அஜித்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தை வைத்து ஏற்கனவே ‘வில்லன்’, ‘வரலாறு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இவற்றில் ‘வில்லன்’ சொதப்பினாலும் ‘வரலாறு’ கைகொடுத்தது, ஹிட் படமானது.



இவர்கள் மறுபடியும் இணைந்தால் மீண்டும் ஹிட் கொடுப்பார்கள் என்று கோடம்பாக்கத்தின் ஆரூடம் கணிக்கிறது. அஜித்தின் ஐம்பதாவது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினால் நன்றாக இருக்குமே... என்று அஜித்துக்கு வேண்டியவர்கள் எல்லோரும் அவரிடம் சொல்கிறார்களாம். இதனால் அஜித்தின் 50 படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் - அஜித் இணைந்து அந்தப் படத்தை வெற்றிப் படமாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் தயாநிதி அழகிரி என்கிற செய்தியும் காற்றுவாக்கில் உலாவருகிறது.

0 Response to "அஜித்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்"

Post a Comment