இயக்கத்தில் குதிக்கும் குண்டு கல்யாணம்
எவ்வளவு நாட்கள்தான் நடிச்சிட்டே இருக்கிறது... இயக்கத்தையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்திர வேண்டியதுதான் என்று வீரசபதத்துடன் புறப்பட்டுவிட்டார் குண்டு கல்யாணம்.
எவ்வளவு நாட்கள்தான் நடிச்சிட்டே இருக்கிறது...
இயக்கத்தையும் கொஞ்சம் தொட்டுப் பார்த்திர வேண்டியதுதான் என்று வீரசபதத்துடன் புறப்பட்டுவிட்டார் குண்டு கல்யாணம். கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துவிட்டவர். இப்போது இயக்குநாக விஸ்வரூபம் எடுக்கிறார். படத்தின் பெயர், ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’. இந்தப் படத்தை தயாரிப்பவர் தேவதாரு பிலிம்ஸ் தியேட்டர்ஸ் வி.சி.ரிஷிராஜ். இந்தப் படத்தில் குண்டு கல்யாணம், பாலு ஆனந்த், லொள்ளு மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த த்ரில்லர் படம். சுற்றுலா போகின்ற சிறுவர் சிறுமியர் அடங்கிய டீம் ஒன்று அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக் கொள்கிறது. அவர்கள் எப்படி சிக்குகிறார்கள்? எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதுதான் கதையாம்.
சிறுவர்களுக்காகவே எடுக்கப்படும் படம் இது என்பதால் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறார் குண்டு கல்யாணம்.படத்தில நடிக்கிறவங்க எல்லாரும் உங்களை மாதிரியே குண்டு குண்டா இருப்பாங்களா...?
Colombo Time
0 Response to "இயக்கத்தில் குதிக்கும் குண்டு கல்யாணம்"
Post a Comment