நயன்தாரா போ போ... ஸ்ருதியே வா...வா...
சென்னைக்கு வந்தால் கூட, நைசாக வந்து சைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார் நயன்தாரா. (திருமதிக்கு பயந்துதான் செல்வியின் எஸ்கேப்) இந்த லட்சணத்தில் ஜெயம் ரவி நடிக்க, பிரபுதேவா இயக்கும் படத்தில் தன்னையே ஹீரோயினாக போட வற்புறுத்தி வருகிறார் என்று எழுதியிருந்தோம். இதற்கு ஜெயம் ரவியும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஆச்சர்யத்தை தந்திருக்கிறார் பிரபு.

கமலின் மகள் ஸ்ருதியை ஜெயம் ரவிக்கு ஜோடியாக புக் பண்ணியிருக்கிறாராம். இந்தியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தோல்வி கண்ட ஸ்ருதி, மீண்டும் இந்திக்கு சென்று வெற்றி பெறாமல் திரும்ப போவதில்லை என்றெல்லாம் பேசி வந்தார். இதற்கிடையில் பிரபுதேவாவின் அழைப்பு அவரை தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இந்த அழைப்பை மதித்து கால்ஷீட் கொடுத்தால் இந்தியில் நம்மை வைத்து படம் எடுப்பார் என்றும் எண்ணியிருக்கலாம்.
தனது மகள் தமிழில்தான் அறிமுகம் ஆக வேண்டும் என்று விரும்பியவர் கமல். ஆனால், மகளது விருப்பம் பாலிவுட்டை நோக்கி இருந்ததால் அதற்கும் சம்மதம் தெரிவித்தவர், இந்த வாய்ப்பை மனதார வரவேற்கிறாராம். படத்திற்கு பாரீஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்போ ஷ§ட்டிங்கும் அங்கதானே நடக்கும்?
Colombo Time
0 Response to "நயன்தாரா போ போ... ஸ்ருதியே வா...வா..."
Post a Comment