சினிமாவில் முத்திரை பதிக்கும் டாக்டர்
சினிமா ஒரு மர்மதேசம். அது யார் யாரை உள்ளிழுத்துக் கொள்ளும். யார் தலையில் கிரீடம் சூட்டும் என்று சொல்ல முடியாது. ஒரு காலத்தில் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தார்கள். இப்போது பல்வேறு துறையிலிருந்தும் திரையுலகில் குதிப்பவர்கள் சகஜமாகி விட்டது.தொழிலதிபர்கள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், மேனேஜர்கள் இப்படி பலரும் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்கள்.
அப்போதைய டாக்டர் ராஜசேகர் முதல் அண்மைக்கால அஜ்மல் வரை பல டாக்டர்கள் நடிகர்கள். இந்த வரிசையில் மிகச் சமீபத்தில் இணைந்திருப்பவர் சீனிவாசன். இவர் ஒரு டாக்டர் சென்னையில் அண்ணா நகரில் ஆனந்தி ஆஸ்பிடல்ஸ்(பி) லிட்டின் சேர்மேன் இவர்.
இவரது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். அவர் இவரது தோற்றம் நடை உடை பாவனைகளைப் பார்த்து நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே என்றிருக்கிறார். டாக்டர் சீனிவாசனுக்கு
ஒரு பக்கம் வியப்பு மறுபக்கம் தயக்கம். ஆனால் அந்தத் தயாரிப்பாளரோ தன் படம் பாதியளவு முடிந்துள்ளதாகவும் அதிலுள்ள வில்லன் வேடத்துக்கு இவரே பொருத்தமாக இருப்பார் என்றும் நம்பிக்கையுடன் கூறி, ஊக்கப்படுத்தவே, துணிவாக இறங்கி விட்டார் டாக்டர். அப்படி முதலில் நடித்த படம்தான். உனக்காக ஒரு கவிதை அந்தத் தயாரிப்பாளர் பானு.
ஒரு பக்கம் வியப்பு மறுபக்கம் தயக்கம். ஆனால் அந்தத் தயாரிப்பாளரோ தன் படம் பாதியளவு முடிந்துள்ளதாகவும் அதிலுள்ள வில்லன் வேடத்துக்கு இவரே பொருத்தமாக இருப்பார் என்றும் நம்பிக்கையுடன் கூறி, ஊக்கப்படுத்தவே, துணிவாக இறங்கி விட்டார் டாக்டர். அப்படி முதலில் நடித்த படம்தான். உனக்காக ஒரு கவிதை அந்தத் தயாரிப்பாளர் பானு.இதுதான் டாக்டர் சீனிவாசன் நடிகரான கதை. சீனிவாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை விரும்பி பார்ப்பவர். சினிமா மீது எப்போதும் தீராத காதல் கொண்டவர். உள்ளுக்குள் இருந்த மோகம் நிறைவேறிய மகிழ்ச்சி இவருக்கு.
முதல் படம் வெளிவராத நிலையில் அடுத்த படவாய்ப்பு நானே வருவேன். இது பாபு கணேஷ் இயக்கி நடிக்கும் படம். இதில் சீனிவாசன் சாமியார் வேடத்தில் வில்லனாக நடிக்கிறார். இது பேய், ஆவிகள் சம்பந்தப்பட்ட ஒரு திகில் படமாகும். இந்த வாய்ப்பு ஸ்டண்ட் மாஸ்டர் பஞ்ச் பரத் மூலம் கிடைத்திருக்கிறது. அவரது நட்பு மண்டபம் இன்றொரு படவாய்ப்பையும் தேடித் தந்துள்ளது. வழக்கறிஞர் தமிழ்ழகன் நாயகனாக நடிக்கும் இப்படத்திலும் டாக்டருக்கு வில்லன் வேடம்தான்.
அடுத்து பாலு ஆனந்த் இயக்கும் ஆனந்தத் தொல்லை மற்றும் பஞ்ச் பரத் இயக்குநராக அறிமுகமாகும். இந்திர சேனா படங்களிலும் வில்லத்தனம் செய்கிறார் டாக்டர்.
ரகுவரன் தன்னைக் கவர்ந்த வில்லன் நடிகர் என்கிற டாக்டர் சீனிவாசன் திரையுலகில் நானும் அவரைப் போல வில்லனாக நடித்துப் பாராட்டுகளைப் பெறுவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகிற டாக்டர் சீனிவாசன் நிஜத்தில் பெரிய ஹீரோ, மருத்துவமனை, டிராவல்ஸ் ரியல் எஸ்டேட் போன்ற பல நிறுவனங்களிள் நிர்வாக இயக்குநர் இவர்.
ஆபரேஷன் தியேட்டரில் நோயாளிகளைப் பார்க்கும் இவரை சினிமா தியேட்டரில் ரசிகர்கள் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை. டாக்டர் சீனிவாசனின் ஆபரேஷன் சினிமா சக்சஸ் ஆகட்டும்
Colombo Time
0 Response to "சினிமாவில் முத்திரை பதிக்கும் டாக்டர்"
Post a Comment