தனுஷின் தனி வழி

ஒரே இயக்குன‌ரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அ‌ஜித் மட்டுமல்ல கமல், ர‌ஜினியின் பழக்கமும் அதுதான்.


இந்த விதிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் தனுஷ். செல்வராகவனின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இது மாலை நேரத்து மயக்கம், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் நான்காவது படம்.



வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஆடுகளம் அவருடனான இரண்டாவது படம். குட்டி படம் ஜவஹர் இயக்கத்தில் இரண்டாவது. இவையெல்லாம் மிகக் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்படும் படங்கள் என்பதும், வெற்றிமாறனின் முதலிரண்டு படங்களிலும் தனுஷே நடித்திருக்கிறார் என்பதும் ஆச்ச‌ரியமான விஷயம்.



மித்ரன் ஜவஹ‌ரின் முதல் படம் யாரடி நீ மோகினியில் தனுஷ் ஹீரோ. இரண்டாவது படம் குட்டியிலும் அவரே ஹீரோ. அத்துடன் முடியவில்லை. ஜவஹ‌ரின் இயக்கத்தில் மேலுமொரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். குட்டி படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்தப் படம் தீர்மானமாகிவிட்டது. பாலா‌ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.



தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ‌‌ரீமேக் இது என்கிறார்கள். என்றாலும் இந்த‌த் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

0 Response to "தனுஷின் தனி வழி"

Post a Comment