மாதவனின் புதிய படம்
எவனோ ஒருவன், யாவரும் நலம் மாதிரியான வித்தியாசமான சப்ஜெக்ட்டுகளில் மட்டுமே நடிப்பது என்பதில் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக இருக்கிறார் மாதவன்.தமிழில் அப்படியான கதைகள் அமைவது எப்போதாவதுதானே?
மாதவனுக்கு அதில் கவலையில்லை. இந்தியில் நல்ல வாய்ப்புகள் வருவதால் தமிழில் கண்டிப்பாக ஆறு மாதத்துக்கொரு படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. தவிர தனக்கான கதையை தா
னே உருவாக்க தீர்மானித்திருக்கிறார்.
னே உருவாக்க தீர்மானித்திருக்கிறார். அப்படி அவர் தனக்காக உருவாக்கிய படம் விரைவில் தமிழில் தொடங்கயிருக்கிறது. இதற்காக அவர் தேர்வு செய்திருக்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கியவர்.
படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் பத்திரிகையாளர்களை அழைத்து மாதவனே அறிவிக்க இருக்கிறாராம். அசத்துங்க பாஸ்.
Colombo Time
0 Response to "மாதவனின் புதிய படம்"
Post a Comment