கந்தசாமி - ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்
ஏற்கனவே கந்தசாமி பார்த்து நான் நொந்தசாமியாக மாறியிருந்தாலும் கந்தசாமியை விமர்சிப்பவர்கள் அனைவரும் முட்டாளகள் பைத்தியக்காரர்கள் என தாணு குற்றம் சாட்டியதில் நான் படத்தைச் சரியாகப்பார்க்கவில்லையோ என்ற நினைப்பில் மனதில் மீண்டும் ஒரு தடவை பார்த்த போது சில விடயங்கள் பளிச்சிட்டன் அவற்றின் தொகுப்புத் தான் இது.

முதல் காட்சியிலையே ஒருவர் கந்தசாமி கோவிலில் வந்து அழுவார் அவரிடம் கோயில் ஐயர் கந்தசாமியிடம் முறையிட்டு ஒரு கோரிக்கையை எழுதி மரத்தில் கட்டச் சொல்வார். இந்தக் காட்சியின் மூலம் இயக்குனர் எந்த கோரிக்கை என்றாலும் ஒரு மூன்றாம் தரப்பினூடு எழுத்தின் மூலம் விடுத்தால் தான் அதுவே கடவுளுக்கே என்றாலும் ஒழுங்காகச் சேரும் என்ற அரசியலை விளக்குகின்றார்.

விக்ரம் கோழியாக வருவதற்கான காரணமாக என்னால் புரிந்துகொள்ளப்படுவது கோரிக்கை கட்டிய கோவில் முருகன் கோவில் முருகனின் கொடி சேவல்கொடி ஆகவே முருகனின் வழிவந்தவர் தான் என்பதைக் காட்டுகின்றார். அத்துடன் சேவல் கோழி வேடம் போட்டால் தண்டனையிலும் இருந்து தப்பலாம் என்ற சாணக்கியமும் இதில் இருக்கின்றது. எந்தக்கோட்டிலும் மிருகங்களுக்கு தண்டனை இல்லை.

அத்துடன் கதாநாயகியை உரிச்ச கோழியாக காட்டும்போது கதாநாயகனை அவருக்கு ஈடாக காட்டவே அவருக்கு அந்த வேடம், யாரும் பெண்ணினவாதிகள் சுசி கணேசன், ஸ்ரேயாவை மட்டும் உரிச்சுக்காட்டினார் ஆனால் விக்ரத்தை காட்டவில்லை என்ற பிரச்சனை எடுக்காமல் இருக்க அவரை உரிக்காத கோழி வேடத்தில் காட்டினார்.
இந்தியப்பொண்ணு தங்கம் பாடலில் ஸ்ரேயாவின் ஆட்டத்தை விக்ரம் இந்தியாவில் இருந்து பார்த்தது இணையத்தின் இன்றைய முன்னேற்றத்தைக் காட்டுகின்றது. தொழில்நுட்ப வசதிகளை சாதாரண பாமரனும் விளங்கவே இந்தப் பாடல் என்பது தொழில்நுட்பபுலிகளுக்கு மாத்திரம் விளங்கும்.
இந்தப் படம் சிறுவர்களுக்கான படம் என்பதை ஏனோ பெரியவர்கள் மறந்துவிடுகிறாகள் அதற்க்கு ஆதாரமாக "மியாவ் மியாவ் பூனை" பாடலில் ஒன், டூ, த்ரியை என்ன அழகாக "வன் நம் இதயம் ஒன்னு, டூ நம் உடல் தான் இரண்டு, த்ரி நாம் ஒண்ணாகச் சேர்ந்தால் ஆவோம் மூணு" என அழகாக சொல்கின்றார்கள் ஒன், டூ, த்ரி தெரியாத குழந்தைகள் இந்தப்பாடலில் ஒன், டூ, த்ரியை இலகுவாக கற்றுவிடுவார்கள்.
அதுமட்டுமல்ல பூனை மியாவ் மியாவ் என சத்தம் போடும் என்பதையும் எப்படி நடக்கும் எப்படி கைகளை வைத்திருக்கும் என்பதை ஸ்ரேயாவின் அங்க அசைவுகள் மூலம் குழந்தைகளுக்கு இலகுவாக புரியவைக்கின்றார்கள்.
ஆனால் "த்ரி நாம் ஒண்ணாகச் சேர்ந்தால் ஆவோம் மூணு" என்ற வரிகளில் தான் சாதாரண குழந்தைகள் குழம்பிப்போகின்றன ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்.
விக்ரத்தை அவரது அலுவலகத்தில் முதன்முறையாக சந்திக்கவரும் ஸ்ரேயா தன் ஆடைகளை தன் நகங்களால் கிழிப்பதன் மூலம் மஹாத்மா காந்தியின் ஒரு பெண்ணிற்க்கு அவரது நகங்களே ஆயுதம் என்ற எண்ணக்கருத்தை அப்படியே கடைப்பிடிக்கின்றார். இந்த இடத்தில் ஸ்ரேயாவை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே பார்க்கவேண்டும் என்பதை சொல்கின்றார்கள்.
மெக்சிகோ காட்சியில் வில்லனிடம் அகப்படும் விக்ரத்தை காக்க வருபவர் யார் என்றால் (சுசி)கணேசன், எப்படி வள்ளியை யானை வடிவம் எடுத்து வந்து முருகனிடம் சேர்ப்பாரோ அதேபோல் கணேசன் என்ற கந்தசாமியின் அண்ணன் தன் தம்பியை கெட்டவர்களிடம் இருந்து காக்கின்றார்.
விக்ரம் பணக்காரர்வீடுகளில் கறுப்புபணத்தைத் தேடும் போது ஏன் சுட்டியல் கொண்டுபோகின்றார் தெரியுமா? சுட்டியலுக்குப் பதிலாக ஒரு அலவாங்கோ, மண்வெட்டியோ கொண்டுபோயிருக்கலாம் தானே? சுட்டியை அங்கே வைத்த காரணம் சுட்டியல் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வைத்திருக்கும் ஒரு கருவி, சுத்தியைக் கையில் எடுத்ததன் மூலம் அந்த இடத்தில் ஒரு நீதிமானாக உருவகிக்கப்படுகின்றார்.
Colombo Time
0 Response to "கந்தசாமி - ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்"
Post a Comment