துபாயில் திரைப்பட விழாவில் ‘அவள் பெயர் தமிழரசி’

மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய், நந்தகி இணைந்து நடித்திருக்கும் படம் ‘அவள் பெயர் தமிழரசி’. இந்தப் படத்தை மொசெர்பேர் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்தப் படம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 9 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை, துபாயில் நடக்கவிருக்கும் துபாய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல்இல் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது. உலகெங்கும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சிறந்த படங்கள் இந்த திரைப்பட விழாவில் பங்குபெற உள்ளன. இந்தப் படத்தின் இசை அடுத்த மாதம் சென்னையில் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.

0 Response to "துபாயில் திரைப்பட விழாவில் ‘அவள் பெயர் தமிழரசி’"

Post a Comment