்ப பி
டித்தது, பாடலில் இளைய தளபதியின் குட்டி தளபதியும்!!! ஆடியுள்ளார், எனவே குழந்தைகள் மத்தியில் ஹாட் பாடலாகவும் மியூசிக் சேனல்களில் அதிகம் கேட்கப்படும் பாடலாகவும் இருக்கும். சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடல் கபிலன்என் உச்சிமண்டைல சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கைல கிர்ருங்கிது....
உன்னை நான் பார்க்கைல கிர்ருங்கிது....
குருவி பட டண்டனக்கா டர்னா :-) பாடலை போல உள்ளது, முதலில் பாடல் ஆரம்பிக்கும் போது மேற்க்கத்திய இசை போல இருந்து எதிர்பாராமல் குத்து பாடலாக மாறி விட்டது. பாடல் முழுவதும் டர்ர் புர்ர் கர்ர் டொர்ர் கிர்ர் னு வருகிறது :-) இந்தப்பாடலில் பாடலின் வேகமான இசைக்கு ஏற்ற உற்சாகமான குரல் ஆண் குரல் ஆனால் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் பெண் குரல் உள்ளது. கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர், சாருலதாமணி, ஷக்தி ஸ்ரீ பாடி இருக்கிறார்கள், பாடல் அண்ணாமலை.
ஒரு சின்னத்தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
படத்தில் உள்ள ஒரே மெலடி (மாதிரி) பாடல், விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும் இதை ரசிப்பார்கள். கிருஷ், சுசித்ரா பாடலை பாடி இருக்கிறார்கள், பாடல் விவேகா.
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலில்லை குழலில்லை தாஜ்மகால் நிழலு
குழலில்லை குழலில்லை தாஜ்மகால் நிழலு
காதலன் ஒரு அர்த்தத்தில் கூற காதலி அது இல்ல இது வேற என்று கூறுவது போல பாடல் உள்ளது, சுவராசியமாக உள்ளது. பாடலை பாடியவர்கள் சுர்சித், சங்கீதா ராஜேஷ்வரன், பாடல் கபிலன்.
புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வரத பார்த்து
கொல நடுங்குது கொல நடுங்குது
கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து
நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து
பட்டாகத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்
பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.
வழக்கமான சவால் பாடலாக விறுவிறுப்பாக உள்ளது, விஜய் ரசிகர்களை பெருமளவில் கவரும். ஆனந்து, மகேஷ் விநாயகம் பாடலை பாடியுள்ளார்கள், பாடல் கபிலன்.
வழக்கமான சவால் பாடலாக விறுவிறுப்பாக உள்ளது, விஜய் ரசிகர்களை பெருமளவில் கவரும். ஆனந்து, மகேஷ் விநாயகம் பாடலை பாடியுள்ளார்கள், பாடல் கபிலன்.இந்த பாடலின் வரிகளை அதிகம் இங்கே போட்டதற்கு காரணம் நாளை படம் வந்த பிறகு இதை வைத்து தான் கிண்டல் செய்வார்கள் நமது வலைப்பதிவர்கள்.
முன்பெல்லாம் விஜய் படம் வந்தால் தான் கிண்டல் செய்து கொண்டு இருந்தார்கள், தற்போது பாடலுக்கு கூட கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு எடுத்துகொடுப்பதை போல அதன் வரிகள்.
படம் வந்த பிறகு நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன் என்ற வரியை வைத்து பலர் கிண்டல் செய்வார்கள் என்பது உறுதி :-). விஜய் இதை போன்ற வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம், அவரே கிண்டல் செய்ய வழி ஏற்படுத்தி கொடுத்தது போல இருக்கு. சும்மாவே கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்ப்பாங்க ..ரொம்ப கஷ்டம் தான்.
படம் வந்த பிறகு நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன் என்ற வரியை வைத்து பலர் கிண்டல் செய்வார்கள் என்பது உறுதி :-). விஜய் இதை போன்ற வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம், அவரே கிண்டல் செய்ய வழி ஏற்படுத்தி கொடுத்தது போல இருக்கு. சும்மாவே கண்ணுல விளக்கெண்ணையை விட்டுட்டு பார்ப்பாங்க ..ரொம்ப கஷ்டம் தான்.
விஜயை பிடிக்காதவர்கள் வேண்டும் என்றால் பாடலை கிண்டல் செய்து கொண்டு இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். படம் ஹிட் ஆவது விஜய் நம்புற மாதிரி சன் பிக்சர்ஸ் கையில் தான் உள்ளது ;-) இப்ப பாடல் பிடிக்காது என்று சொல்பவர்கள் நாளை ரசிக்க அதிக வாய்ப்பு, வீம்புக்கு வேண்டும் என்றால் சொத்தை பாடல் என்று கூறலாம். குத்து பாடல் பிடிக்காதவர்கள் கேட்கவே தேவையில்லை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது "ஒரு சின்னத்தாமரை" பாடல் தவிர்த்து.
படத்தில் பாடல்கள் பல வேகமான பாடல்களாக இருந்தாலும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்ட்டனி முன்பு இசை அமைத்த நாக்கு மு
க்க, ஆத்திச்சூடி பாடலை போல அதிக வேக பாடலாக எதுவுமில்லை. விஜய் சிறப்பாக நடனம் ஆடுவார், விஜயை பிடிக்காதவர்கள் கூட இதை ஒத்துகொள்வார்கள், அப்படி பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு இதை போல ஒரு பாடல் இல்லாதது எனக்கு ஆச்சர்யம், இதை போல ஒரு பாடலை எதிர்பார்த்து இருந்தேன்..
க்க, ஆத்திச்சூடி பாடலை போல அதிக வேக பாடலாக எதுவுமில்லை. விஜய் சிறப்பாக நடனம் ஆடுவார், விஜயை பிடிக்காதவர்கள் கூட இதை ஒத்துகொள்வார்கள், அப்படி பட்ட ஒருவரை வைத்துக்கொண்டு இதை போல ஒரு பாடல் இல்லாதது எனக்கு ஆச்சர்யம், இதை போல ஒரு பாடலை எதிர்பார்த்து இருந்தேன்..விஜய்க்கு படத்தில் எதிரி யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவார், அவரே பயந்து போய் கூட அவரோட அப்பாவும் சேர்ந்து பயந்து போய் இருப்பது வலைப்பதிவர்களை பார்த்து தான், சந்திரசேகர் வலைப்பதிவர்கள் தான் வில்லு படத்தை டோட்டல் டேமேஜ் செய்து விட்டதாக ஒரு பேட்டியில் புலம்பி இருந்தார்.
சரி அதை விடுங்க.... வேட்டைக்காரன் படம் எப்படியோ! பாடல் கண்டிப்பாக ஹிட் தான், அதில் எந்த சந்தேகமுமில்லை :-)
Colombo Time
0 Response to "வேட்டைக்காரன் பாடல் விமர்சனம்"
Post a Comment