ஆதி மேல் கடுப்பில் சாமி
‘மிருகம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஆதி. இந்தப் படத்தை இயக்கியர் சாமி. ஆதியின் நடிப்புத் திறமையை இந்தப் படத்தின் மூலமாக முழுவதுமாக வெளிக்கொண்டு வந்ததால் இந்தப் படம் பரவலாகப் பேசப்பட்டது.இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்திற்குக் கால்ஷீட் கேட்டார் சாமி. ஆனால் ஆதியோ மறு
த்துவிட்டார். அவர் கேட்ட நாட்களை ‘ஈரம்’ படத்திற்கு ஒதுக்கிக் கொடுத்தார். ஈரமும் ஓரளவு ஓடிவிட்டதால் இப்போது பிஸியாகிவிட்ட ஆதி, ‘சரித்திரம்’, ‘அய்யனார்’ படங்களில் பிஸியாக உள்ளார். இதைத் தொடர்ந்து ‘நாடோடிகள்’ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் ஆதி. அறிமுகப்படுத்திய தனக்கு கால்ஷீட் தராமல் மற்ற கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுப்பது சாமிக்கு ஏகத்துக்கும் கடுப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பற்களை நறநறவென கடித்தபடி வலம் வருகிறார் சாமி.

Colombo Time
0 Response to "ஆதி மேல் கடுப்பில் சாமி"
Post a Comment