செல்வராகவன் கொடுத்த ஆச்சரியம்
கதை எழுதி முடிக்கவே ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் செல்வராகவனின் சமீபத்திய சுறுசுறுப்புதான் டாக் ஆஃப் தி டவுன்.ஆயிரத்தில் ஒருவன் இன்னும் வெளிவராத நிலையில் தனுஷையும், ஆண்ட்ரியாவையும் வைத்து இது மாலை நேரத்து மயக்கம்
படத்தை தொடங்கினார் செல்வா. ஆண்ட்ரியாவுடன் டிஸ்கொதேயில் சண்டை ஏற்பட்ட பிறகு மயக்கம் ஷூட்டிங் மேலே நகரவில்லை. அவரை மாற்றிவிட்டு வேறு நடிகையை போடப் போகிறார் என்பது நெருக்கமானவர்கள் கசிய விடும் செய்தி. இந்நிலையில் விக்ரமையும், சுவாதியையும் வைத்து லடாக்கில் தனது புதிய படத்தை தொடங்கியிருக்கிறாராம். யாருக்கும் செய்தி சொல்லாமல் லடாக்கிற்கு எஸ்கேப்பாகியிருக்கிறது மொத்த டீமும். முதல் ஷெட்யூல் முடிந்த பிறகுதான் படத்துக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பது பற்றி பத்திரிகைகளிடம் பேசுவாராம் செல்வா. சரி, விக்ரம் மோகன் நடராஜன் தயாரிப்பில் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படம் என்னாச்சு? அந்தப் படம் தொடங்குவதற்குள் பாதி படத்தை முடிச்சிடுவேன் என்று உறுதி அளித்திருக்கிறாராம் செல்வராகவன். ம்... யாராவது சுசுறுப்பு டீ போட்டுக் கொடுத்தார்களா? இந்த போடு போடுகிறார்.
Colombo Time
0 Response to "செல்வராகவன் கொடுத்த ஆச்சரியம்"
Post a Comment