விக்னேஷை இயக்கும் சஞ்சய்ராம்
காலா காலமாக கஷ்டப்பட்டு நடித்துத்தான் பார்க்கிறார் நடிகர் விக்னேஷ். ஆனால் எந்தப் படமும் ஹிட் கொடுத்ததில்லை இவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘குடியரசு’ படமும் இப்படித்தான் வந்த வேகத்தில் ஏப்பம் விட்டு சுருண்டு கொண்டது.இப்போது ஒரு ஹிட் படம் கொடுத்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறார் இவர். காரணம் சஞ்சய்ராம். ‘வீரமும் ஈரமும்’, ‘பூவா தலையா
’ என அதிரடி படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அதிரடிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு காமெடி படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில் தான் விக்னேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார். ‘கௌரவர்கள்’ என்று படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை காட்சிகளை யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சஞ்சய்ராம்.

Colombo Time
0 Response to "விக்னேஷை இயக்கும் சஞ்சய்ராம்"
Post a Comment