இறங்கி வந்த பாலா இழுத்துப் பிடித்த ஆர்யா, விஷால்!
கயிறை விட்டுட்டு கைய பிசையுற வேலை இனி நடக்கவே நடக்காது. அந்தளவுக்கு மற்றவங்களுக்கு அனுபவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் பாலா.விஷால், ஆர்யா நடிக்கும் பாலாவின் புதிய படத்தில் நடிக்க போவதற்கு முன்பே அக்ரிமென்ட் பக்காவாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாம். அதன்படி முதலில் கதையை சொல்லுங்க என்று இரண்டு பேரும் பாலாவிடம் கேட்க, அவரும் இருவரையும் உட்கார வைத்து முழு கதையையும் சொல்லி அசத்தினாராம்.
படப்பிடிப்பு எப்போது துவங்கும்? எப்போது முடியும்? எப்போ ரிலீஸ்? பட்ஜெட் எவ்வளவு? இது எல்லாவற்றையும் முறையாக எழுதி கையெ
ழுத்து போட்டுக் கொடுத்துவிடுங்கள் என்று தயாரிப்பாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட அதற்கும் தயாராக இருந்தார் பாலா. அதன்படி தயாரான அக்ரிமென்ட்டில் ஜனவரி 25 ந்தேதி படப்பிடிப்பை ஆரம்பித்து ஜுன் 5-ந் தேதிக்குள் முடித்துவிடுவதாக கையெழுத்திட்டாராம். ஆகஸ்ட் 15 ந் தேதி ரிலீஸ் தேதியையும் குறித்துக் கொடுத்திருக்கிறாராம்.
ழுத்து போட்டுக் கொடுத்துவிடுங்கள் என்று தயாரிப்பாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட அதற்கும் தயாராக இருந்தார் பாலா. அதன்படி தயாரான அக்ரிமென்ட்டில் ஜனவரி 25 ந்தேதி படப்பிடிப்பை ஆரம்பித்து ஜுன் 5-ந் தேதிக்குள் முடித்துவிடுவதாக கையெழுத்திட்டாராம். ஆகஸ்ட் 15 ந் தேதி ரிலீஸ் தேதியையும் குறித்துக் கொடுத்திருக்கிறாராம். முழுக்க முழுக்க மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படம் வளர இருக்கிறது. முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெறப்போகிறார்கள். இந்த படத்தையாவது வில்லங்கமில்லாமல் முடித்து தர வேண்டும் என்று நிஜமான அக்கறையோடு களத்தில் இறங்கியிருக்கிறாராம் பாலா.
நல்லதே நடக்கட்டும்...
Colombo Time
0 Response to "இறங்கி வந்த பாலா இழுத்துப் பிடித்த ஆர்யா, விஷால்!"
Post a Comment