நடிகை ரகசிய திருமணம்

நடிகை சா‌க்‌சியை நினைவிருக்கிறதா? நினைவில்லாதவர்கள் தொலைக்காட்சியில் மானஸ்தன், வாஞ்சிநாதன் படங்களை ஒளிபரப்பும் போது கவனமாக பாருங்கள். இந்தப் படங்களில் முறையே சரத், விஜயகாந்துடன் டூயட் பாடுகிறவர்தான் சா‌க்‌சி.



தமிழைவிட தெலுங்கில் சா‌க்‌சி பிரபலம். அதிலும், தான் நடிக்க வேண்டிய படத்தில் தனக்குப் பதில் தன்னைப் போலவே இருக்கும் தனது தங்கையை நடிக்க வைத்து மாட்டிக் கொண்ட பிறகு தென்னிந்திய திரையுலகுக்கே இவர் மிக பிரபலம்.
கடந்த பல வருடங்களாக திரையுலகிலிருந்து ஒதுங்கி இருந்த சா‌க்‌சி மீண்டும் பத்தி‌ரிகை செய்தியாகியிருக்கிறார். இந்தமுறை தனக்குப் பதில் வேறு யாரையும் டூப் போடவில்லை சா‌க்‌சி. அதிரடியாக தனது காதலனை திருமணம் செய்திருக்கிறார். நடிக்கும் போதே சா‌க்‌சிக்கும் அமெ‌ரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் காதல் இருந்துள்ளது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெ‌ரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரகசியமாக காதலரை மணந்து கொண்ட சா‌க்‌சி அவருடன் அமெ‌ரி‌க்காவுக்கு குடும்பம் நடத்த ரகசிய பயணம் மேற்கொண்டிருக்கிறார். தற்போது அவர் அமெ‌ரிக்காவில் இருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

0 Response to "நடிகை ரகசிய திருமணம்"

Post a Comment